செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

சினி நிகழ்வுகள்

ரஜினி படம் கார்த்திக் சுப்புராஜுக்கு தனுஷ்  விட்டுக்கொடுத்தார்..!

ரஜினி படம் கார்த்திக் சுப்புராஜுக்கு தனுஷ் விட்டுக்கொடுத்தார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி-2 ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதற்கு அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளதால், கார்த்திக் சுப்புராஜுக்கு இது நல்ல வாய்ப்பு என தனுஷ் விட்டுக்கொடுத்தார் என கூறப்படுகின்றது. அது மட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜ் தனுஷிற்கு சொன்ன கதையில் ஒரு காட்ஃபாதர் போல் ஒரு கதாபாத்திரம் உள்ளது, ஒருவேளை அந்த கதாபாத்திரத்தின் விரிவான பகுதி தான் ரஜினி படமா? என்று கேள்வி எழுந்துள்ளது....
 Karu movie ready to release on March 9

 Karu movie ready to release on March 9

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
Karu movie audio launch function happen today. Actress Sai Pallavai,  Director A. L. Vijay, Naga Shourya participating. In Audio function, Sai Pallavai appearing her normal and simple gorgeous look. Sai Pallavi attended as traditional look also.  Karu movie ready to release on March 9. karu trailer  already released, Karu reached so many people's, and a got good response from the audience. Sai Pallavi acted different style compared with her previous movies. For the first time, Sai Pallavi acted as Thriller based movie. In audio function, Sai Pallavai, A.L Vijay, and other Karu movie casting participated in the function. Earlier in his interviews, while promoting Chalo movie, Shourya opened up some things about "Kanam" movie where he criticising Sai Pallavi's craze and unneces...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  ரஜினி..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி நடிப்பில் தற்போது ‘காலா’ படம் உருவாகியுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தவிர ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.O’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படமும் விரைவில் வெளியாக உள்ளது இப்படங்களில் நடித்த முடித்த பிறகு ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்து அரசியலில் களமிறங்க இருப்பதாக அறிவித்தார். தற்போது கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார்...

கெத்தான விவசாயியாக வலம் வரும் `கடைக்குட்டி சிங்கம்’ கார்த்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `கடைக்குட்டி சிங்கம்'. முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடிக்கும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். நாயகியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் அர்த்தனா நடிக்கின்றனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தில் கார்த்தி மாதம் 1½ லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார். எப்படி பொறியாளர், டாக்டர் என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக் கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி, தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இட...
தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி

தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும்,  நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”. “காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர். அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை” என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் “கேணி” திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீ...
நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா

நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் சினிமா படமாக தயாராகிறது. சாவித்திரியின் சிறுவயது வாழ்க்கை, சினிமாவில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது, நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து கொண்டது, பின்னர் சொந்த படம் எடுத்து சொத்துக்களை எல்லாம் இழந்து இறுதி காலத்தில் வறுமையில் வாடி இறந்தது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இடம்பெறுகின்றன. சாவித்திரி குடும்பத்தினர், நண்பர்கள், பழம்பெரும் நடிகர்கள் ஆகியோரிடம் பேசி தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் சாவித்திரி வேடத்தில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சாவித்திரி போன்று தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார் சமந்...
சுருதிஹாசனுக்கு டிசம்பரில் காதல் திருமணம்..?

சுருதிஹாசனுக்கு டிசம்பரில் காதல் திருமணம்..?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கமல்ஹாசனுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கிறார். வேறு படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. அவர் சினிமாவை விட்டு ஒதுங்குவதாக தகவல் பரவி உள்ளது. இதற்கு பதில் அளித்த சுருதிஹாசன் சினிமாவை தவிர்த்து வேறு வாழ்க்கையும் இருக்கிறது. பாடல், இசையில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்துகிறேன். நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன் என்றார். சில மாதங்களுக்கு முன்னால் சுருதிஹாசனுக்கும், லண்டன் நடிகர் மைக்கேல் கார்செல்லுக்கும் காதல் மலர்ந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணையதளங்களில் வெளியாகி வந்தன. சுருதிஹாசனின் தாய் சரிகா மும்பையில் வசிக்கிறார். மைக்கேலை அழைத்துச்சென்று சரிகாவிடம் சுருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். அந்த படங்களும் வெளிவந்தன. பின்னர் சென...
போலி பில் போட்டு கோடிகள்  சுருட்டல் ஆட்டம் ஆடிய அலமேலு அதிர்ச்சியில் திரையுலகம்

போலி பில் போட்டு கோடிகள் சுருட்டல் ஆட்டம் ஆடிய அலமேலு அதிர்ச்சியில் திரையுலகம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
போலி பில் போட்டு கோடிகள் சுருட்டல் ஆட்டம் ஆடிய அலமேலு அதிர்ச்சியில் திரையுலகம் திரையுலகில் சினிமா எடுத்து ரிலீஸ் செய்வதற்குள் தயாரிப்பாளருக்கு விழிபிதுங்கி ரத்தம் சுண்டி நாக்கு தள்ளி என சொல்லிக் கொண்டே போகலாம் அந்தளவுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலை சந்தித்துதான் ஒவ்வொரு படங்களும் ரிலீஸ் ஆகிறது. இதற்கு காரணம், பல காரணங்களை சொல்லலாம். முக்கியமான காரணம், சரியான திட்டமிடுதல் இல்லாததுதான். விளம்பர மோகம் இருக்கிற சினிமாகாரர்களை நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் யாரும் ஈசியாக ஏமாற்றி விடலாம் என்பதற்கு இப்போது சொல்லப்போகும் செய்தி பெரிய உதாரணம். ‘வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டாண்டா’ என்று ஒரு படத்தில் வசனம் வரும் அதைப்போலவே நுனி நாக்கு ஆங்கிலமும், பெண் என்ற தகுதியும் இருந்தால் போதும் யாரையும் ஏமாற்றி விடலாம் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. சென்னை தி.நகரில் ச...
ரஜினிகாந்தின் 2.0 படத்தை ரிலீஸ் செய்வதில் நீடிக்கும் குழப்பம்

ரஜினிகாந்தின் 2.0 படத்தை ரிலீஸ் செய்வதில் நீடிக்கும் குழப்பம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் 2.0 படம் எப்போது வெளியாகும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் உள்பட படத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள் அனைவரும் ‘டப்பிங்’ பேசியும் முடித்து விட்டனர். கடந்த வருடம் தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். தொழில் நுட்ப பணிகள் தாமதமானதால் ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர். பின்னர் ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் அன்று படம் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2.0 படத்துக்கு பதில் ரஜினிகாந்தின் காலா படம் அதே நாளில் வெளியாகிறது. 2.0 படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. தற்போது இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதிக்கு வெளியாக இருக...
கடனை திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கடனை திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
கோச்சடையான் படம் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வெளியானது. ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் எடுப்பதற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார். ஆனால் இந்த கடனில் ரூ. 1½ கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆட்பீரோ நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடியில் ரூ.8½ கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினி காந்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என்று கேள்வி கேட்டது. அதோடு எதற்காக கடனை செலுத்தவில்லை என்று கூறுங்கள். இதற்கான பதிலை மதியம் 12.30 மணிக்குள் தெரிவிக்குமாறும் லதா ரஜினிகாந்திற்கு சுப்ரீம் கோர்ட்ட...