‘சுயம்பு’வுக்காக குதிரையேற்றம் கற்கும் கதாநாயகி சம்யுக்தா!
நிகில் நடிப்பில் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிக்சல் ஸ்டுடியோவின் பான் இந்தியா படமான 'சுயம்பு'வுக்காக குதிரை யேற்றம் கற்கும் பயணத்தைத் தொடங்கியுள்ளர் கதாநாயகி சம்யுக்தா!
பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகி வரும் தனது இருபதாவது படமான 'சுயம்பு'வில் புகழ்பெற்ற போர்வீரனாக நடிக்க ஆயுதங்கள், தற்காப்பு கலைகள் மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றில் தீவிர பயிற்சி எடுத்தார் நடிகர் நிகில். நம்பமுடியாத போர் காட்சிகளைக் கொண்ட இந்தப் படத்தில் அவரின் சண்டைக் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை பிரம்மிக்க வைக்கும்.
அவருடன் நடிகை சம்யுக்தாவும் சில சண்டைக்காட்சிகளில் நடிக்கவுள்ளார். அதற்காக குதிரையேற்றம் கற்கும் பயணத்தைத் தற்போது தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “எனது அடுத்த படமான 'சுயம்பு'வுக்காக நான் குதிரை சவாரி கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தப் புதுப் பயணம் உற்சாகத்தைக...









