ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

நடிகைகள்

மீண்டும் இணையும் “ஜோ” ஜோடி!

மீண்டும் இணையும் “ஜோ” ஜோடி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *“ஆண்களின் பிரச்சினைகளைப் பேசும் முதல் படம்”* கதாநாயகன் ரியோ ராஜ் , தனது சமீபத்திய திரைப்படமான “ஜோ”வின் அதிரடி வெற்றிக்குப் பிறகு, களமிறங்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் இன்று சென்னையில் நடைபெற்றது . இயக்குனர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, ஜனரஞ்சகமான வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த “ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்” நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , புதுமுக இயக்குனர் “பிளாக்‌ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார்கள். பிளாக்‌ஷிப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில், “ஜோ” திரைப்படத்தின் வெற்றி ஜோடியான ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைகிறார்கள். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு, ...
‘ஸ்ரீகாந்த்’ படத்தில் துணிச்சல் அதிகம் என்பதால் நடித்தேன் – ஜோதிகா

‘ஸ்ரீகாந்த்’ படத்தில் துணிச்சல் அதிகம் என்பதால் நடித்தேன் – ஜோதிகா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *ஜோதிகா நடிக்கும் 'ஸ்ரீகாந்த்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!* பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் 'ஸ்ரீகாந்த்' எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்ரீகாந்த்' எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்ஷி, சாஸெட் -பரம்பரா மற்றும் வேத் சர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்த...
கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ ரிலீசுக்கு ரெடி!

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ ரிலீசுக்கு ரெடி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *கவின் நடிக்கும் 'ஸ்டார்' பட பத்திரிகையாளர் சந்திப்பு!* ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின், இணை தயாரிப்பாளர் தீபக், இயக்குநர் இளன், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், நாயகன் கவின், நடிகைகள் அதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன், நடிகர்கள் 'ராஜா ராணி' பாண்டியன், தீப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் இளன் பேசுகையில், ' எனக்கு' மிகவும...
“மாற்றம்” சமூக நலப்பணிகள் அமைப்பு மூலம் டிராக்ட்டர்கள் வழங்கிய லாரன்ஸ்!

“மாற்றம்” சமூக நலப்பணிகள் அமைப்பு மூலம் டிராக்ட்டர்கள் வழங்கிய லாரன்ஸ்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பில் “மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம் !! தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை தரும் மாற்றம் செய்ல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது . இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்களும் இணைந்து செயல்படவுள்ளார். இவர்களுடன் கலக்கப்போவது பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா அவர்கள் இணைந்து செயல்படவுள்ளனர். சேவையே கடவுள் எனும் அறக்கட்டளை அமைப்பின் பெயரில் மாற்றம் செயல்பாடுகள் இன்று முதல் ஆரம்பமானது. இந்த அறக்கட்டளை மூலம், தமிழக மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் தன்னார்வலர்கள் மூலம் செய்து தரப்படவுள்ளது. இன்று...
விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியீடு!

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியீடு!* *ரீல் குட் பிலிம்ஸின் 'எலக்சன்' மே 17 ஆம் தேதி வெளியாகிறது!* 'உறியடி', 'உறியடி 2', 'ஃபைட் கிளப்' என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌ 'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்...
லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்’ மே 10 அன்று ரிலீஸ்!

லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்’ மே 10 அன்று ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *'மௌனகுரு', 'மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்' மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது!* திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். அவர் இயக்கத்தில் வெளியான 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் ஈர்த்தது. அவர் இயக்குநராக அறிமுகமான ‘மௌன குரு’ படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது. அவரது இரண்டாவது வெளியீடான ‘மகாமுனி’ 30 சர்வதேச விருதுகளுடன் 24 விருதுகளை ‘சிறந்த இயக்குநரு’க்காக வென்றது. இந்த படத்தில் இருந்து பல வ...
“ரத்னம்” ஜொலிக்குமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

“ரத்னம்” ஜொலிக்குமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, Uncategorized, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  நடிகர்கள் : விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார், கும்கி அஸ்வின், துளசி இசை : தேவி ஸ்ரீ பிரசாத் ஒளிப்பதிவு : எம்.சுகுமார் இயக்கம் : ஹரி இயக்குனர் ஹரி – நடிகர் விஷால் கூட்டணி. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ரத்னம் படத்தில் இணைந்துள்ளது. பரபர ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் கதைப்படி. விஷாலின் அம்மா சிறுவயதிலேயே தற்கொலை செய்து இறந்துவிடுகிறார். ஒரு நாள் சமுத்திரக்கனியை கொலை செய்ய வருபவரை கொன்றுவிட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படும் விஷால் பெரியவன் ஆகி வெளியே வருகிறார். தற்போது எம்எல்ஏ வாக மாறியுள்ள சமுத்திரக்கனி உடன் இருந்து ரவுடியிஸம் செய்து வருகிறார். கொள்கைக்காக கொலை செய்யும் தொழில் விஷாலுக்கு. ஒருபுறம் ஆந்திராவில் தனது தம்பிகளுடன் சேர்ந்து மிகப் பெர...
“கள்வன்” கதைநாயகன் பாரதிராஜாவுக்கு தங்கசங்கிலி வழங்கிய தயாரிப்பாளர்!

“கள்வன்” கதைநாயகன் பாரதிராஜாவுக்கு தங்கசங்கிலி வழங்கிய தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *’கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!* தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘கள்வன்’. இந்தப் படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் வாரத்திலும் குழந்தைகளுடன் குடும்பமாகப் இந்தப் படத்தைத் திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். ஊடகங்களும் படம் குறித்து பாராட்டி விமர்சனம் வெளியிட்டுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக படத்தில் தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ‘இயக்குநர் இமயம்’, ...
‘டீன்ஸ்’ டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு

‘டீன்ஸ்’ டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் 'டீன்ஸ்' டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு* *திரையரங்கில் நான்கு காட்சிகளாக இசை வெளியிடப்பட்டு புதிய உலக சாதனை, டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்* *பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு பாராட்டு தெரிவித்த 'டீன்ஸ்' படக்குழு* உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை...
கள்வன் மனசை திருடுவானா? விமர்சனம் 3/5

கள்வன் மனசை திருடுவானா? விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  இயக்கம்: பி வி ஷங்கர் நடிகர்கள்: ஜி வி பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா, தீனா ஒளிப்பதிவு: பி வி ஷங்கர் படத்தொகுப்பு: சான் லோகேஷ் இசை: ஜி வி பிரகாஷ்குமார் பின்னணி இசை: ரெவா தயாரிப்பாளர்: டில்லி பாபு தயாரிப்பு: ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி கதைப்படி, சத்தியமங்கலம் அருகேயுள்ள ஒரு காடு சார்ந்த கிராமத்தில் கதை நகர்கிறது. ஜி வி பிரகாஷ் மற்றும் தீனா இருவரும் கிராமத்தில் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வாழ்ந்து வருகின்றனர். திருடிய பணத்தில் குடித்து கும்மாளம் போட்டு வருகின்றனர் இருவரும். பக்கத்து கிராமத்தில் திருட போன இடத்தில் இவானாவை சந்திக்கிறார் ஜி வி பிரகாஷ். கண்டதும் இவானா மீது காதல் கொள்கிறார் ஜி வி பிரகாஷ். தொடர்ந்து இவானா பின்னால் சுற்றித் திரிகிறார். இவானாவின் மனதில் இடம் பிடிப்பதற்காக, முதியோர் இல்லத்தில் உறவினர் யாரும் இல்லாத பாரதிராஜாவை தத்தெட...