திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

சினி நிகழ்வுகள்

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்..!

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என நடிகர் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்க இருக்கிறார். மாரி-2 படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி இரண்டாவது பாதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பிலும் தனுஷ் ஒப்பந்தமாகி இருந்தார். அந்த படத்தை தனுஷே இயக்குவதாக சமீபத்தில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் தனுஷே வெளியிட்டிருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் அவரது அடுத்த படத்தை இயக்குகிறார். அதில் நாயகனாகவும் நடிக்கிறார். தனுஷின் 37-வது படமாக உருவாகும் இந்த படம் குறித்த மற்ற...
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் “கொரில்லா”

சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் “கொரில்லா”

CINI NEWS, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் "கொரில்லா"   ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் தான் "கொரில்லா".   ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக பயிற்சிப்படுத்தப்பட்ட சிம்பன்சீயை வைத்து இப்படம் தயாராகவுள்ளது. இந்த படத்தில் நடிக்கவுள்ள சிம்பன்சீ தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற விலங்குகள் பயிற்சி மையமான ‘சாமுட்’ பயிற்சி மையத்தால் பயிற்றப்பட்டது.    இந்த பயிற்சி மையத்தில் இருந்து பயிற்றப்பட்ட சிம்பன்சீகள்தான் ஹேங்ஹோவர்-2, ப்ளேனட்ஸ் ஆஃப் தீ ஏப்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த சிம்பன்சீகளாகும்.   இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. இத்திரைப்படம் குறித்து இய...
அரசியல் காலம்தான் முடிவு செய்யும்… 31ம் தேதிக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது – ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி

அரசியல் காலம்தான் முடிவு செய்யும்… 31ம் தேதிக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது – ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கடந்த 26ந்தேதியில் இருந்து சந்தித்து வருகிறார்.  அவர்களுடன் புகைப்படமும் எடுத்து வருகிறார்.  இந்த நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று 4வது நாளாக ரசிகர்களை சந்திக்கிறார்.  கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்களுடன் இந்த சந்திப்பு நடக்கிறது. அவர் ரசிகர்கள் மத்தியில் பேசும்பொழுது, 31ந்தேதிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்றன என கூறினார்.  இதனை தொடர்ந்து ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து ஆரவாரம் எழுந்தது.  தொடர்ந்து அவர், என் நண்பர்கள் அதிகம் வாழும் ஊர் கோவை.  என் குருநாதர் சச்சிதானந்த் கோவை மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர். பெயர், புகழால் மரியாதை கிடைக்கும்.  ஆனால் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்தே மக்கள் நம்மை மதித்திடுவார்கள். காலம்தான் மிக முக்கியம்.  காலம் வரும்பொழுது அனைத்தும் தன்னாலே மாறும்.  சினிம...
கலைத்துறையில் வெள்ளிவிழா கொண்டாடும் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் ஜன.12ல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறார்..!

கலைத்துறையில் வெள்ளிவிழா கொண்டாடும் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் ஜன.12ல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறார்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இளையராஜாவின் இசைக்குழுவில் கீ போர்ட் பிளேயராக இருந்த ஏ.ஆர்.ரகுமானை, இயக்குநர் மணிரத்னம் 'ரோஜா' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். 1992-ம் ஆண்டில் ரிலீஸ் ஆன ‘ரோஜா’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில், இசை உலகில் தனது வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் தற்போது இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். நாடு முழுவதிலும் இருந்து இசைக் கலைஞர்களும் பாடகர் - பாடகியர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். சினிமாவில் இசைப்பயணத்தை துவக்கி, 25 வருடங்களை நிறைவு செய்துள்ளார் ரகுமான். இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இச...

‘காலா’ படத்தின் புதிய அப்டேட்!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'காலா'. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இப்படத்துக்கு கபிலன், உமாதேவி பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு முரளி, கலை ராமலிங்கம், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, ஆடை வடிவமைப்பு அனுவர்தன், சுபிகா உள்ளிட்ட படக்குழுவினர் பணிபுரிந்த...
ஜனவரி மாதம் 4ம் தேதி`டிக் டிக் டிக்’ ஆடியோ ரிலீஸ்..!

ஜனவரி மாதம் 4ம் தேதி`டிக் டிக் டிக்’ ஆடியோ ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்'. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.     இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் உள்ளிட்டோர் டப்பிங் பணியை முடித்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கின்றனர் டி.இமான் இ...
சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும் – விஷால்

சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும் – விஷால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `இரும்புத்திரை'. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால், சமந்தா, இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன், இயக்குநர் திரு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் விஷால் பேசும் போது, `இரும்புத்திரை' முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை கட்டாயம். அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது. ஆர்.கே.நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பலர் வேண்டிக் கொண்டனர். அதில் இயக்குநர் மித்ரனும் ஓருவர். ஏனெனில் மீண்டும் படம் தள்ளி போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது பரிந்துரையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற மித்...
இரும்புத்திரை படப்பிடிப்பு முடிந்தது…படக்குழுவினருடன் விஷால்- சமந்தா ஆகியோர் கேக் வெட்டி கொண்டாட்டம்..!

இரும்புத்திரை படப்பிடிப்பு முடிந்தது…படக்குழுவினருடன் விஷால்- சமந்தா ஆகியோர் கேக் வெட்டி கொண்டாட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்திலும், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு இன்று நடந்துள்ளது. படப்பிடிப்பை முடிந்ததையொட்டி படக்குழுவினருடன் விஷால், சமந்தா ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 6-ல் மலேசியாவில் நடைபெற உள்ளது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயா...
‘புரட்சி தலைவி’ திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை..!

‘புரட்சி தலைவி’ திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
திரை உலகில் வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெயலலிதா. பின்னர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக உயர்ந்தார். திரை உலகிலும், அரசியலிலும் தனி அடையாளமாக இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராக இருக்கும் இந்த படத்துக்கு ‘புரட்சி தலைவி’ என்று பெயரிட்டுள்ளனர். மும்பையை சேர்ந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதற்காக ஒரு வருடத்துக்கு மேலாக ஜெயலலிதா பற்றிய தகவல்களை சேகரித்து இருக்கிறார்கள். இதுகுறித்து, இந்த படத்தை தயாரிக்க இருக்கும் ஆதித்யா பரத்வாஜ் கூறியதாவது:- ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அவரிடம் இதுபற்றி தெரிவித்தோம். ஆனால் அவர் இதுகுறித்து பிறகு பேசலாம் என்று சொன்னார். ‘புரட்சி தலைவி’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டுடியோக்களில் நடைபெறும். ஆரம்பகால திரைப்பட வாழ்க்கை பற்றிய படப்பிடிப்பு சென்னையில் படமாகு...
தாதா 87 படத்தில் பெண்மையை உணர்த்தும் பாடல்..!

தாதா 87 படத்தில் பெண்மையை உணர்த்தும் பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
தாதா 87 (DHA DHA 87) திரைப்படத்தில் ‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகர் பிரியங்கா பாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் VIJAY SRI G எழுதியுள்ளார், இசையமைப்பாளர் LEANDER இசையமைக்க, RAJAPANDI ஒளிப்பதிவு செய்துள்ளார். சாருஹாசன், சரோஜா(கீர்த்திசுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் தாதா 87 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை காசிமேட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2018ல் படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் ‘கலை சினிமாஸ்’ முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7 அன்று படத்தின் 1 ST SINGLE TRACK ஆறடி ஆண்டவன் பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது....