செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

சினி நிகழ்வுகள்

வீரமாதேவி வேடத்தில் சன்னி லியோன்  நடிக்கத் தடை விதிக்க வேண்டும் – மதுரை நீதிமன்றத்தில் மனு!

வீரமாதேவி வேடத்தில் சன்னி லியோன் நடிக்கத் தடை விதிக்க வேண்டும் – மதுரை நீதிமன்றத்தில் மனு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நீலப்பட நடிகையாக அறிமுகமான சன்னி லியோன் தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். அவரது பயோபிக்கான கரெஞ்சித் கவுர் முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இதனிடையே இயக்குநர் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் 'வீரமாதேவி' படம் மூலம் முதன்முறையாக தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார் சன்னி லியோன். சோழ பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி, சிறந்த போர் வீராங்கனையாக இருந்தவர். இவரது வாழ்க்கை வரலாற்றை, வீரமாதேவி என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகின்றனர். இதில் வீரமாதேவி வேடத்தில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். இந்நிலையில், செல்லூரைச் சேர்ந்த சரவணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஆபாச படங்களில் நடித்துள்ள சன்னிலியோன், வீரமாதேவி வேடத்தில் நடிக்கத் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். ...
மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
மீடூ என்னும் இயக்கம் மூலம் பெண்கள் தங்கள் அலுவலகங்களில், பணிபுரியும் துறைகளில், பொது இடங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கத்தை தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி தொடங்கி வைத்தார். அதன்பின் பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். நடிகையும் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த மீடூ இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் மலையாள இயக்குனரான ஹரிஹரன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அவரது புகார் வருமாறு:- ‘ஹரிஹரன் இயக்கிய பழசிராஜா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். சின்ன வேடமாக இருந்தாலும் மம்முட்டிக்கு மனைவி வேடம். பூஜையிலும் கலந்து கொண்டேன். பூஜை நடந்த அந்த நாளில் இருந்து சில நாட...
96 கதை என்னுடையது தான் – இயக்குனர் பிரேம் குமார் விளக்கம்

96 கதை என்னுடையது தான் – இயக்குனர் பிரேம் குமார் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணிவில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், ‘இந்த கதை என்னுடையது தான். இந்த கதையை நான் 2016 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் ‘96’ என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். இந்த கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அவர்களிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்கு பிறகு தயாரிப்பாளர் நந்தகோபா...
கார்த்திக்காக தேவ் படத்தில் குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

கார்த்திக்காக தேவ் படத்தில் குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தேவ்’. இதில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் படமாக உருவாகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடலை பாடி இருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதற்கு முன் சூர்யாவிற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான ‘7ம் அறிவு’ படத்தில் ‘யம்மா யம்மா...’ என்ற பாடலை பாடியிருந்தார்....
பொய் சொன்ன  மீடூ ஸ்ருதி…  அர்ஜுன் ரசிகர்கள் கோபம்!

பொய் சொன்ன மீடூ ஸ்ருதி… அர்ஜுன் ரசிகர்கள் கோபம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இரவு விருந்துக்கு அழைத்ததாகவும் நடிகை ஸ்ருதி ஹரிகரன் பரபரப்பு புகார் கூறினார். மீடூ இயக்கம் மூலம் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன் ஸ்ருதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்துள்ளனர். ஸ்ருதி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தான் திருமணமானவர் என்றும் கணவர் பெயர் ராம்குமார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது கன்னட சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ஸ்ருதி தான் திருமணமானவர் என்று இதுவரை வெளிப்படுத்தியதே இல்லை. ஸ்ருதிக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கடந்த ஆண்டே ஊடகங்களில் செய்தி வந்தது. ஆனால் ஸ்ருதி அதை மறுத்து வந்தார். போலீசில் புகார் செய்ததன் மூலம் ஸ்ருதி ரகசி...
நாட்டில் நிகழும் வேறு பல பிரச்சனைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம்  – கபிலன்வைரமுத்து

நாட்டில் நிகழும் வேறு பல பிரச்சனைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் – கபிலன்வைரமுத்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  உண்மை வெல்லட்டும்... கபிலன்வைரமுத்து ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன். வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல் தீர்வை மையப்படுத்துவதுதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி. நான் என்பது மேற்கத்தியம். நாம் என்பது இந்தியம். நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை. நாடு நிம்மதியாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்பது நம் நம்பிக்கை. தன்வாழ்வே அவர்களின் வாழ்வியல். குடும்ப அமைப்பே நம் அடிப்படை. உலகப் பொருளாதாரச் சரிவில் இருந்து இந்தியாவை ஓரளவிற்கு பாதுகாத்தது குடும்ப கட்டமைப்பே. அதுவே பிற நாடுகள் நம்மைப் பார்த்து பொறாமைப்படக் கூடிய பண்பு. நம் மண்ணில் தோன்றிய பெண்...
விமல் படத்தின் டீசரை 20 லடசம் பேர் பார்த்து சாதனை

விமல் படத்தின் டீசரை 20 லடசம் பேர் பார்த்து சாதனை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விமல் படத்தின் டீசரை 20 லடசம் பேர் பார்த்து சாதனை   சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.. மற்றும்.ஆனந்த ராஜ்,  சிங்கம்புலி,  மன்சூரலிகான்,  லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன்  போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது... இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்.. சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்..இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும். அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர்...அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம். இன்று தியேட்ட்ருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணி...
பூஜை போட்ட விஜய் ஆண்டனி…  புல்லட் ஓட்டிய நிவேதா பெத்துராஜ்… திமிரு புடிச்சவன் தீபாவளி..!

பூஜை போட்ட விஜய் ஆண்டனி… புல்லட் ஓட்டிய நிவேதா பெத்துராஜ்… திமிரு புடிச்சவன் தீபாவளி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஸ்கிரீன்சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தமிழகம் முழுக்க வெளியிடும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி சாருக்கு இது 9வது படம், எனக்கும் இது 9வது படம். அவருடன் இது எனக்கு 4வது படம். திமிரு இருந்தா தான் நம்பிக்கை இருக்கும். நம் மூதாதையர்கள் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தவர்கள், திமிரோடு இருந்தவர்கள். அதை கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து எடுத்து விட்டார்கள். திமிரு என்பது நம் உரிமைகளை தட்டிக் கேட்பது. இந்த பெயரை தலைப்பாக வைக்க ஒரு திமிர் வேண்டும். அது விஜய் ஆண்டனி சாருக்கு இருக்கிறது என்ற...
எவனும் புத்தனில்லை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

எவனும் புத்தனில்லை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் "எவனும் புத்தனில்லை" இந்த படத்தில் நபி நந்தி ,சரத் இருவரும் கதாநாயகன்களாக நடிக்கிறார்கள்... கதாநாயகிகளாக சுவாசிகா நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார்... மற்றும் கெளரவ வேடத்தில் சினேகன் நடிக்கிறார்.. மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர் மாரிமுத்து பசங்க சிவக்குமார் சுப்புராஜ் எம்.கார்த்திகேயன் காதல் சரவணன் ஆகியோர் நடிக்கிறார் கள். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் S.விஜயசேகரன் ஜனரஞ்சகமான படமாக எவனும் புத்தனில்லை படம் உருவாகி உள்ளது. அண்ணன் தங்கை பாசத்தை உள்ளடக்கிய படமாக உருவாக்கப் பட்டுள்ளது. ஆக்‌ஷன் திரில்லர் படமாக மலை வாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லி இருக்கிறோம் என்கிறார் இயக்குனர்...