நடிகைகள்
`மாரி-2′ படத்தில் சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கும் வரலட்சுமி..!
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா’ என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருந்த நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும், முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும் நடிக்கின்றனர். தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்க...
சன்னி லியோன் நடிக்கும் ‘வீரமாதேவி’
பாலிவுட்டில் பல படங்களில் கலக்கி வரும் சன்னி லியோன், தற்போது நடிக்க இருக்கும் தமிழ் படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது.
பாலிவுட்டில் கலக்கி வரும் சன்னி லியோன் தமிழில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சரித்திர பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கின்றார்.
இந்த படத்தில் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் அசத்தவுள்ளனர். இவர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியாகி இருக்கிறது.
முன்னதாக, இப்படத்தின் தலைப்பை கண்டு பிடிப்பதற்காக நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் தலைப்பில் கடைசி எழுத்தை மட்டும் வெளிட்டார்கள். இதற்கு ரசிகர்கள் பல கோணத...
காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் ஸ்ருதிஹாசனுக்கும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலுக்கும் நெருக்கமான நட்பு மலர்ந்தது. இருவரும் ஒன்றாக ஒருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. இந்நிலையில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
சில மாதங்களுக்கு முன் தந்தை கமல்ஹாசனுக்கு மைக்கேல் கோர்சலை அறிமுகப்படுத்திய ஸ்ருதி, சமீபத்தில் தாய் சரிகாவுக்கும் தனது காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். அதேபோல் ஆதவ் கண்ணாதாசனின் திருமணத்தில் மைக்கேல் கோர்சலுடன் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தனது காதலருடன் நெருக்கமாக கட்டி...
பாஜக தலைகீழாக நின்றாலும், குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜகவால் கால் வைக்கவே முடியாது – குஷ்பு சீண்டல்
சமூக வலைதளமான டுவிட்டரில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்துள்ளது. இவர்களின் காரசார கருத்து பதிவிற்கு பதில் கருத்து பதிவிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய தமிழிசை கூறிய கருத்தை வைத்து, சண்டையை துவக்கினார் குஷ்பு.
குஷ்பு : மக்கள் அரசியலில் சேர்வது அவர்களின் கொள்கைள் மற்றும் விருப்பத்திற்காக மட்டுமே. நீங்கள் தான் உங்கள் கட்சியில் சேரும்படி கெஞ்சிக் கொண்டு இருக்கிறீர்கள்.
தமிழிசை : குஷ்பு அரசியலில் இணைந்தீர்களா? கட்சிகளுக்கு தாவினீர்களா? திமுக.,வில் இருந்து விலகி காங்.,கில் இணைந்தது மிகச் சிறந்த கொள்கையாலா என அனைவருக்கும் தெரியும்.
குஷ்பு : திமுக.,விலிருந்து விலகுவதற்கு 6 மாதத்திற்கு முன்பிருந்து இருகட்சிகளுடனும் எனக்கு நல்லுறவு இருந்தது. உங்கள் மூளையை சரிசெய்து க...
ஒரு தொகுதியில் வென்றதன் மூலம் டிடிவி தினகரனை பெரிய அரசியல் தலைவராக தூக்கி வைத்துக் கொண்டாதீர்கள்- குஷ்பு காட்டம்
ஒரு தொகுதியில் வென்றதன் மூலம் டிடிவி தினகரனை பெரிய அரசியல் தலைவராக தூக்கி வைத்துக் கொண்டாதீர்கள் அவர் ஜெயலலிதாவுக்கு மாற்று அல்ல, 2019 தேர்தலில் எத்தனை தொகுதியை வெல்கிறார் பார்ப்போம் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு பேசியதாவது:
“ஜெயலலிதாவை பல முறை பார்த்திருக்கிறேன். அவருக்கு எதிரான அரசியல் நடத்தி இருக்கிறேன். ஆனாலும் அவர் ஒரு எடுத்துக்காட்டான தலைவர். அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவர் அளவுக்கு தினகரன் வர முடியாது. அவர் சாதாரணமான நபர் தான். பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்ற வெற்றி அது. இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்று மக்கள் விரும்புகிறார்கள், ஓபிஎஸ், ஈபிஎஸ்தான் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக துரோகம் செய்துள்ளார்கள் என்ற கோபம் மக்களுக்கு இருந்திருக்கும்.
