செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் பதவி காலம் முடிவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடைபெற்றது. சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்யா பள்ளியில் நடைபெற்ற தேர்தலில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜும், ஆர்.கே.செல்வமணி தனித் தனி அணியாக போட்டியிட்டனர். இவர்கள் இருவரது அணிகள் சார்பிலும் செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் பலர் போட்டியிட்டார்கள். இதில் இயக்குனர்கள் மாதேஷ், எழில் துணைத் தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  மற்ற நிர்வாகிகளை தேர்வு செய்ய, நேற்று காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில...
விஜய் – ரஜினி பட முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்த அஜீத்தின் வலிமை வசூல்!

விஜய் – ரஜினி பட முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்த அஜீத்தின் வலிமை வசூல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜித்தின் வலிமை திரைப்படம் முதல் நாளில் 35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விடுமுறை அல்லாத நாளில் வெளியாகி அதிக வசூலை குவித்த திரைப்படம் என்னும் சாதனையையும் வலிமை படைத்துள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வலிமை திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வந்தது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 1000 திரைகளில் வெளிவந்துள்ள இப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்று அசத்தியுள்ளது. இந்திய அளவில் முதல் நாளில் 35 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் வலிமை திரைப்படம் தமிழகத்தில் 28 கோடி ருபாய் வரை வசூல் செய்துள்ளதன் மூலம் விஜயின் சர்க்கார் படத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் எனும் சிறப்பைப் பெற்றுள்ளது. மேலும் விடுமுறை இல்லாத நாளில் வெளிவந்து அதி...
வயதான சங்க உறுப்பினர்களுக்கு 30 நாள் வேலை திட்டம், வட்டியில்லா கடன் – பாக்யராஜ் அதிரடி அறிவிப்பு

வயதான சங்க உறுப்பினர்களுக்கு 30 நாள் வேலை திட்டம், வட்டியில்லா கடன் – பாக்யராஜ் அதிரடி அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் இன்று காலை நடை பெறுகிறது. ஏற்கனவே தலைவராக 2 முறை பதவி வகித்த செல்வமணி மீண்டும் தலைவர் பதவிக்கு நிற்கிறார். அவரை எதிர்த்து இயக்குனர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். பாக்யராஜுக்கு பாரதிராஜாவின் ஆதரவு இருப்பது கூடுதல் பலம். அதோடு இப்போது எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் பாக்யராஜ் மிக நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வருவதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள். நேற்று மாலை இமயம் அணியின் கூட்டம் இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பாக்யராஜ் பேசியதாவது: எழுத்தாளர்கள் சங்கத்தில் எத்தனையோ மாற்றங்களை பார்த்திருப்பீர்கள். அதைவிட பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். வயதான இயக்குனர்கள், உதவி இயக்குனர்களுக்கு 30 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்த இருக்கிறோம். பிரபலமான இயக்குனர்கள் படம் எடுக்கும் போது வயதான சங்க ...
புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய்!

புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர், ரசிகர்கள் என ஒட்டு மொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபின், நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் விஜய், புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்....
தேசிய சினிமா சேம்பர் சார்பில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது!

தேசிய சினிமா சேம்பர் சார்பில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது!

HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
தேசிய சினிமா சேம்பர் சார்பில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. மாண்புமிகு நீதியரசர், முனைவர் எஸ்.கே.கிருஷ்ணன் தலைமையில், கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர் கே.பாக்கியராஜ், தேசிய விருது பெற்ற திரைப்படஇயக்குனர், முனைவர் ஞான ராஜசேகரன் முன்னிலையில் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கினார்கள். நடிகர், இயக்குனர் கே.பாக்கியராஜ் நேரமின்மையால் போக வேண்டியிருப்பதால் ஆரம்பத்திலேயே கே.பாக்யராஜுக்கு நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன், முன்னிலை வகித்த திரைப்பட இயக்குனர் ஞான ராஜசேகரன் அனைவரும் இணைந்து விருது வழங்கி வாழ்த்தினார்கள். தொடர்ச்சியாக நடிகர்கள் சிறந்த நடிகர் ஜெய் ஆகாஸ், சிறந்த வில்லன் ஆரியன், சிறந்த குணசித்திர நடிகர் ரமேஷ் கண்ணா, வாழ்நாள் சாதனையாளர் பாபு கணேஷ், சிறந்த புதுமுக நடிகர் ரிஷி காந்த், நடிகைகள் சிறந்த கதாநாயகி சிறப்பு விருது இனியா, சிறந்த புதுமுக நாயகி ...
இயக்குனர் செல்வமணியின் “இருக்கு ஆனா இல்ல” I ஏமாறும் திரையுலகம் I கதையான நிஜம்

