ஜூலை 27முதல் கஞ்ச டான் ஆக விஜய்சேதுபதி களத்தில் குதிக்கும் ஜூங்கா
CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
வி.எஸ்.பி.புரொடக்ஷன்ஸ் சார்பில் விஜய் சேதுபதி தயாரித்துள்ள படம் `ஜுங்கா'.
விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக சாயிஷாவும், முக்கிய கதாபாத்திரங்களில் மடோனா செபாஸ்டியன், சுரேஷ் மேனன், ராதா ரவி, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், நேகா சர்மா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
ஜூங்கா கஞ்ச டான் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. அங்கு சென்று தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிப் பெற்றாரா? இல்லையா? என்பது தான் ஜுங்காவின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆனால் ஆக்சன் கலந்த காமெடி படம் என்று சொல்லலாம்' என்கிறார் இயக்குனர் கோகுல்.
படம் வருகிற ஜூலை 27-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது
...









