சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

நடிகைகள்

விஜய்யுடன் நடிக்கும் போது ரசிகையாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

விஜய்யுடன் நடிக்கும் போது ரசிகையாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது மீண்டும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாகி இருக்கிறார். இதுபற்றி கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி.... “மீண்டும் விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை என்னுடன் நடிக்கும் நடிகராக எப்போதும் பார்க்க முடியாது. அவருடன் நடிக்கும் போது எனக்கு பிடித்த நடிகருடன் இருக்கும் ரசிகையாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன். நான் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மகாநதி’யில் நடித்திருக்கிறேன். நாக் அஸ்வின் இதை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தொடங்கியபோது மேக்கப்போட மட்டும் மூன்றரை மணி நேரம் ஆனது. பின்னர் அது பழகிப்போனது. சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவ்வளவு பெரிய நடிகை பாத்திரத்தில் நடிக்க பயமாக இருந்தது. இப்போது இந்த படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. சாவித்ரி...
நயன்தாராவுக்கு ஏற்றது போல் கேரக்டரை மாற்றினேன் – இமைக்கா நொடிகள் இயக்குநர்

நயன்தாராவுக்கு ஏற்றது போல் கேரக்டரை மாற்றினேன் – இமைக்கா நொடிகள் இயக்குநர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘டிமாண்டி காலனி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இவர் தற்போது நயன்தாராவை வைத்து இமைக்கா நொடிகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து அளித்துள்ள பேட்டியில், “முதலில் இந்தக் கதையை எழுதும்போது இரண்டு ஹீரோக்கள் கதையாகத்தான் எழுதினேன். அதன்பிறகுதான் ஒரு கேரக்டரை மட்டும் நயன்தாராவுக்கு ஏற்றது போல் மாற்றினேன். ஆனால், நயன்தாரா இந்தக் கதையில் நடிப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. காரணம், கதைப்படி துப்பறியும் நிபுணராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. எனவே, துப்பாக்கியைக் கையாள்வதிலும், வில்லன்களைத் துரத்திப் பிடிப்பதிலும் சில சிக்கல்கள் இருந்தன. அந்தக் காட...
நடிகை பிரியா வாரியர் மீது போலீசில் அடுத்தடுத்து புகார்..!

நடிகை பிரியா வாரியர் மீது போலீசில் அடுத்தடுத்து புகார்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
‘ஒரு அடார் லவ்' படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் தங்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகப் படத்தின் இயக்குநர், நடிகை பிரியா வாரியர் மீது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றவர் இளம் நடிகை பிரியா வாரியர். அந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பட ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் நாளுக்கு நாள் பிரியா வாரியரின் புகழ் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதே சமயம் இந்தப் பாடல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ஒரு வரி மத உணர்வைப் புண்படுத்துவதாக உள்ளதாக ஐதராபாத் போலீச...
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா

ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான பின்பு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது சினிமா பிரவேசத்தை தொடங்கினார். இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தநிலையில் வித்யா பாலன் நடித்துள்ள ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் கதையாகும். வித்தியாபாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும் இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த மொழ...
தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘மகாபிரபு, ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த கூட்டணியில் வரலட்சுமி சரத்குமார் இணைந்திருக்கிறார். அப்பாவுடன் இணைந்து நடிப்பது மிகவும் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றும் வரலட்சுமி சரத்குமார் கூறியிருக்கிறார். எஸ்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம் ‘பா...
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் -கமலை சீண்டுகிறாரா கவுதமி..!

அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் -கமலை சீண்டுகிறாரா கவுதமி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
ஆண்டாள் கோவிலுக்கு நடிகை கவுதமி  வந்தார். அங்கு திருப்பாவை பாடல்களைப்பாடி ஆண்டாளை தரிசனம் செய்தார். பின்னர் அவர்  கூறியதாவது:- ஆண்டாளின் பக்தையான நான் அவரை தரிசிக்க இங்கு வந்தேன். புற்றுநோயைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால் உயிர் வாழ இயலும். மன தைரியம் மிகவும் அவசியம். இதற்கு நான்தான் சாட்சி. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகம் வர வேண்டும். அரசுகள் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். நடிகர்கள் முதலில் அவர்களது கட்சியின் பெயர், கொள்கைகள், திட்டங்களை அறிவிக்கட்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் நம்பிக்கை வரும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக...
அங்கம் தெரியும் கவர்ச்சி போஸ் கொடுத்தது ஏன் ரகுல் பிரீத்திசிங்

