புதன்கிழமை, ஜூன் 17
Shadow

சினி நிகழ்வுகள்

ஸ்ரீதேவி மரணம்: விடை தெரியாத கேள்விகள்..!

ஸ்ரீதேவி மரணம்: விடை தெரியாத கேள்விகள்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இறந்ததாக முதலில் கூறப்பட்டது. தற்போது அவர் தற்செயலாக நீரில் மூழ்கி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. அவருடைய மரணம் தொடர்பாக  மிகப் பெரிய கேள்விகள் எழுந்துள்ளன. * போனிகபூர் குளியல் அறையை முட்டித்தள்ளிக் கொண்டு சென்றபோது மாலை 6.25 மணி என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சம்பவம் குறித்து துபாயைச் சேர்ந்த நண்பரின் அறிவுரைக்கு பிறகு இரவு 9 மணிக்குத்தான் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்து உள்ளார். ஏன் இந்த தாமதம்?... * போனிகபூர் இதுபோன்ற சூழ்நிலையில் நட்சத்திர ஓட்டலின் அவசர மருத்துவ உதவியை ஏன் நாடவில்லை?... * ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பால் மரணம் நிகழ்ந்தது என்பதை யார், எதற்காக கூறினார்கள்? விடை காணமுடியாத கேள்விகளாக இவை உள்ளன.  ...
விஸ்வாசம் படத்தில் இணையும் யோகி பாபு – ரோபோ சங்கர் கூட்டணி..!

விஸ்வாசம் படத்தில் இணையும் யோகி பாபு – ரோபோ சங்கர் கூட்டணி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். யோகி பாபு - ரோபோ சங்கர் கூட்டணி இணையும் பட்சத்தில் இருவரும் காமெடியில் கலக்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருவரும் ஏற்கனவே வீரசிவாஜி, மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...
ராஜஸ்தான் செல்லும்  ‘சாமி-படக்குழு..!

ராஜஸ்தான் செல்லும் ‘சாமி-படக்குழு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘சாமி-2’ படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் ‘சாமி-2’ படத்தின் படப்பிடிப்பு நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது சாமி படத்தில் வில்லனாக நடித்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ்வின் மகனாக இந்த பாகத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து வடஇந்தியாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக நடிகர் விக்ரம் உள்ளிட்ட படக்குழு மார்ச்சில் ராஜஸ்தான் செல்லவிருக்கிறது. அங்கு படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அங்கு சில முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். பாபி சிம்ஹா வில்லனாகவும், விவேக், பிரபு, சூரி, ஓஏகே சுந்தர், ஜான் விஜய் உள்ளிட்ட ...
கோலமாவு கோகிலா வைக்கும் முதல் புள்ளி..!

கோலமாவு கோகிலா வைக்கும் முதல் புள்ளி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
லைகா நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் மாவட்ட கலெக்டராக நடித்த அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன. கிளைமாக்சில் நயன்தாரா அரசியலுக்கு வருவதுபோன்று கதையை முடித்து இருந்தனர். இந்த வருடம் அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா’ என்ற தெலுங்கு படம் ஜனவரியில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ ஆகிய மூன்று படங்களும் உருவாகி உள்ளது.  இதில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு அனி...
மாதவனுக்கு திடீர் அறுவை சிகிச்சை..!

மாதவனுக்கு திடீர் அறுவை சிகிச்சை..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
மாதவன் தனக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக  டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருபவர் மாதவன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது ‘ப்ரீத்’ என்ற வெப்சீரியலில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து கெளதம் மேனன் இயக்கத்தில் ’விண்ணை தாண்டி வருவாயா-2’ படத்தில் நடிக்க உள்ளார். மாதவன் கொஞ்ச நாட்களாகவே தோள்பட்டை வலியில் அவதி பட்டு வந்தார். கடந்த வாரம் கடுமையான வலி காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு மருத்துவர்கள் ஆலோசனையின் படி உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது தோள் பட்டையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும், விரைவில் குணமடைந்து வருவதாகவும், வலது கை இருப்பதையே உணர முடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட மாத...
சம்பள பாக்கி  புகார் கவுதமி மீது கமல் நிறுவனம் சந்தேகம்..!

சம்பள பாக்கி புகார் கவுதமி மீது கமல் நிறுவனம் சந்தேகம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் 13 வருடங்கள் திருமணம் செய்யாமல் வாழ்ந்தவர். பின்னர் திடீரென கமல்ஹாசனுடன் உறவை முறித்து கொண்டு தனது மகளுடன் தற்போது அவர் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம் மற்றும் ‘தசாவதாரம்’ ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், இதற்காக அவருக்கான சம்பளத்தை ராஜ்கமல் நிறுவனம் தரவில்லை என்றும் திடீரென குற்றசாட்டை எழுப்பினார்.கமல் கட்சி ஆரம்பித்து இரண்டே நாளில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் மீது சமூக வலைத்தள பயனாளிகள் கடும் விமர்சனத்தை வைத்தனர். தனது படத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சம்பளத்தை ஒழுங்காக கொடுக்காத கமல், எப்படி நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்ற போகிறார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பினர்இந்த நிலையில் கவுதமியின் குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் பதிலளித்துள்ளது. தசாவதாரம்’ படத் தயா...
குளியல் தொட்டியில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்தது – தடயவியல் அறிக்கை வெளியானது

குளியல் தொட்டியில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்தது – தடயவியல் அறிக்கை வெளியானது

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 22-ம் தேதி போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா திருமணம் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவியின் உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்ததாக போனி கபூர் தெரிவித்திருந்தார். ஸ்ரீதேவியின் பிரேதப்பரிசோதனை அறிக்கை மற்றும் தடவியல் அறிக்கை கிடைக்காததால் அவரது உடலை மும்பை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று பிற்பகல், அவரது தடவியல் அறிக்கை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், அவரது மரணத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீதேவியின் ரத்தத்தில் மது அருந்தியதற்கான தடயங்கள் கா...
நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – நடிகர் சிம்பு

நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – நடிகர் சிம்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லை. இதற்கு சிம்புதான் காரணம் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் குற்றம்சாட்டினார்கள். இதையடுத்து சமீபத்தில் சிம்பு - ஆதிக் ரவிச்சந்திரன் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில், என்னை நடிக்க விடாமல் தயாரிப்பாளர் சங்கம் தடுக்கிறது என்று நடிகர் சிம்பு குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து சிம்பு அளித்த விளக்கம் வருமாறு, நடிகர் சங்கத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு ஒரு நடிகனாக எனது பதிலை நடிகர் சங்கத்துக்கு தெரிவித்துவிட்டேன். இதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கையை நடிகர் சங்கம் எடுக்கலாம். ஆனால் அதை செய்யாம...
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு புரி கடற்கரையில் மணல் சிற்பம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு புரி கடற்கரையில் மணல் சிற்பம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை புரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்கள் மனதில் பதியவைத்து வருகிறார். தேசிய அளவில் தலைசிறந்த மணல் சிற்ப கலைஞராக திகழும் இவர், சர்வதேச அளவில் பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். இந்நிலையில், ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் இன்று மணல் சிற்பம் அமைத்துள்ளார். சுதர்சன் பட்நாயக்கும், அவரது மாணவர்களும் புரி கடற்கரையில் ஸ்ரீதேவியின் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். இந்த சிற்பத்துக்கு அப்பகுதி மகக்ள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது க...
தளபதி விஜய் பற்றிய “THE ICON OF MILLIONS  ” புத்தகம் ரிலீஸ்!

தளபதி விஜய் பற்றிய “THE ICON OF MILLIONS  ” புத்தகம் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS  " புத்தகம் நீதிபதி  டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது தென்னிந்திய  சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கப் பொறுப்பாளர்  புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தளபதி விஜய் பற்றிய ஓர் ஆங்கில மற்றும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.இதில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள்  கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். "THE ICON OF MILLIONS" என்று ஆங்கிலத்திலும் மற்றும் தமிழில் "கோடிக்கணக்கான மக்களின் அடையாளன் " என்ற பெயரிலும் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் நிவாஸ் என்பவரால் எழுதப்பட்டு " THALAPATHY ONLINE FA...