செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

பீனிக்ஸ் விமர்சனம் 3/5

 

 

பீனிக்ஸ் விமர்சனம் 3/5

 

அண்ணனை கொலை செய்த எம்எல்ஏ சம்பத்தை பட்டப்பகலில் படு பயங்கரமாக கொலை செய்கிறார் சூர்யா சேதுபதி. அதனால் அவரை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள்.

கொலையான எம் எல் ஏ சம்பத்தின் மனைவியான வரலட்சுமி சரத்குமார் தனது ஆட்களை சிறைக்கு அனுப்பி சூர்யா விஜய் சேதுபதியை தீர்த்துக்கட்டச் சொல்கிறார்.

சின்னப்பையன் தானே என நினைத்து சிறைக்குள் சூர்யாவை கொல்ல முயலும் அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்து தன்னை காத்துக் கொள்கிறார் சூர்யா.

இதனால் ஷாக் ஆன வரலட்சுமி தரப்பு,  வட இந்தியாவில் இருந்து அடியாட்களை வரவழைத்து சூர்யாவின் கதையை முடிக்க முயற்சிக்கிறது. அதிலும் சூர்யா தப்பிக்கிறார்.

இப்படி வருகிற ரவுடிகளை எல்லாம் பந்தாடுகிற இந்த சூர்யா யார்?

அவருக்கும் எம் எல் ஏ சம்பத்துக்கும் அப்படி என்ன தீராத பகை என்பதை அதிரடி ஆக்சன் மூலமாக விறுவிறுப்பாக  சொல்ல முயற்சிக்கிறது பீனிக்ஸ் படம்.

அறிமுக பட்த்திலேயே அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு தான் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ என்பதை நிரூபிக்க சூர்யா போராடுகிறார். இயக்குனர் அனல் அரசு ஏற்கனவே ஸ்டண்ட் மாஸ்டராகவே இருப்பதால் சூர்யாவுக்கு ஏற்றார்போல சண்டைக்காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார். ஆனாலும் சில காட்சிகள் ஓவர் டோசாக திகட்டுகிறது.

குருவி தலையில் பனங்காய் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

படம் முழுக்க அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் தான் நிறைந்து காணப்படுகிறது. இடையில் ஒரு கதை.

ஹீரோவாக சூர்யா இருந்தாலும் அவருக்கு போட்டியாக வேல்ராஜின் ஒளிப்பதிவும் கூடவே ஸ்டண்ட் காட்டி அசத்துகிறது. சாம் சி.எஸ் இசையும் பின்னணி இசையும் ஆக்‌ஷன் பட்த்திற்கு மிக நன்றாகவே பலம் சேர்க்கிறது.

மொத்தத்தில் ஆக்‌ஷன் விரும்பும் ரசிகர்களுக்கு பீனிக்ஸ் நல்ல விருந்து…

 

கோடங்கி 3/5

 

 

 

100 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன