பிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் .. தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் !
விஷால் நடித்த கத்திசண்டை படத்திற்கு படம் வெளியிடுவதற்கு முன்பே விஷால் அவர்களுக்கு பணம் செட்டில் செய்யப் பட்டு விட்டது..96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு ஊதியபாக்கி இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் மறுப்பு தெரிவித்துள்ளார்
சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நந்தகோபால், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தில்லாமல் மொட்டைக் கடுதாசி வந்திருப்பதாக குறிப்பிட்டார். இதுவரை நான் எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் எனது மனசாட்சிக்குட்பட்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு முழு ஊதியத்தையும் தயாரிப்பாளர் என்ற முறையில் முழுமையாக வழங்கியிருப்பதாக தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒன...









