“மெட்ராஸ்காரன்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!
SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!
நடிகர்கள் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான ஆக்ஷன் டிராமா “மெட்ராஸ்காரன்” திரைப்படம் !!
SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படத்தின் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், நிஹாரிகா, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், புதுமையான ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்”
இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான முறையில் இனிதே நடந்தேறியது.
இந்நிகழ்வினில்…
இயக்குநர் வஸந்த் சாய் பேசியதாவது..
மிக மிகச் சந்தோஷமாக உள்ளது. எனது உதவி இயக்குநர் வாலி மோகன் தாஸ் அடுத்தடுத்த உயரத்திற்குச் செல்வது மகிழ்ச்சி. ஷேன் நிகாம் ரசிகன் நான், அவரது மலையாளப்படங்க...









