தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கண்ணீர் மல்க மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி:
தேமுதிக தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் 7-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு சுமார் 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் மேலும் அமெரிக்காவில் தேமுதிக தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்துக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, இந்தநிலையில் அமெரிக்கா சென்ற பிறகு,தேமுதிக தலைவர் திரு. கேப்டன் விஜயகாந்த் மிகுந்த உற்சாகத்துடனும், புதுத் தெம்புடனும் காணப்படும் புகைப் படங்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை முடிந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சென்னை விமானநிலையம் வந்தடைந்தார் இதனையடுத்து அங்கிருந்து வீட்டிற்குசெல்லாமல் தனது குடும்பத்தினருடன...
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளி நடத்த சென்னையில் நடந்த நடிகர் சங்க 65வது பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நடிகர சங்க 65வது பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்தது. செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன், கருணாஸ், மற்றும் ஐசரிகணேஷ் உட்பட அனைத்து நிர்வாகிகளும், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
https://youtu.be/rsSvovZ5aYo
கூட்டத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் நடிகர சங்க கட்டிடத்தை முடிப்பதற்கு வசதியாக மேலும் 6 மாதம் தேர்தலை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டது.
...
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
இயக்குனர் சுசீந்தரன் பேசியது :-
நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. நான் இந்த கதையையும் , கதாபாத்திரத்தை பற்றியும் பலரிடம் ஒன் லைனாக கூறியுள்ளேன். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதை எப்படி கதையாக மாற்றுவது என்று பல வருடங்களாக யோசித்து வந்தேன். அது கதையாக மாறிய பின்பு ஜீனியஸ் கதையை விஜய் , அல்லு அர்ஜுன் , ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்த கதையை கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது ஆனால் அவர்களால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. கடைசியாக இந்த கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது. இப்படம் மக்களுக்கு கருத்த...
நடிகரும் டப்பிங் யூனியன் தலைவருமான ராதாரவி மீது ஏற்கனவே நடிகர் சங்க நிலத்தை உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டார்கள் என ராதாரவி, சரத்குமார், செல்வராஜ் உட்பட 4 பேர் மீது காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
இந்த சூழலில் டப்பிங யூனியன் கட்டிடம் வாங்கியதில் பண முறைகேடு நடந்திருப்பதாக ராதாரவி, செல்வராஜ் மீது சென்னை கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து CSR வழங்கி இருக்கிறார்கள்.
ராதாரவி மீது மீண்டும் மோசடி புகாராமே? #DubbingUnion #NadigarSangam #ArtistesUnion
https://youtu.be/pSK7Rdf2xtA...
நயன்தாரா சமீபத்திய படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஆகஸ்ட் 17ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் கோலமாவு கோகிலா.
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா?
பெரிய திரைகளில் உள்ள சில கேள்விகள் வியக்கத்தக்க விதத்தில், சினிமாவுக்கு வெளியில் நகரத்தில் ட்ரெண்டிங் டாபிக்காக மாறும். அதில் 'கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்? என்ற வரலாற்று சிறப்பு மிக்க கேள்வியை மறக்கவே முடியாது. ஆனால் தற்போதைய தருணத்தில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 'யோகி பாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொள்கிறாரா?' என்பது தான். இந்த டாபிக் மிகப்பெரியதாக மாறி, மற்ற படத்தின் விளம்பர நிகழ்வுகளில் கூட குறிப்பிட்டு பேசப்பட்டு வருகிறது.
இந்த கேள்விக்கான விடையை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன், ஆகஸ்ட் 17ஆம் தேதி மிகப்பெரிய அளவில் வெளியாகும் கோ...
.
"த்ரிஷா இல்லன்னா நயன்தாரா"வெற்றி படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் சி ஜே ஜெயக்குமார் அடுத்து தயாரிக்கும் "இமைக்கா நொடிகள்" படம் அறிவிக்க பட்ட நாளில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அதர்வா =ராஷி கண்ணா ஜோடியாக நடிக்க , அவர்களுடன் படத்தின் மைய புள்ளியாக நடிக்கிறார் நயன்தாரா.பிரபல ஹிந்தி திரை உலகின் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார்.
அஜய் ஞான முத்து இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்க, ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் கூர்மையான வசனத்தில் உருவாகும் இந்த படத்தில் இடம் பெறும் "விளம்பர இடைவெளி " என்ற பாடல் இளமை ததும்பும் காட்சிகளால், மனதை மயக்கும் இசையால், அருமையான பாடல் வரிகளால், இணைய தளத்தில் மிகவும் பிரபலமானது.
ஒரு முழு நேர ஆக்ஷன் கதாநாயகனாக அதர்வா மிளிரும் இந்த படம் அவருக்கு திருப்பு முனையாக இருக்க...
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால், படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
நடிகர் வீரா இது பற்றி கூறும்போது, "ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தில் முதன்மையானவர் ஹீரோ. அந்த ஹீரோவாக என்னை நடிக்க வைக்க ஒப்புக் கொண்டதற்கும், இந்த படத்தை தயாரித்ததற்கும் தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். மேலும், என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் நான் மிகவும் பதட்டமாக உணர்கிறேன்" என்றார்.
இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் தனது பங்கிற்கு கூறும்போது, "நான் மிக நீண்ட காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரித்துக் கொண்டிருந்தேன். ராஜதந்திரம் படத்தின் விளம்பரப் பாடல் நிகழ்ச்சியில் முதன்முறையாக வீராவும் நானும் சந்தித்த...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
பிறகு ,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்,செயலாளர்கள் கதிரேசன், S.S.துரைராஜ், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், நடிகர் நடிகைகள் சுஹாசினி, ரேவதி, லிஸி, சரண்யா பொன்வண்ணன், குஷ்பூ, ஷீலா, காஞ்சனா, அம்பிகா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீப்ரியா, விக்ரம் பிரபு, ராதாரவி, குட்டிபத்மி...
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!!
கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38வது செயற்குழு கூட்டம் தலைவர் M.நாசர் தலைமையில் இன்று(12.08 .2018) காலை 10 மணிக்கு நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
.மறைந்த முன்னாள் முதல்வரும்,நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது . மேலும் இக்கூட்டத்தில் சமீபத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவு சந்தித்து வரும் கேரள மக்களுக்கு நடிகர் சஙகம் மூலம் முதல் கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....