வீடியோ
கும்பகோணம் தீ விபத்து…வசூலான 60 லட்சம் எங்கே? மவுனம் சாதிக்கும் சரத்-ராதாரவி கூட்டணி
https://youtu.be/OepZzC3MlE0
குழந்தைகளின் கொண்டாட்டத்திற்கு ரிலீஸ் ஆக உள்ள மங்கி டாங்கி பாடல் வரிகள் வீடியோ வெளியீடு!
https://youtu.be/ZAtCR8dcfBU
ஊரடங்கை மீறி காரில் ஊர் சுற்றிய மந்திரி மகனை தடுத்து நிறுத்திய பெண் போலீஸ் இடமாற்றம்!
ஊரடங்கை மீறி காரில் சுற்றிய மந்திரி மகனை மடக்கிய பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுத்து சர்ச்சையில் சிக்கிய குஜராத் போலீஸ்!
குஜராத்தில் ஊரடங்கை மீறி இரவு நேரத்தில் வெளியே வந்த பாஜக அமைச்சர் மகனிடம் பெண் காவலர் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.. அதாவது குஜராத்தைச் சேர்ந்த ஹெல்த் மினிஸ்டர் குமார் கனானி.. இவரோட மவன் பிரகாஷ் கனானி... போன புதன்கிழமை இவர் காரில் ஊரை சுற்றி வந்துருக்கான்.. அந்த காரில் ஃப்ரண்டுகளும் இருந்துருக்கானுஹ..
லாக்டவுன் விதிகளை மீறி, ரொம்ப நேரமாக சுற்றிக் கொண்டு இருக்கவும், அந்த காரை வாகன போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணை செஞ்சது சுனிதா என்ற லேடி போலீஸ்..
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், 'நான் யார் தெரியுமா?.. எம்எல்ஏ மகன்' என்றார்.. உடனே சுனிதா, "நீ யாரா வேணும்னாலும் இருந்துட்டு போ.. எம்எல்ஏ மகன்-ன்னா, உனக்கு கொரோனா வராதா? லாக்டவுனில் இப்படி தே...
பிரபல வங்கி பெயரில் போலியாக கிளை தொடங்கிய பலே ஆசாமிகள் கைது!
போலியாக ஸ்டேட் பேங் ஆப் இந்தியா கிளை திறந்த 3 பேர் அரெஸ்ட
“பண்ருட்டில எங்களுக்கு 2 ப்ராஞ்சுதான். மூணாவது ப்ராஞ்ச் எங்களோட்து இல்ல”னு ஸ்டேட் பேங் ஆபீசர்ஸ் புகார் குடுத்தாங்க.
அவங்க போய் பாத்தப்ப அச்சு அசலா ஒரு SBI கிளை எப்டி இருக்குமோ அதே மாதிரி இருந்துச்சாம். ஃபர்னிச்சர், கண்ணாடி, தடுப்புகள், கம்ப்யூட்டர் எல்லாமே பக்கா.
இவ்ளோ பெர்ஃபக்டா செஞ்சது யார்னு பாத்தா, வேலை தேடிட்டு இருந்த பையனாம். அப்பா பேங்ல வேல செஞ்சாரு. இறந்து 10 வருசம் ஆச்சு. அம்மாவும் பேங்ல ரிடயர் ஆகி 2 வருசம் ஆகுது. ஸோ, பையன் ப்ளட்ல பேங்கிங் ஊறிருக்கு.
மத்த 2 பேர்ல ஒருத்தர் ப்ரின்டிங் ப்ரஸ் வச்சிருக்கார். பேங் சலான், ரசீது புக்கெல்லாம் அடிச்சு குடுக்றது அவர்தான். இன்னொருத்தர் ரப்பர் ஸ்டாம்ப் செஞ்சு குடுக்றவர்.
கஸ்டமர்ஸ் யாரும் ஏமாறலைனு ஆபீசர்ஸ் சொல்றாங்க. இது யே மேரா இண்டியால வருதானு பாக்கணும்....
கொரானா ஊரடங்கு 100ம் நாளில் தூய்மை பணியாளருக்கு விருது!
*கொரோனா ஊரடங்கு 100 வது நாள்*
தூய்மை பணியாளர் விருது
முதல் ஊரடங்கு மார்ச் 22 அன்று ஆரம்பித்தது. ஜீன் 29 இன்று கொரோனா ஊரடங்கின் 100 வது நாள்.
வழக்கமாக ஒரு திரைப்படம் 100 நாள் ஓடி வெற்றி கண்டால் அதற்கு விழா எடுத்து பணிபுரிந்தவர்களுக்கு சால்வை அணிவித்து விருது கொடுப்பார்கள்.
