இசை வழியே என் தந்தையை கௌரவித்தது, எனக்கு கிடைத்த பெருமை – ஸ்ருதிஹாசன் !!
*இசை வழியே என் தந்தையுடன் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி - தந்தை குறித்து உருக்கமாக பகிர்ந்த ஸ்ருதிஹாசன் !!*
இசை வழியே என் தந்தையை கௌரவித்தது, எனக்கு கிடைத்த பெருமை - நடிகை ஸ்ருதிஹாசன் !!
இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, அவருடைய தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட்டான பாடல்களை தொகுத்து ஒரு இசை நடன நிகழ்வை அரங்கேற்றினார்.
ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது.. இசை வெளியீட்டு விழாவை மேலும் மிளிரச் செய்தது. இந்த தருணத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வ...









