நடிகைகள்
அழுத்தமான அரசியல் படம் நோட்டா
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சன்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாயகன் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ் நாயகி சன்சனா மற்றும் பிக்பாஸ் புகழ் யாஷிகா’, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
...
எனக்காக அமலாபாலிடம் கதை சொன்ன ராட்சசன் விஷ்ணுவிஷால் – இயக்குனர் ராம்குமார்
ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி வெற்றிப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அக்டோபர் 5ஆம் தேதி டரைடெண்ட் ஆர்ட்ஸ் மிக பிரமாண்டமாக இந்த படத்தை வெளியிடுகிறது. படத்தை பற்றி படக்குழுவினர் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்கும் முடிவில் நாங்கள் இருந்தோம். ராட்சசன் படத்தின் கதையை கேட்டு, இந்த படத்தில் நாங்களும் உங்களோடு சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டோம். டில்லி பாபு சார் அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார். நாங்கள் பண விஷயத்தில் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் அதை பொறுத்துக் கொண்டார் டில்லி பாபு சார்....
சண்டிமுனி படத்தில் நட்ராஜ்-மனீஷாயாதவ்-யோகிபாபு கூட்டணி
சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு "சண்டிமுனி " என்று பெயரிட்டுள்ளனர்..
இந்த படத்தில் கதா நாயகனாக நட்ராஜ் நடிக்கிறார்...
கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார்.
மற்றும் மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர்,அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா.எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் முனி 3 காஞ்சனா2 படத்தில் உதவியாளராக பணியாற்றினார். இவர் இயக்கும் முதல் படம் இது.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 27 ம் தேதி பழனியில் துவங்குகிறது. தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்...
சூர்யாவுக்காக எழுதப்பட்டது சண்டக்கோழி 2 கதை – விஷால்
சண்டக்கோழி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது சண்டக்கோழி படம் எனக்காக எழுதப்பட்டது இல்லை என்று விஷால் கூறியுள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சண்டக்கோழி 2’.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது பேசிய விஷால் கூறுகையில், இப்படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பாக, சண்டக்கோழி படத்தைப் பற்றி கூற விரும்புகிறேன். சண்டக்கோழி படத்தின் கதை எனக்காக எழுதப்பட்டது கிடையாது. முதலில் சூர்யாவுக்காகத் தான் இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக கதையைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு, லிங்குசாமியை சந்தித்து இப்படத்தில் நான் நடிக்கிறேன் என்றேன். சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்றார். இதையடுத்த...
தாமரையின் ரெக்கார்டு ரெய்டு…! சிக்கிய பிரபலத்தின் சீக்ரெட்..!! அதிர்ச்சியில் நடிகை ஷாக்..!!!
தாமரையின் ரெக்கார்டு ரெய்டு...!
சிக்கிய பிரபலத்தின் சீக்ரெட்..!!
அதிர்ச்சியில் நடிகை ஷாக்..!!!
செய்தியின் தலைப்பை பார்த்ததும் ஏதோ சினிமா செய்திபோல என்று நினைத்தால் இன்னும் நீங்கள் பச்சபுள்ளையாகவே இருக்கிறீர்கள் என்று அர்த்தம்...
அதேநேரம், இதில் ஏதோ ஒரு அரசியல் கலந்திருக்கிறது என்று யோசித்திருந்தால் சபாஷ்... போட்டுக் கொள்ளுங்கள்...
சமீபத்திய தமிழக நிகழ்வுகளில் அடிக்கடி பேசப்படுபவை வருமானவரித்துறை ரெய்டு... அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகளை மட்டுமே குறிவைத்த ரெய்டு சமீப காலமாக அதிகாரிகள் வீடுகளுக்கும் பரவியிருக்கிறது.
ஆட்சியாளர்களுக்கு சாதமாக நடந்து கொள்ளாமல்போனால் இதுபோன்ற ரெய்டு பயமுறுத்தல்கள் எல்லா ஆட்சியிலும் வழக்கமான ஒன்றுதான்.
அதிலும் கடந்த 4 ஆண்டுகளில் வருமானவரித்துறை இத்தகைய ரெய்டுகளிலேயே பல மாநிலங்களில் ஆட்சிமாற்றங்கள் நடந்திருக்கிறது என்றாலும் அது மிகையில்லை...
விஷயம் ரெ...
முதன்முறையாக பிரபுதேவாவின் தேவி 2 படத்தில் நடிக்கும் நந்திதா
`அட்டகத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நந்திதா. தொடர்ந்து `எதிர்நீச்சல்', `முண்டாசுபட்டி' படங்களில் நடித்தவர் சமீபத்தில் வெளியான `அசுரவதம்' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து இருந்தார்.
முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நந்திதா, முதன்முறையாக பிரபுதேவா நடிக்கும் தேவி 2 படத்தில் நடிக்க உள்ளார். நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் நந்திதா மகிழ்ச்சியாக இருக்கிறார்.
தேவி படத்தின் முதல் பாகத்தில் பிரபுதேவா ஜோடியாக தமன்னா இந்த படத்திலும் தொடர்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நித்யா மேனன் மற்றும் ஏமி ஜாக்சனுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் `தேவி 2' படத்தின் படப்பிடிப்பு மொரீசியசில் தொடங்கியதாக பிரபுதேவா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பிரபுதேவாவுடன் மூத்த நடிகை கோவை ...
காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’
CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.
இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். அவருடன் கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - ஸ்ரீதர், படத்தொகுப்பு - ஆர்.கே.செல்வா, தயாரிப்பு - பா.ரஞ்சித், எழுத்து, இயக்கம் - மாரி செல்வராஜ். ராமிடம் இணை இயக்குனராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார். இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதை தொகுப்பு, ‘மறக்க நினைக்கிறேன்’ தொடர் ஆகியவற்றை எழுதியவர்.
படம் பற்றி கூறிய இயக்குனர்...
“இது முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடுக்க...
ஜெ.,வின் வாழ்க்கை வரலாற்றைப் படம் ‘தி அயர்ன் லேடி’
வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கியவர் பிரியதர்ஷினி. இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு இன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார். இப்படத்திற்கு ‘தி அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என்று படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியில் சாக்ஷி அகர்வால்
மாடல் அழகியான சாக்ஷி அகர்வால், ‘யோகன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து திருட்டி விசிடி, கககபோ, படங்களில் நடித்த இவர் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் மலையாளத்தில் ஓராயிரம் கினாக்கள் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகையான இவர், தற்போது அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மேன்மை கொண்ட, உத்வேகம் தரக்கூடிய சிறந்த மனிதர். அவரை சந்தித்தது ஆசிர்வாதமாக என் வாழ்க்கை முழுவதும் மனதில் வைத்திருப்பேன். பெரிய ரசிகையாக உணர்ந்த தருணம் இது’ என்று அஜித்...

