சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் வென்ற ‘பச்சை விளக்கு’ விரைவில் ஒடிடி தளத்தில் ரிலீஸ்!
சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் வென்ற ‘பச்சை விளக்கு’! - விரைவில் ஒடிடி தளத்தில் ரிலீஸ்
காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுவதோடு, அதன் மூலம் அவர்களது குடும்பத்தாரை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்ததோடு, இந்தியாவின் முதல் சாலை விதி திரைப்படம் என்ற பெருமையோடு வெளியான படம் ‘பச்சை விளக்கு’.
டாக்டர்.மாறன் இயக்கி நடித்த இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றதோடு பத்திரிக்கையாளர்களிடமும் வெகுவாக பாராட்டு பெற்றது. "மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம்" என்று பல பத்திரிக்கைகள் பாராட்டிய இப்படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு பல விருதுகளை வென்றுள்ளது.
பூடான் நாட்டில் உள்ள பரோ என்ற இடத்தில் நடைபெற்ற ‘ட்ரக்’ என்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்ற விருதைப் பெற்றுள்ளது...








