'பாரத் யாத்ரா' நிகழ்வின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டார்!
சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். திருவனந்தபுரத்தில் ஸ்ரீ கோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் 'Social Inclusion of Persons with Disabilities' என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி நடத்துகிறது.
நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ஜெயராம் இந்த அசாத்திய முயற்சியின் பின்னணியில் உள்ள முழு குழுவையும் வாழ்த்தினார். மேலும், இந்த சிறந்த நோக்கத்திற்கு ஆதரவளித்த இந்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த பிரச்சாரம...
குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷியை, 'வருங்கால கதாநாயகி' என இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் "எங்க அப்பா" ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்!
அப்பா மீடியா சார்பில், லக்ஷனா ரிஷி நடிக்க, எஸ்.வி.ரிஷி எழுதி, இயக்கியுள்ள "எங்க அப்பா" இசை ஆல்பத்தை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குனர் பேரரசு பெற்றுக் கொண்டார்!
விழாவில் பேபி லக்ஷனா ரிஷி, தயாரிப்பாளர் அனீஷா சதீஷ், இயக்குனர் எஸ்.வி.ரிஷி, இசையமைப்பாளர் சந்தோஷ் சாய், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், விஜய் கணேஷ், பாவா லட்சுமணன், பெஞ்சமின், மீசை ராஜேந்திரன், சௌந்தர்ராஜன், ராஜாதிராஜா, காதல் சுகுமார், காதல் சரவணன், அழகேஷ், தெனாலி, கராத்தே ராஜா, சின்ராசு, பிஆர்ஓ கோவிந்தராஜ், நடிகைகள் சுமதி, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்துக் கொண்டனர்!
அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இயக்குனர்கள் கே.பாக்யரா...
“ஹிட்லர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் ராஜா பேசியதாவது..,
செந்தூர் பிலிம்ஸின் 7 வது திரைப்படம் இது, கோடியில் ஒருவன் படம் நல்ல வரவேற்பைக் குவித்தது. விஜய் ஆண்டனி நடிப்பில் இந்தப்படமும் கண்டிப்பாக நல்ல வரவேற்பைப் பெறும். இசையமைப்பாளர்கள் விவேக் மெர்வின் அற்புதமான இசையைத் தந்துள்ளார்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடினமான உழைப்பைத் தந்துள்ளனர். இப்படத்தை முன்பே வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தோம், ஆன...