ஓட்டப்பாதையில் நுழைந்து போட்டியாளர்களுக்கு இணையாக ஓடிய நாய்!
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள உட்டா (UTAH) -வில் பள்ளிச் சிறுமிகளுக்கான தொடர் ஓட்டம் நடைபெற்றது. 200 மீட்டர் தொலைவிலான தொடர் ஓட்டம் நடைபெற்றபோது சிறுமிகள் எல்லைக் கோட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஓட்டப்பாதையில் நுழைந்த நாய் ஒன்று போட்டியாளர்களுக்கு இணையாக ஓடியது.
பின்னர் அனைவரையும் முந்திச் சென்ற நாய், கடைசியாக எல்லைக் கோட்டை முதல் ஆளாக கடந்து போட்டியிலும் வெற்றி பெற்றது. போட்டியை வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களும், நாய் போட்டியாளர்களை முந்திச் செல்வைதக் கண்டு ஆரவாரக் குரல் எழுப்பினர்.
லோகன் உயர்நிலைப் பள்ளியில் இந்த தொடர் ஓட்டம் நடைபெற்றது. போட்டியில் முன்னணியில் சென்று கொண்டிருந்த கேட் ஹேவுட் (Kate Heywood) எல்லைக் கோட்டை அடைவதற்காக வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்.
திடீ...
ஏ.எச்.காஷிஃபின் அல்லா பாடலுக்கு வரவேற்பு
ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி, மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான பதினெட்டாம்படி உள்ளிட்ட வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.எச்.காஷிப். காஷிஃப்பின் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஃபாத்திமாவின் மகனான காஷிஃபுக்கு இசைத்திறமை ஓங்கி இருப்பதில் வியப்பில்லை. சினிமா பாடல்கள் மட்டும் அல்லாமல் தனி இசை பாடல்களிலும் காஷிஃப் தன் திறமையால் கொடி கட்டி பறக்கிறார். இவர் இசை உருவாக்கத்தில் காதலர் தினத்துக்காக உருவாக்கி வெளியிட்ட ஆல்பம் லட்சக்கணக்கான ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. அடுத்து ரெண்டகம், ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துவரும் காஷிஃப் இந்த கொரோனா காலத்தில் ரசிகர்களை மகிழ்விக்க தன் புதிய ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார். புனித ரமலான் பண்டிகையொட்டி அல்லா யா அல்லா...
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!
கொரோனா தடுப்பூசி கடந்த 16-ந் தேதி முதல் நாடுமுழுவதும் போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.
இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் கொரோனா கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
...
கோவை, தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சி துவங்கியதும், அதில் பங்கேற்றவர்களின் கருத்துகளை ஸ்டாலின் கேட்டார்.பதில் சொல்ல முடியாதுஅப்போது எழுந்த பெண் ஒருவர், திமுக கட்சியை மாட்டி கொண்டு, எதற்காக கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம், பரபரப்பு ஏற்பட்டது. திமுக., வினர், ஸ்டாலின் முன்னிலையிலேயே அந்த பெண்ணை தாக்க முயன்றனர். அவர்களை ஸ்டாலின் தடுத்து நிறுத்தினார். அப்போது, எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என அந்த பெண் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்டாலின், உனக்கு பதில் சொல்ல முடியாது. நீ அமைச்சர் வேலுமணி அனுப்பி ஆள் என தெரிவித்தார்.
தொடர்ந்து அந்த பெண், ''திமுக எதையும் செய்யவில்லை. கிராம சபை கூட்டம் நடத்துவது ஏன்'' என கோஷம் போட்டு கொண்டு வெளியேறினார். வெளியி...