செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

பறந்து போ கோடங்கி விமர்சனம் 4/5

 

 

பறந்து போ விமர்சனம் 4/5

 

கற்றது தமிழ் இயக்குனர் ராம் படம் என்றாலே ஒரு சோகமும் உளவியல் ரீதியில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தி ரசிகனை அழவைத்தே அனுப்பி வந்தார் இவ்ளோ நாளா….

ஆனா இந்த பறந்து போ… சத்தியமா இயக்குனர் ராம் இப்படி ஒரு படத்தை தருவார்னு நினைக்கவே இல்லை… அவ்ளோ நேர்த்தியா சின்ன சின்ன விஷயங்களில் கூட ஒளிந்திருக்கும் அவ்ளோ பெரிய விஷயங்கள்…

ஆரம்பமே ரொம்ப ஓவரா இருக்கா… ஒரு முறை இந்த படத்த போய் பாருங்க இதவிட பேசுவீங்க…

கதை ரொம்ப சின்னது காலம் காலமா இருக்குறதுதான்…

அப்பா அம்மாகிட்ட சண்டை போட்டுகிட்டு மகன் மலை ஏறுவதும் அவனைதேடி அப்பாவும் அம்மாவும் மலையேறி சமாதானம் பேசுறதும் புராண காலத்துலயே இருக்கே அப்படி ஒரு பையனுக்கும் அவனோட அப்பா அம்மாவுக்கும் இடையில நடக்குற அழகான உணர்வு கடத்தல்தான் பறந்து போ.

வீட்டை எதிர்த்து காதல் கல்யாணம் செய்து கொண்ட சிவா-கிரேஸ் தம்பதி. இவர்களுக்கு ஒரு குட்டிப்பையன் மிதுல்.

நகர வாழ்க்கையில் வாங்கிய டூ வீலருக்கு தவணை கட்ட முடியாமல் ஓடிக்கொண்டிருக்கிற சிவா. சேலை வியாபாரம் செய்ய வேறு ஊரில் கடை போட்ட கிரேஸ். அப்பாவும் அம்மாவும் இல்லாததால் சின்னப்பையன் மிதுல் எப்போதும் வீட்டில் தனியாகவே இருப்பான். பூட்டிய கிரில் கேட்டுக்கு உள்ளே சிறைப்பறவைபோல…

அப்படி அடைபட்டு கிடக்கும் மிதுல் ஒரு நாள் அப்பா சிவாவுடன் பைக்கில் வெளியே செல்கிறான்… அந்த நேரம்பார்த்து கடன்காரன் வர அவனிடம் இருந்து தப்பிக்க போகும்போது வழியில் தன் பள்ளித்தோழி அஞ்சலியை சந்திக்கிறார் சிவா.

அங்கே அஞ்சலியின் மகனும் சிவாவின் மகனும் நண்பர்களாக அந்த வாழ்க்கைமுறை மிதுலுக்கு பிடித்துபோக அந்த வாழ்க்கையிலேயே இருக்க அப்பா சிவாவையும் அம்மா கிரேசையும் கட்டாயப்படுத்துகிறான் மிதுல்.

கடைசியில் வென்றது சிவாவா? அவர் மகனா? என்பதை சொல்கிறது பறந்து போ கதை.

படம் தொடங்குவதற்கு முன் காமெடி பன்றேன்னு பேசிப் பேசியே கொல்லுவானே இந்த சிவான்னு நினைச்சித்தான் உக்காருவீங்க… ஆனா சிவாவின் நடிப்பு வாழ்க்கையில் இந்த பறந்து போ மட்டும் தான் அவருக்கு உருப்படியான படம். அளவா பேசி…  நடிக்காம இயல்பா வந்து போயிருக்கார். அஞ்சலிய சந்திக்கிற அந்த குளத்தங்கரை சிவாவின் ஹைலைட் சீன்.

பாசமான அம்மாவாக கிரேஸ்… எல்லா பெண்களுக்குமே இருக்கிற ஏக்கங்களை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். நல்ல சாய்ஸ்.

அஞ்சலி சீன் வந்த்தும் தான் படமே பறக்க ஆரம்பிக்கிறது. அவ்ளோ அழகு… கொஞ்ச காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அஞ்சலிக்காக ரிப்பீட்டு ஆடியன்ஸ் உண்டு. அந்த குளத்தங்கரை காட்சி… ஆபாசம் இல்லாத அஞ்சலியின் கிராமத்து கிளாமர்.

ஒரு காட்சியில் வந்தாலும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் தலையில் கொட்டு வாங்கி நம்மை ரசிக்க வைக்கிறார்.

அஞ்சலி கணவராக வரும் மலையாள நடிகர் அஜுவர்கிஸ் ஒரு சில வசனம் பேசினாலும் தியேட்டர் அதிர சிரிப்பலை எழும்.

கதையின் நாயகனான மிதுல் சரியான தேர்வு… சிகரெட் பழக்கத்தை கைவிட அப்பா சிவாவுக்கு எதிராக மிதுல் செய்கிற அத்தனை சுட்டித்தன்ங்களும் அப்ளாஸ் அள்ளும். குறிப்பாக அந்த மரம் ஏறும் காட்சிகளும், மலை ஏறும் காட்சிகளும்…

ராம் மனசுக்குள் இவ்ளோ காமெடி இருக்கான்னு கேக்கிற மாதிரி காட்சிக்கு காட்சி அவ்ளோ சிரிப்பு… இயக்குனர் ராம் எத்தனையோ படங்களை தந்திருந்தாலும் பறந்து போ… மனசை லகுவாக்கி பறக்கிற உணர்வை தருவதால் இது இப்போதைக்கு பெஸ்ட். ஏன்னா இதுக்கு பின்னாடி இன்னும் என்னென்ன படங்களை ராம் தருவார்னு தெரியாதில்லையா?

யுவனின், சந்தோஷின் இசையும் பாடல்களும் பல இடங்களில் வந்தாலும் கதையோடு வருவதால் ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் பறந்து போ ஜாலியாக பார்த்து ரசனையான வாழ்க்கை எங்கே உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் படம்.

 

கோடங்கி 4/5

 

 

365 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன