வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

நடிகைகள்

திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா!

திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா! சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படம் நேரடியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தனர். இந்தப் படத்தில் நடிக்க சமந்தா ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ரூ.3 கோடி வாங்கிய சமந்தா, சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும், தான் நடிக்கும் முதல் புராண படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக இளம் ...
தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு!

தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு! இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அமீர் கான், மாதவன், அக்‌ஷய் குமார், ஆலியா பட், கத்ரீனா கைப் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகை நக்மாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாராம் நக்மா. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....
ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்!

ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்! தமிழ்த் திரையுலகில் வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி உள்பட பல்வேறு பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக உயர்ந்துள்ளனர். தற்போது நடிகர் சதீஷும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார். இவர் தற்போது, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கவுள்ளார். இது அவர் இயக்கும் முதல் படமாகும். பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் சென்னையிலேயே நடைபெற உள்ளது. இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்கவுள்ளார். பிரவீன் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, அஜீஷ் அசோக் இசையமைக்க உள்ளனர். இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்....
தனுஷுடன் மோதும் நயன்தாரா!

தனுஷுடன் மோதும் நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தனுஷுடன் மோதும் நயன்தாரா! தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் கர்ணன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். தமிழில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளார். மேலும் இப்படத்தை கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மலையாள படமான ‘நிழல்’ அதே தினத்தில் வெளியாக உள்ளதால், இந்த இரண்டு படங்களுக்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிழல் படத்தில் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்துள்ளார். பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். திரில்லர் கதையம்ச...
நடிகர் அஜித்-க்கு ரசிகரின் செல்ஃபி தொந்தரவு!

நடிகர் அஜித்-க்கு ரசிகரின் செல்ஃபி தொந்தரவு!

HOME SLIDER, politics, நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் அஜித் வாக்களிக்க சென்றபோது, ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுத்து தொந்தரவு செய்ததால், அவரது செல்போனை பிடுங்கி எச்சரித்துவிட்டு, பின்னர் செல்போனை அவரிடமே தந்துவிட்டார். நடிகர் அஜித் திருவான்மியூரில் உள்ள சென்னை பெருநகர் தொடக்கப்பள்ளியில் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவிருந்த நிலையில் அதற்கு முன்பாகவே சரியாக 6:30 மணிக்கு அவர் வாக்குச்சாவடிக்கு வந்தார். அங்கு பொதுமக்களுடன் வரிசையில் நின்ற அஜித் - ஷாலினி ஆகியோருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் முற்பட்டனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் கூடத் தொடங்கியது இதைத் தவிர்க்கும் வகையில் அங்கிருந்த போலீசார் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி ஆகியோரை 6.40 மணி அளவில் வாக்கு சாவடி மையத்திற்குள் அழைத்து வந்தனர். இருந்தபோதிலும் அவருடன் சில ரசிகர்கள் உள்ளே நுழைந்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் தொடர்...
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் விஷாலின் ‘மதகஜராஜா’!

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் விஷாலின் ‘மதகஜராஜா’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் விஷாலின் ‘மதகஜராஜா’! விஷால் நடிப்பில் உருவான படம் ‘மதகஜராஜா’. சுந்தர் சி இயக்கிய இப்படம் கடந்த 2013-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது. இருப்பினும் பண பிரச்சினையால் இப்படம் ரிலீசாகாமல் முடங்கியே உள்ளது. இப்படத்தை வெளியிட விஷால் தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், எதுவும் பலனளிக்காததால், இப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதகஜராஜா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், சோனு சூட் வில்லனாகவும் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி ...
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் திரிஷா படம்!

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் திரிஷா படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் திரிஷா படம்! திரிஷா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை திருஞானம் இயக்கி இருக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கடந்த வருடம் மார்ச் மாதமே இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் இப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. சுமார் ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்த இப்படத்தை தற்போது நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று ‘பரமபதம் விளையாட்டு’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்....
கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்!

கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்! தமிழக அதிரடிப் படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா,  கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விஜயலட்சுமி தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தபடி நிற்கிறார் விஜயலட்சுமி. மது ஒழிப்பு மற்றும் தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை பற்றிய போராட்டங்களை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகி உள்ளது. போராட்டங்களை முன்நின்று நடத்தும் போராளி கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்து இர...
மாதவனின் ‘ராக்கெட்ரி’ பட டிரெய்லரை பார்த்து கண்ணீர் விட்ட சமந்தா!

மாதவனின் ‘ராக்கெட்ரி’ பட டிரெய்லரை பார்த்து கண்ணீர் விட்ட சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
மாதவனின் ‘ராக்கெட்ரி’ பட டிரெய்லரை பார்த்து கண்ணீர் விட்ட சமந்தா! நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரெய்லரை பார்த்த பிரபலங்கள் பலரும் மாதவனை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்த டிரெய்லரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா, “நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இந்த டிரெய்லரை பார்த்துவிட்டேன். அப்போதே எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. மாதவன் சார் நீங்கள் ...
வாரிசு நடிகருடன் நடிகை அனு இம்மானுவேல் காதல்!

வாரிசு நடிகருடன் நடிகை அனு இம்மானுவேல் காதல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
வாரிசு நடிகருடன் நடிகை அனு இம்மானுவேல் காதல்! நடிகை அனு இம்மானுவேல், தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக சர்வானந்த், சித்தார்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் மகாசமுத்திரம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை அனு இம்மானுவேலும், தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் ரகசியமாக காதலித்து வருவது அம்பலமாகி உள்ளது. சமீபத்தில் அனு இம்மானுவேல் பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவரை வாழ்த்தி அல்லு சிரிஷ் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாக உள்ளனர். அதில் அனுவை சைக்கோ என்றும் செல்லமாக அழைத்து உள்ளார் அல்லு சிரிஷ். இந்த வீடியோ அவர்கள் காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள். நடிகர் அல்லு சிரிஷ் தெலுங்கில் இளம் கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். தமி...