ரஜினியின் அரசியல் பிரவேசம்: அமிதாப்பச்சன் வாழ்த்து
ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பலரும் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக...’ என்று பதிவு செய்திருக்கிறார்.
தற்போது பாலிவுட் நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘என்னுடைய நெருங்கிய நண்பரும், சக ஊழியரும், எளிமையான மனிதருமான ரஜினிகாந்த், அரசியலில் நுழைவதற்கான தனது முடிவை அறிவித்திருக்கிறார். அவரது வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!!’ என்று பதிவு செய்திருக்கிறார்...









