மதராஸி கோடங்கி விமர்சனம் 3/5
மதராஸி கோடங்கி விமர்சனம் 3/5
வழக்கமான சிவகார்த்திகேயன் படமாகவும் இல்லாமல் இயக்குனர் முருகதாஸ் படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் ஒரு ஜானரை பிடித்து கதை சொல்லி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது மதராஸி.
கதைப்படி….
தமிழ்நாட்டுக்குள் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கும் பயங்கரவாத கும்பல் ஒன்று, மிகப்பெரிய அளவில் துப்பாக்கிகளை விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது. இதை தடுக்கும் முயற்சியில் பிஜுமேனன் தலைமையிலான தேசிய புலனாய்வு அமைப்பு ஈடுபடுகிறது. இதற்கிடையே, தான் நேசித்த காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக சுற்றிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை சந்திக்கும் பிஜுமேனன் அந்த பயங்கரவாத கும்பலின் திட்டத்தை முறியடிக்க சிவகார்த்திகேயனை பயன்படுத்த முடிவு செய்கிறார்.
இந்த நிலையில், ...