ஜெயலலிதாவின் தொகுதி அது. ஜெயலலி...
‘ஐயா’முதல் அறம் வரை சினிமாவில் 14 வருடங்களை நிறைவு செய்த நயன்தாரா..!
சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. ஹரி இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதால் ராசியான நடிகை ஆனார். ஆரம்பத்தில் ஒருசில தமிழ் படங்களில் நடித்த இவர், குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்தார்.
‘சந்திரமுகி’ படத்தில் ரஜினி ஜோடி ஆனார். குசேலன் படத்திலும் ரஜினியுடன் நடித்தார். தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் முக்கிய இடம் பிடித்தார். தென்னக படங்களில் பேசப்படும் இடத்தை பிடித்தார்.
இதற்கிடையே சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்தார். என்றாலும், அதில் இருந்து மீண்டு வந்து நடிப்பில் முழு கவனம் செலுத்தினார். தனது திரையுலக மார்க்கெட்டை நிலையாக வைத்துக் கொண்டார்.
தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘அறம்’ ...
காஜல் அகர்வாலின் மேல் ஆடை இல்லாத கவர்ச்சி படம்..!
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் நடித்தார். அஜீத்துடன் ‘விவேகம்‘ படத்தில் நடித்தார்.
இப்போது ‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘எம்.எல்.ஏ.’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். உபேந்திர மாதவ் இயக்கும் இந்த படத்தில் கல்யாண்ராம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், காஜல் அகர்வால் மேல் ஆடை அணியாத புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்றாலும், இது இப்போது எடுத்த படம் இல்லை. ஏற்கனவே ஒரு பத்திரிகைக்கு மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்தார். என்று செய்தி வெளியானது.
ஆனால் அதை காஜல் மறுத்தார். ஆனால் அந்த பத்திரிகை தரப்பில் அது உண்மைதான் என்று கூறப்பட்டது. இப்போது வெளியாகி இருப்பது அந்த புகைப்...
செக்ஸ் என்பதும் ஓர் உணர்வு, பேசத் தயங்க வேண்டிய விஷயமல்ல – வித்யாபாலன் அதிரடி
செக்ஸ் என்பது மனித உணர்வு. அது பேசத் தயங்கக்கூடிய விஷயம் அல்ல’ என்கிறார் அதிரடியாக.
‘‘திருமணம் என்ற அமைப்புக்குள்தான் செக்ஸ் இடம்பெற வேண்டும், அது இனப்பெருக்கத்துக்கானது என்பதே இந்திய கலாசாரமாக உள்ளது. அதுவே அந்தரங்க இன்பத்தைக் கெடுத்துவிடுகிறது’’ என்பது வித்யாவின் வாதம்.
அவரே தொடர்ந்து, ‘‘உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக நாம் இருந்தாலும், இன்னும் செக்ஸ் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்குத் தயங்குவது வேடிக்கையானது. செக்ஸ் என்பதற்கு நாம் போதுமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது திருமண உறவில்தான் நடக்க வேண்டும், வாரிசுகளை உருவாக்க மட்டுமே தேவைப்படும் விஷயம் என்று எண்ணுகிறோம். ஆனால் பாலியல் உணர்வு தரும் இன்பம், அந்தரங்க நெருக்கத்தின் மகிழ்ச்சி, அதன் சுவாரசியம் எல்லாவற்றையும் தவறவிட்டுவிடுகிறோம்’’ என்று படபடவென்று விளாசுகிறார்.
செக்ஸ் பற்றிய நமது மனோபாவத்தை மாற்றிக்கொள்வத...
சாதி உணர்வை காயப்படுத்தியதாக சல்மான்கான், ஷில்பா ஷெட்டி மீது போலீசில் புகார்
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த ‘டைகர் ஜிந்தா ஹை’ படம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. முன்னதாக இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை காயப்படுத்தும் விதத்தில் அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அந்த சமுதாய மக்கள் மும்பை பாந்திராவில் உள்ள சல்மான்கானின் வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் சல்மான்கான் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இதேபோல், நடிகை ஷில்பா ஷெட்டியும் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போது, சாதி உணர்வை காயப்படுத்தும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது.
ஆகையால், சல்மான்கான் மற்றும் ஷில்பா ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை அந்த...

