ஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ஸ்டேஷன்!
ஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ஸ்டேஷன்
‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஜய் கார்த்தி மற்றும் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கேபி இன்போடெயின்மென்ட் (KP INFOTAINMENT) தயாரிப்பில், உருவாகும் இப்படம் காதல், குற்றம், அதிரடி என மூன்றும் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஒரே இரவில் நடைபெறும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கியப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தை கேப...