அங்கம் தெரியும் கவர்ச்சி போஸ் கொடுத்தது ஏன் ரகுல் பிரீத்திசிங்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத்திசிங். சமீபத்தில் இவருடைய கவர்ச்சி படம் ‘மேக்ஸிம்’ ஆங்கில பத்திரிகை அட்டையில் வெளியானது. இது தென்இந்திய படஉலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து ரகுல்பிரீத்திசிங் அளித்த பேட்டி... “மேக்ஸிம் ஆங்கில புத்தக அட்டை படத்தில் இடம் பெறும் வாய்ப்பு யாருக்கும் எளிதாக கிடைத்து விடாது. அந்த இதழுக்கு நான் கவர்ச்சி போஸ் கொடுத்துவிட்டதாக தென்இந்தியாவில் தான் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தி படஉலகில் இது பெரிய வி‌ஷயமே இல்லை. ‘அய்யாரி’ இந்தி படத்தில் நான் நடித்திருப்பதால் தான் இந்த வாய்ப்பு தேடி வந்தது. இந்தி சினிமாவில் நடித்து வரும் தீபிகா படுகோனே, ராதிகா ஆப்தே, பிரியங்கா சோப்ரா உள்பட பல நடிகைகள் இந்த பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார்கள். நடிகைகள் தங்கள் உடலை நேர்த்தியாக வைத்து இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த இ...
கமி‌ஷனர் அலுவலகத்தில் ஜோதிகா மீது புகார்

கமி‌ஷனர் அலுவலகத்தில் ஜோதிகா மீது புகார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘நாச்சியார்’. இதில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஜோதிகா பேசும் வசனம் ஒன்று ஏற்கனவே சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், இன்று மற்றொரு வசனம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் பிரசார அணி தலைவர் காளிகுமார், சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- பாலா இயக்கியுள்ள நாச்சியார் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நடிகை ஜோதிகா ஒரு காட்சியில் பேசும் வசனத்தில் கோவிலாக இருந்தாலும், குப்பை மேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான் என்று கூறுகிறார். இந்த வசனம் இந்து ஆலயங்களை அவமதிக்கும் விதத்திலும், இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய வசனத்தை உடன...
கோயிலும் குப்பைமேடும் ஒன்னுதான் நாச்சியார் வசனத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜோதிகா..!

கோயிலும் குப்பைமேடும் ஒன்னுதான் நாச்சியார் வசனத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜோதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தொடர்ந்து இயக்குனர் பாலா சர்ச்சைக்குறிய வசனங்களையே நாச்சியார் படத்தில் வெளியிட்டு வருகிறார். நாச்சியார் நடத்தின் முதல் டீசரில் ஜோதிகா ஆபாசமான வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்திய நிலையில் இன்று வெளியான அடுத்த டீசரில் அனைத்து மதங்களையும் கேவலப்படுத்தும் விதத்தில் வசனம் வைத்திருக்கிறார். இதையும் ஜோதிகாவே பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.   கோயிலாயிருந்தாலும், குப்பை மேடா இருந்தாலும் எங்களுக்கு ஒன்னுதான் என்று போலீஸ் அதிகாரி வேஷத்தில் ஜோதிகா பேசுவது போல காட்சி வைத்திருக்கிறார்.   அனைத்து மத கோயில்களும் குப்பை மேடு என்கிறாரா இயக்குனர் பாலா... அதே போல மத வழிபாட்டுத்த்லங்களையும் கேலியாக சித்தரிக்கிறார். இப்படி சர்ச்சைகளில் படத்தை ஓடவைக்க பாலா முயற்சிக்கிறாரா...     https://youtu.be/5UwA1DkfPA4...
படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்த சன்னிலியோன் குதிரை சவாரி..!

படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்த சன்னிலியோன் குதிரை சவாரி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது தமிழில் நடிக்கும் வீரமா தேவி படத்தின் படப்பிடிப்பில் படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி உள்ளார். வடிவுடையான் அடுத்து இயக்கும் படம் ‘வீரமா தேவி’ இதில் இந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கிறார். சரித்திர கதையாக உருவாகும் இது பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்தில் சன்னி லியோன் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், ‘வீரமா தேவி’ படப்பிடிப்பு தொடங்கியது. இதில் சன்னிலியோன் குதிரை சவாரி செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. அவர் குதிரை மீது சிறிதும் பயமில்லாமல் உட்கார்ந்து வேகமாக வலம் வந்த காட்சி படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்தது....