இயக்குனருக்கு தங்கம் தந்த காமெடியன்..!
"பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் பட்டாபி என்ற அடையாளத்தை பெற்ற நான், தற்போது 8 தோட்டாக்கள் படம் மூலம் மூர்த்தி என்கின்ற புதிய அடையாளத்தை பெற்று இருக்கிறேன்" என்கிறார் எம் எஸ் பாஸ்கர்
ஒரு தரமான திரைப்படத்திற்கு பிரம்மாண்ட தயாரிப்பும், நட்சத்திர நடிகர் நடிகைகளும் அவசியம் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறது, சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் '8 தோட்டாக்கள்' திரைப்படம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர் அவர்களுக்கு, எல்லா தரப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிக்கின்றன. 'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்' - ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து, இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் '8 தோட்டாக்கள்' திரைப்படம், ரசிகர்க...
