செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

சினி நிகழ்வுகள்

தீபிகா-ரன்வீர் கை கூடிய காதல்… விரைவில் கல்யாணம்..!

தீபிகா-ரன்வீர் கை கூடிய காதல்… விரைவில் கல்யாணம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
தீபிகா படுகோனேவுக்கும், இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஏற்கனவே பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ள பத்மாவத் படத்திலும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இதில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மினியாகவும் அவர் மீது காதல்கொண்டு படையெடுத்து வரும் மன்னன் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ‘பத்மாவத்’ என்று பெயரை மாற்றியும், சர்ச்சை காட்சிகளை நீக்கியும் தணிக்கை குழு அனுமதி வழங்கி உள்ளது. இந்த மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபிகா படுகோனே தனது 32–வது பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாடினார். இதில் ரன்வீர் சிங்கும் அவரது பெற்றோருடன் கலந்து கொண்ட...
தல, தளபதி ரசிகர்களை மகிழ்விக்க வரும் விசிறி..!

தல, தளபதி ரசிகர்களை மகிழ்விக்க வரும் விசிறி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். -சிவாஜி, ‘ரஜினி -கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்ய மானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம்....
சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின்

சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சுயநலத்துக்காக வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை ஏற்க முடியாது: மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் நாளிதழ் ஒன்றில் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய கட்டுரையில், அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்தார். இதற்கு பா.ஜ.க தலைவர் எச் ராஜா வைரமுத்துவை தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்து எதிர்வினையாற்றியிருந்தார். மேலும், அவருக்கு பல்வேறு இந்துத்துவ இயக்கங்களும் கண்டனங்களும், மிரட்டல்களும் விடுத்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- “தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பில் பாரம்பரியமிக்க "தினமணி" நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கவிஞர் வைரமுத்து அவர்கள் எவ்வ...
‘உத்தமி’ ஆன பிக்பாஸ் ஜூலி..!

‘உத்தமி’ ஆன பிக்பாஸ் ஜூலி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘உத்தமி’ ஆன பிக்பாஸ் ஜூலி..! ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதனையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார் ஜூலி. இந்நிலையில் இவர், தற்போது 'கே7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘உத்தமி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சமூக சேவகராக நடிக்கிறார் ஜூலி....
மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி

மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மெகா பட்ஜெட்டில் மே மாதத்தில் துவங்கவுள்ள ‘சங்கமித்ரா’ -சுந்தர்.சி ‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு இயக்குநராக சுந்தர்.சி கைவசம் ‘சங்கமித்ரா’ மற்றும் ‘கலகலப்பு 2’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘கலகலப்பு 2’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சுந்தர்.சி “அடுத்ததாக ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். வரலாறு மற்றும் சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ‘தோனி’ பட புகழ் தீஷா பதானி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இதற்கு ஏ.ஆர்...
ஆண்டாள் விவகாரத்தில் எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம் – பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

ஆண்டாள் விவகாரத்தில் எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம் – பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஆண்டாள் விவகாரத்தில் எதிர்வினைக்கு மீண்டும் எதிவினையாற்ற முயற்சிக்க வேண்டாம் - பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி இந்துக்களின் தாயாராக கருதப்படும் ஆண்டாள் குறித்து கவிப்பேரரசு ஒரு கருத்தை பேசியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வைரமுத்துவின் கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ராஜா ஒருபடி மேலே போய் வைரமுத்துவையும் அவரது தாயாரையும் அவதூறாக பேச இப்போது வைரமுத்துவுக்கு ஆதரவாக பல குரல்கள் எழும்பியது. இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான எஸ்.வி.சேகர் இது குறித்து வெளியிட்ட கருத்து: தங்கள் அலுவலகத்தில் பல இந்துக்கடவுள்களின் படங்களை வைத்திருக்கும் திரு பாரதி ராசா அவர்களே தன் ரத்தம் அவமானப்படுவதை தட்டிக்கேட்பதை விட,வியாபாரத்துக்காக மீண்டும் சேர்ந்த நட்புக்கு குரல் கொடுக்க பாய்ந்து வரும் (என்)உயிர்த்தோழன். தவறு செய்தவரே மேலோட்டமாக மன்னிப்பு கேட்டபின் உங்களின்...
ஆஜராக வேண்டும்… நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு

ஆஜராக வேண்டும்… நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஆஜராக வேண்டும்... நடிகை அமலா பாலுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவு நடிகை அமலா பால் இந்த வரியை தவிர்ப்பதற்காக, புதுச்சேரியில் வசிப்பதுபோல் போலி ஆவணங்களை கொடுத்து, புதுச்சேரியில் தனது சொகுசு காரை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, வரி ஏய்ப்பு செய்ததாக அமலா பால் மீது கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக, முன்ஜாமீன் கோரி, கேரள ஐகோர்ட்டில் அமலா பால் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதி ராஜா விஜயராகவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு போலீஸ் முன்பு, வருகிற 15–ந் தேதி அமலா பால் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்....
படைப்பாளி வைரமுத்துவை  தட்டி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை – H.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை

படைப்பாளி வைரமுத்துவை தட்டி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை – H.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழகத்தில் தனிமனித உரிமை பறிக்கப்பட்டு எவ்வளவோ நாட்களாகிவிட்டது. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லமல் போய்விட்டது. மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இரட்டை காப்பியங்கள் என்றால், கவிப்பேரரசு எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசங்கள், கருவாச்சிக்காவியமும் எளிய மனிதர்களின் காப்பியமில்லையா. அந்த அளவில் தமிழை எளிமை படுத்திய கவிஞனை இழி சொற்களால் எப்படி பேசலாம். வைரமுத்து தனி மனிதனல்ல. தமிழினத்தின் பெரு அடையாளம். ஒரு படைப்பாளன் தன் கருத்துக்களை சொல்லலாம். அல்லது மேற்கோள் காட்டலாம் அதை அட்சர சுத்தமாக தவறென தட்டி கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை என இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் ‘எவனுக்கும்’ அதிகாரமில்லை என பாஜகவைச் சேர்ந்த தேசிய செயலாளர்  H.ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சமீபத்தில் ஆண்டாள் குறித்து வைரமுத்து ஒரு புத...
குடியரசு தினத்தை குறிவைக்கும் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு-2’

குடியரசு தினத்தை குறிவைக்கும் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு-2’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
குடியரசு தினத்தை குறிவைக்கும் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு-2’ சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கலகலப்பு-2’. சுந்தர். சி இயக்கத்தில் ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நந்திதா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சதீஷ், ரோபோ ஷங்கர், மனோ பாலா, விடிவி கணேஷ், வையாபுரி, சந்தான பாரதி, விச்சு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஏற்கனவே ஒரு சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகியிருக்கும் நிலையில், பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான இந்த படத்தின் கலர்புல்லான டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்...
காதலர் தினத்தை குறிவைத்து பிப்ரவரி 9-ம் தேதி பாலாவின்  ‘நாச்சியார்’ ரிலீஸ்..!?

காதலர் தினத்தை குறிவைத்து பிப்ரவரி 9-ம் தேதி பாலாவின் ‘நாச்சியார்’ ரிலீஸ்..!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 9-ஆம் தேதி பாலாவின் 'நாச்சியார்’ ரிலீஸ்..! பி ஸ்டூடியோஸ் மூலம் பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜோதிகா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். நாச்சியார் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்ற நிலையில், டீசரின் முடிவில் ஜோதிகா பேசம் கெட்ட வார்த்தையால் படம் சர்ச்சையிலும் சிக்கியது. இதையடுத்து படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வ...