ப்ரீடம் பட விமர்சனம் 3/5
ப்ரீடம் பட விமர்சனம் 3/5
உலக அரங்கையே உலுக்கிய ஒரு சம்பவம் 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதுதான். இந்த சம்பவத்திற்கு பின்னும் முன்னும் இலங்கையில் இருந்து சிங்கள அரச பயங்கரவாத்த்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் 43 பேர் வேலூர் கோட்டையில் விசாரணை கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் போலீஸ் கொடுமைகளில் இருந்து விடுதலையாக சுரங்கம் தோண்டி தப்பித்தனர் இவர்களில் 21 பேர் ஒரு சில வாரங்களில் மீண்டும் போலீசிடம் சிக்கினார்கள்.
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வலியும் வேதனையும் சோகத்தையும் உள்ளடக்கி உருவாகி இருக்கும் படம் தான் ச்சிக்குமாரின் ப்ரீடம்.
கதைப்படி இலங்கையில் இருந்து பலரும் அகதிகளாக இந்தியா வருகிறார்க...









