‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி
ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்திருக்கிறது.
ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்.ஆரண்ய காண்டம், பிகில் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பும், ஜெயம் படத்தில் வில்லனாக மிரட்டிய டோலிவுட் நடிகர் கோபிசந்தும் அண்ணாத்த படத்தின் வில்லன்களாக நடிக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கு கெடுபிடிகளால், 10 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் 14ம் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம், நடிகர் ரஜினிகாந்த்...








