“சில நொடிகளில்” – திரைப்பட விமர்சனம் மதிப்பீடு 3/5
லண்டனில் வசிக்கும் மருத்துவர் ரிச்சர்ட்ரிஷி. அன்பான மனைவி புன்னகைப்பூ கீதா. கிளி போல் மனைவி இருந்தாலும் குரங்கு போல் துணைவி தேடும் ஆண்கள் வரிசையில் சேரும் ரிச்சர்ட்ரிஷி, மேலும் அழகான கிளியாக இருக்கும் யாஷிகா ஆனந்த்திடம் அடைக்கலம் ஆகிறார். திடீரென யாஷிகாஆனந்த் மரணிக்கிறார். அதனால் பதட்டமடைந்து அந்த மரணத்தை மறைக்கிறார் ரிச்சர்ட்ரிஷி. ஆனால் அவர் நினைப்புக்கு மாறாக நடக்கிறது. அதனால் பல சிக்கல்கள்.
அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதுதான் படம்.
லண்டனில் இருக்கும் மருத்துவர் என்பதற்கேற்ப அழகாக இருக்கிறார் ரிச்சர்ட்ரிஷி.அவர் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகளை விடப் பதட்டத்துடனும் பயத்துடனும் இருக்கும் காட்சிகள் அதிகம். அவருடைய உணர்வுகளைப் பார்ப்போருக்கும் ஏற்பட வைத்திருக்கிறார்.
மனைவியாக நடித்திருக்கும் புன்னகைப்பூ கீதாவின் பாத்திர வடிவமைப்பு பலமானது. கல்லானாலும...









