நடிகைகள்
அனுஷ்காவின் அந்த 3 நிமிடங்கள்
அனுஷ்காவின்
அந்த 3 நிமிடங்கள்
அனுஷ்கா 3 நிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய ஒரு காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
இயக்குனர் ராஜமௌலி இப்போது , இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்து வரும் 'ஆர் ஆர் ஆர்' படத்தில், மூன்று நிமிடம் மட்டுமே வர கூடிய, சிறப்பு தோற்றத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சி இடைவேளைக்கு முன் வருகிறதாம். மூன்று நிமிட காட்சி என்றாலும் பரவாயில்லை என ராஜமௌலிக்காக நடிக்க ஒப்புக்கொண்டாராம் அனுஷ்கா.
ராஜமவுலியின் பிரமாண்டமான படமான பாகுபலியில் அனுஷ்கா உட்பட அதில் நடித்த அனைவருக்கும் பெரும் பேரும் புகழும் கிடைத்தது....
டாப்சியின் கேம் ஓவர்..!
மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் புதுப்படத்தில் டாப்சி தான் ஹீரோயின்.
Y not ஸ்டுடியோ தயாரிக்கிறது.
இதே கதை இந்தி தெலுங்கு மொழிகளில் படமாகிறது.
இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்குகிறார்
டாப்சி இதில் மாற்றுத்திறனாளி வேஷத்தில் நடிக்கிறார்.
படத்துக்கு கேம் ஓவர் என பேர் வைத்திருக்கிறார்கள். இதுவும் ஒரு விளையாட்டு அரசியல் தொடர்பான படம் என்கிறார்கள்....
பேய் இருக்கிறதா ‘அகோரி’ பட விழாவில் பாக்யராஜ் ருசிகர தகவல்..!
ராஜ்குமார் இயக்கத்தில் ஷயாஜி ஷிண்டே நடித்துள்ள ‘அகோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது:-
‘தமிழக மக்களை நினைத்தால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்த கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு, சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி எண்ணியே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி.பாலா மொழி மாற்றுப் படங்களுக்கான வசனகர்த்தா என்று சொன்னார்கள். ‘புலி முருகன்’ மற்றும் ‘லூசிபர்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி இருப்பதாகச் சொன்னார்கள்.
நான் ஒரே ஒரு டப்பிங் படத்திற்கு மட்டும்தான் வசனம் எழுதினேன். அங்கு சென்றவுடன் தான் அதில் உள்ள சவால்களும், சங்கடங்களும் புரிந்தன. அதன் பிறகுதான் டப்ப...
டூ பீஸ் உடையில் படுத்தபடி ரசிகர்களை சூடேற்றும் உடுக்கை பட நாயகி…!
டூ பீஸ் உடையில் படுத்தபடி ரசிகர்களை சூடேற்றும் உடுக்கை பட நாயகி...!
ரேணிகுண்டா, மீகாமன், அசுரவதம் படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். இவர் அடுத்து நடிக்கும் படம் உடுக்கை. தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கும் கிரைம் திரில்லராக இந்த படம் உருவாகிறது.
படம் பற்றி இயக்குனர் எம்.ஆர்.பாலமித்ரன் கூறும்போது, ‘தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பல நன்மைகளை கொடுத்தாலும் சில ஆபத்துகளும் நமக்கு ஏற்பட்டுள்ளன. இதை புதுமையான அன்பு, அதிர்ச்சி, அதிரடி, திகில் கலந்த கதையாக உருவாக்கி இருக்கிறோம். இப்படத்தில் சஞ்சனா சிங் மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர இருக்கிறார் என்கிறார்.
படத்தில் மட்டுமல்லாமல் சமீபத்தில் தனது சமூகவலைதள பக்கத்தில் கடற்கரை மணலில் மிக செக்சியாக டூ பீஸ் பிகினி உடை அணிந்தபடி கிளாமர் ஸ்டில் எடுத்து பதிவிட்டிருந்தார். இந்த படங்களை பார்த்தவ...
காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டும் கோமாளி ஆன ஜெயம் ரவி..!
ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்தி வந்த ரொம்ப ஆர்வத்துடன் மீண்டும் முழு நீள காமெடி படத்தில் நடிக்கிறார். கோமாளி என்று பெயரிடப்பட்ட படத்தில்
ஜெயம் ரவி 9 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். , 90களின் பின்னணியில் அவரின் தோற்றம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
யோகிபாபு ஒரு வழக்கமான நகைச்சுவை நடிகராக இல்லாமல், ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க இருப்பார். கே.எஸ்.ரவிகுமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்..
காஜல் அகர்வாலுக்கு கோயில் கட்டுகிறார்களாம். ஒரு பாடல் காட்சியில்... ஏற்கனவே குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் இருந்த தமிழ் சினிமா இப்போது காஜல் அகர்வாலுக்கு கற்பனையில் கோயில் கட்டுகிறதாம்.
இந்த படத்தை வேல்ஸ் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
பைசா நோட்டு’ பாடல் அதன் இசைக்காகவவும், தயாரிப்புக்காகவும் நிச்சயம் பேசப்படும். இது ஒரு கற்பனை பாடல...
திருநங்கையாக நடிக்க இருக்கிறார் ‘சார்லி சாப்ளின் 2’ ஹீரோயின்..!
திருநங்கையாக நடிக்க இருக்கிறார் ‘சார்லி சாப்ளின் 2’ ஹீரோயின்
‘சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் குத்தாட்டம் போட்டவர் அதா சர்மா. தமிழில் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கு, இந்திப் படங்களில் பிசியானவர் தமிழ் சினிமா பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இந்நிலையில் அவர் ஆணாக இருந்து திருநங்கையாக மாறுகிற கதாபாத்திரத்தில் இந்தியில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்திற்கு ‘மேன் டு மேன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அபிர் சென்குப்தா இயக்கும் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது...
நான் ஒரு கமல்… சச்சும்மா வடிவேலு” -பேரழகி ஷில்பா மஞ்சுநாத் கலாட்டா..!
“நான் கமல்.. சச்சும்மா வடிவேலு” -பேரழகி ஷில்பா மஞ்சுநாத் கலாட்டா..!
கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ '. 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
நாயகி ஷில்பா மஞ்சுநாத் இந்தப்படத்தில் நடித்த தனது அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்..
காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என இரண்டு படங்களில் நடித்து இருந்தாலும் தமிழில் முதன்முதல் ஒப்பந்தமான படம் பேரழகி ஐ.எஸ்.ஓ தான். தமிழில் அறிமுகமான முதல் பட...
ஜோதிகாவுக்காக சூர்யா எடுத்த ஜாக்பாட்..!
சூர்யாவின் 2 டி என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் 11 வது படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டது. குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜாக்பாட்” இப்படத்தில் ஜோதிகா, ரேவதியுடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விஷால் சந்திரசேகர் இசையில், . ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில் முழு ஷூட்டிங்கும் 35 நாட்களில் முடிந்துவிட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜோதிகாவின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.
குலேபகாவலி படமும் முழு நகைச்சுவை கதையாக இருந்தது. அதிலும் ரேவதி வில்லியாக நடித்து கலகலப்பூட்டினார்.
இப்போது அவரோடு ஜோதிகாவும் இணைந்து நடித்துள்ளார்கள்.
காமெடி நட்சத்திர பட்டாளங்களும் இருப்பதால் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகள் நிறைந்த படமா...


