இன்று முதல் 3 நாட்களுக்கு புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா!
புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா தொடங்க உள்ள நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு ரசிகர்கள் திரைப்பட விழாவில், படம் பார்க்க இலவசமாக அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்குது. இந்த சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களை பொதுமக்கள், ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்.
சர்வதேச புகழ்பெற்ற பிரசன்ன விதனகே திரைப்பட உருவாக்கத்துக்கான சிறப்பு வகுப்பையும் நடத்துகிறார்.
இது தொடர்பாக புதுச்சேரி திரை இயக்கம் செயலர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க திரை இயக்க நிர்வாகி ராமச்சந்திரன் ஆகியோர் பேசிய போது, “புதுச்சேரியில் அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நாளை மாலை சர்வதேசத் திரைப்பட விழா 2024 துவங்குகிறது. 3 நாட்கள் நடக்கும் இந்நிகழ்வில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்க...







