பேரனின் ஒரு வயது பிறந்த நாள் கொண்டாட்டம்… சரத்-ராதிகா தம்பதி உற்சாகம்
தமிழ் நடிகைகளில் அறிமுகம் ஆன நாளில் இருந்து தனக்கென தனி பாணியை வைத்திருப்பவர் ராதிகா சரத்குமார்.
பல தனிப்பட்ட விமர்சனங்களை எல்லாம் தாண்டி இன்றைக்கு திரைத்துறையில் அதிலும் சின்னத்திரையில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஒரு பக்கம் பிசியான நடிகை இன்னொரு பக்கம் சீரியல் தயாரிப்பு என தொழிலில் கொடி கட்டி பறந்தாலும் குடும்ப சந்தோஷங்களிலும் ராதிகா ராதிகாதான்.
அவரது மகள் ரேயானுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.
நடிகை நிலையை தாண்டி அம்மா நிலைக்கு உயர்ந்து பின்னர் அதிலும் அடுத்த உயர்வாக பாட்டி புரோமோஷன் அடைந்ததை ராதிகா ரொம்பவே சந்தோஷமாக பதிவு செய்தார்.
இப்போது அந்த குழந்தைக்கு ஒரு வயது முடிந்துள்ளது. இதை ரொமபவே உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார்கள் ராதிகா சரத்குமார் தம்பதி.
பாட்டி ராதிகா மடியிலும்,
தாத்தா சரத்குமார் குமார் கழுத்திலும் என பிறந்த நாள் குழந்த...









