சித்ராவின் கதாபாத்திரத்துக்கு ரீபிளேஸ் முல்லையாக காவியா!
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை காவியா. தொகுப்பாளினியாக நுழைந்து தற்போது நடிப்பில் பட்டய கிளப்பும் அறிவுமணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதற்கு காரணம் பாரதி கண்ணாமாவில் இவருக்கு கிடைத்த பாசிட்டிவ் மற்றும் பொறுமைசாலியான பாத்திரமே முக்கிய காரணம். நாயகனின் தங்கையாக நடித்தவர் அறிவுமணி. கண்ணம்மாவுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருப்பதாலேயே சீரியல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
இந்நிலையில் காவியாவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் பேசும்படியான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சித்ராவின் கதாபாத்திரத்துக்கு ரீபிளேஸ் அறிவுமணி தானாம். மிகவும் பொறுமையும், அமைதிமாக இருக்கும் அறிவுமணிக்கு முல்லை கேரக்டர் நன்றாக பொருந்தும் என கூறுகின்றனர் ரசிகர்கள். பாண்டியன் ஸ்ட...