*திரு.வி.க.பூங்கா திரைப்பட கதாநாயகன் இயக்குனர் செந்தில்.செல்.அம்* அவர்கள் கொரோனா ஊரடங்கின் 100 வது நாளை முன்னிட்டு
கொரோனா ஊரடங்கின் அசாதாரணமான சூழ்நிலையில்கூட சாதாரணமாக பணிக்கு வந்து ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் தனிமனித இடைவெளியுடன் பணிபுரிந்த அவரது கடலூர் வண்ணாரப்பாளையம் வார்டுக்குட்பட்ட தூய்மை பணியாளர் E.லதா* அவர்களுக்கு சிறந்த தூய்மை பணியாளர் விருதினை வழங்கி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்
மேலும் அவர் கூறுகையில் தூய்மை பணியாளர்களை மதிப்போம் அவர்களை நம் உறவினர்களாக பார்ப்போம்... அவர்களால் தான் ...
மருத்துவமனைக்கு போன கர்ப்பிணியை வழிமறித்து சங்கரன்கோயில் போலீஸ் அத்துமீறல் – காட்டமாக வீடியோ வெளியிட்ட இராணுவவீரர்
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரியும் ஒருவர் வெளியிட்ட வீடியோ சங்கரன்கோவில் காவல்துறையினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரணாபுரம் கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் CRPF வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது தந்தை மற்றும் 4 மாத கர்ப்பிணியான தங்கை ஆகிய இருவரும் ரவிக்குமாருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் சங்கரன்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் வாகன சோதனையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் ரவிக்குமார் தந்தை மற்றும் அவரது தங்கை சென்ற வாகனத்தை நிறுத்தி கர்ப்பிணியான பெண் என்றும் பாராமல் அரை மணி நேரம் காக்க வைத்து திருடனிடம் விசாரணை செய்வதை போல் நடந்ததாகவும் குற்றம் சாட்டும...
சூர்யாவின் டிஜிட்டல் ரிலீசுக்கு தயாரிப்பாளர் தாணு ஆதரவு!
ஒற்றுமையாக இருப்போம்... டிஜிட்டல் ரிலீசால் திரையுலகம் அழியாது... தயாரிப்பாளர் தாணு திடீர் வீடியோ!
டிஜிட்டலில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சூர்யா எடுத்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் தமிழ் திரையுலகில் பிரமாண்ட தயாரிப்பாளரான தாணு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருக்கும் முக்கிய தகவல்:
பொன்மகள் வந்தாள் படம் மார்ச்சில் ரிலீஸ் ஆகவேண்டிய படம். கொரானா இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி தானாகவே டிஜிட்டலில் படம் வந்திருக்கும். இப்போது கொரானாவால் தியேட்டர்கள் இல்லாமல் அந்த வருமானம் இழந்திருக்கிறார்கள்.
அதோடு டிஜிட்டல் ஒப்பந்தம் படி நடந்து கொள்ளாமல் போனால் அந்த தொகையும் வராமல் இழப்பு ஏற்படும்.
சூர்யா நிறையவே கல்வி உதவி செய்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் தொக...
ஜோதிகா படத்தை டிஜிட்டலில் வெளியிட திடீர் எதிர்ப்பு!
ஜோதிகாவின் படத்தை டிஜிட்டலில் வெளியிட திடீர் எதிர்ப்பு.
இன்று ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று திரையரங்கு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
2D நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளிவர இருந்த பொன்மகள் என்ற திரைப்படம் திரைக்கு வராமல் நேரடியாக OTT Platformல் வெளிவரப்போவதாக செய்தி வந்தது.
மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து 1000 திரையரங்க உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
தொடர்பு கொண்ட போது தயாரிப்பாளர் நமது கோரிக்கைகளை ஏற்பதாய் இல்லை.
ஆதலால் இனி அந்த தயாரிப்பாளர் மற்றும் அவரை சார்ந்தோர் வெளியிடும் அனைத்து படங்களையும் OTT Platformல் மட்டுமே வெளியிட்டு கொள்ளட்டும் என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இவ்வாறு பன்னீர் செல்வம் கூற...
ஊரடங்கு நேரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் திருமணம்!
ஊரடங்கு நேரத்தில் முன்னாள் பிரதமர் பேரன் திருமணம்!
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் கட்சியைச் முன்னாள் அமைச்சர் மகள் ரேவதிக்கும் பெங்களூரு அருகேயுள்ள பண்ணை வீட்டில் இன்று திருமணம் நடைபெற்றது.
கொரானா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஹெச்.டி.குமாரசாமியின் மகன் திருமணம் நடைபெறுவது ஊடகங்களில் முக்கிய தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது.
கர்நாடகா மாநில அரசு சார்பில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
திருமண இடம் அமைந்துள்ள ராமநகரத்திற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் குமாரசாமி குடும்பத்தின் பிரமாண்டமான திருமணத்தில் பங்கேற்க சுமார் 30-40 கார்கள் பெங்களூரிலிருந்து திருமண மண்டபத்தை நோ...

