மகள் திருமண வரவேற்பில் ரசிகர்களை மேடை ஏற்றி கவுரவித்த விக்ரம் ரசிகர்கள் நெகிழ்ச்சி
சீயான் விக்ரம் அவர்களின் மகள் அக்ஷிதாவிற்கும், திமுகவின் தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது.
புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில்அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், கெவின் கேர் குழும ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் திரு, ச ராமதாஸ், திமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திரு. எம் ஆர் கே பன்னீர் செல்வம், தி மு க வின் முன்னாள் அமை...









