ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா
நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான பின்பு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.
‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது சினிமா பிரவேசத்தை தொடங்கினார். இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
இந்தநிலையில் வித்யா பாலன் நடித்துள்ள ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் கதையாகும்.
வித்தியாபாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும் இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த மொழ...