இயக்குனர் செல்வமணியின் “இருக்கு ஆனா இல்ல” I ஏமாறும் திரையுலகம் I கதையான நிஜம்

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
    இயக்குனர் செல்வமணியின் பொட்டல் காட்டுச்சாதனை ! ? “இருக்கு ஆனா இல்ல” இந்த வீடியோ பதிவு யாரையும் குறை சொல்வதற்காக எடுக்கப்படவில்லை. ஆனால், பல ஆண்டுகளாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பெயரில் தொடர்ந்து மாய நம்பிக்கை பிம்பத்தை ஏற்படுத்தி வரும் செயலை சுட்டிக்காட்டவே எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒரே நிர்வாகம் பல ஆண்டுகளாக பதவியில் நீடித்தால் தவறுகள் கூட சரியாகத்தான் அவர்கள் கண்களுக்கு தெரியும். 25 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பெப்சி தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்து அரசிடமும், நடிகர்களிடமும், தனியாரிடமும் பல கோடிகளை வசூலித்து பல ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படாமல் அரசு கொடுத்த போது எப்படி பொட்டல் காடாக இருக்கிறதோ இப்போதும் அதே பொட்டல் காடாக இருக்கும் நிலத்தில் மண் அடித்தோம், சமப்படுத்தினோம், மரங்களை வெட்டினோம் என பல கோடிகளை கணக்காக காண்...
தீவிர பயிற்சியில் அனுஷ்கா சர்மா.. வியக்கும் ரசிகர்கள்!

தீவிர பயிற்சியில் அனுஷ்கா சர்மா.. வியக்கும் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜுலன் கோஸ்வாமி. இவர் இந்திய அணியை 2008-ஆம் ஆண்டிலிருந்து 2011-ஆம் ஆண்டுவரை வழி நடத்தினார். இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய இவருக்கு விளையாட்டில் வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்கு தயாராகும் விதமாக அனுஷ்கா சர்மா மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார். தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பந்துவீச்சு பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை அனுஷ்கா சர்மா இன்று பகிர்ந்துள்ளார்....
ரஜினி வெளியிட்ட தோனியின் சூப்பர் ஹீரோ புத்தகம்!

ரஜினி வெளியிட்ட தோனியின் சூப்பர் ஹீரோ புத்தகம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு டி20, ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை வென்று தந்துள்ளார். இது தவிர ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு தலைமை தாங்கும் தோனி, 4 முறை தொடரை வென்று தந்துள்ளார். இதனால் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். எம்.எஸ். தோனி ‘அதர்வா: தி ஒரிஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் கதாநாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார். விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து, ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதும் ‘அதர்வா: தி ஒரிஜின்’என்ற கிராபிக்ஸ் நாவலில் வரும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு எம்.எஸ்.தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை சமீபத்தில் தோனி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார். வரலாற்றுக் கதையை பின்னணியாக கொண்ட இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வ...
நீச்சல் உடையில் கலக்கும் பூனம் பாஜ்வா – குவியும் லைக்குகள்!

நீச்சல் உடையில் கலக்கும் பூனம் பாஜ்வா – குவியும் லைக்குகள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூனம் பாஜ்வா. வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது....
வலிமையுடன் களம் இறங்கிய ”பவுடர்” போலீசின் பட்டாக்கத்தி டீசர் ரவுசு! 

வலிமையுடன் களம் இறங்கிய ”பவுடர்” போலீசின் பட்டாக்கத்தி டீசர் ரவுசு! 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வலிமையுடன் களம் இறங்கிய ”பவுடர்” போலீசின் பட்டாக்கத்தி டீசர் ரவுசு!   தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளுக்கும், புது முகங்களுக்கும் எப்போதும் தனி வரவேற்பு இருக்கும். தாதா87 படம் மூலமாக தாத்தாவாக இருக்கும் சாருஹாசனை தாதாவாக  காட்டி தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டவர் இயக்குனர் விஜய்ஸ்ரீஜி. ஏற்கனவே தென்னிந்திய சினிமா உலகில் பத்திரிகை தொடர்பாளராக பணியாற்றிய படியே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நிகில்முருகன். இந்த இருவரும் “பவுடர்” படத்தின் மூலமாக இணைந்திருக்கிறார்கள். விஜய்ஸ்ரீஜி இயக்கத்தில் ராகவன் என்ற போலீஸ் அதிகாரியாக நிகில்முருகன் நடித்து வருகிறார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அஜீத்தின் அலிமை படம் நேற்று வெளியான சூழலில், நிகிலின் பவுடர் படக் காட்சி ஒன்று டீசராக வெளியானது. அந்த காட்சியில் ரவுடிகள் பட்டாக்கத்தி ம...