வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

3வது மனைவி மீது 2வது மனைவி கொலைவெறி தாக்குதல் வேடிக்கை பார்த்தாரா மன்சூர் அலிகான்!

3வது மனைவி மீது 2வது மனைவி கொலைவெறி தாக்குதல் வேடிக்கை பார்த்தாரா மன்சூர் அலிகான்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் மன்சூர் அலிகான் அவர்களின் 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா, 2வது மனைவியின் வாரிசுகளான மகள் லைலா அலிகான்(வயது சுமார் 22), மகன் மீரான் அலிகான்(வயது சுமார் 15) ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதா அவர்களை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நடக்கும் வேளையில் மன்சூர் அலிகான் மற்றும் அவருடைய 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர். இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ள வஹிதா தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான், வஹிதா, லைலா அலிகான் மற்றும் மீரான் மீது புகார் தெரிவித்துள்ளார். பின்னர் வஹிதா அவருடைய சகோதரியுடன் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மன்சூர் அலிகானின் 2வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது....
ஹீரோ ஆன நாட்டுப்புற பாடகர்!

ஹீரோ ஆன நாட்டுப்புற பாடகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. அதற்கு பிறகு இந்த பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது...யூடியூப்பில் இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். உலகம் முழுதும் பிரபலமான இந்த குழு “ கரிமுகன் “ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள்.. செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில் இவர்களுடன் இயக்குனர் செல்ல தங்கையாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  ஒளிப்பதிவு    எழில் பூஜித்.  ஏ விமல் புரொடக்சன்ஸ் சார்பாக T.சித்திரைச்செல்வி , M.ச...
பரியேறும் பெருமாள் கலைஞர் பார்த்திருந்தால் கொண்டாடியிருப்பார் – ஸ்டாலின் நெகிழ்ச்சி

பரியேறும் பெருமாள் கலைஞர் பார்த்திருந்தால் கொண்டாடியிருப்பார் – ஸ்டாலின் நெகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார். பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி. சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டுகளித்தார். உடன் துர்காஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் , கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் திரைப்படத்தை கண்டு களித்தனர். படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், மாரிசெல்வராஜையும் வெகுவாக பாராட்டினார். மேலும் அவர் கூறியதாவது "தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். நிறைய வருடங்களுக்குப்பிறகு நான் பார்த்த சிறந்தபடம் . திரைப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வாழ்த்தினார்....
காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `காற்றின் மொழி'. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, `ஒவ்வொரு வாரமும் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆயுத பூஜை நாளிலும் படங்கள் வரிசைக் கட்டியிருப்பதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகிறது. அதனை தவிர்க்க படத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளிக்கு பிறகு படம் ரிலீசாகும். படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என்...
விஜயை பார்த்து அதிமுகவுக்கு பயமா..? அமைச்சர் மாபா பாண்டியராஜன் பதில்

விஜயை பார்த்து அதிமுகவுக்கு பயமா..? அமைச்சர் மாபா பாண்டியராஜன் பதில்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழாவில்  பேசிய  நடிகர் விஜய்,  சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை. மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால் மாநிலம் நல்லதாகவே இருக்கும். மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அர்சியலிலேயே மெர்சல் பண்ணியி...
“எங் மங் சங்” படம் மூலம் குழந்தைகளை கவர களமிறங்கிய பிரபுதேவா..!

“எங் மங் சங்” படம் மூலம் குழந்தைகளை கவர களமிறங்கிய பிரபுதேவா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங்". இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி அர்ஜுன்.எம்.எஸ். இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது. சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட...
ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு!

ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம். “நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழன் பிரசன்னா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் வ...
சைக்கோ கதை சிக்கல்… நம்ப வைத்து ஏமாற்றிய மிஷ்கின்…  குற்றம்சாட்டும் நடிகர்

சைக்கோ கதை சிக்கல்… நம்ப வைத்து ஏமாற்றிய மிஷ்கின்… குற்றம்சாட்டும் நடிகர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
    சைக்கோ கதை எனக்காக உருவாக்கப்பட்டது - மிஷ்கின் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் - புதுமுக நடிகர் மைத்ரேயா குமுறல் பிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோ லிங்க்... https://www.youtube.com/watch?v=-1F4PmrCv6Y...