புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

விண்வெளியில் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி ரஷ்ய படக்குழு சாதனை!

விண்வெளியில் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி ரஷ்ய படக்குழு சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
விண்வெளியில் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி ரஷ்ய படக்குழு சாதனை! ஹாலிவுட்டில் விண்வெளியை மையமாக வைத்து கிராவிட்டி, இன்டர்ஸ்டெல்லர் போன்ற பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. முதன் முறையாக விண்வெளிக்கே சென்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள் ரஷ்ய படக்குழுவினர். இந்தப் படத்தை கிலிம் ஷிபென்கோ இயக்குகிறார். கதைப்படி ஆய்வுக்காக விண்வெளிக்குச் செல்லும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவருக்கு இதயப் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. அவரை காப்பாற்ற பூமியிலிருந்து ஒரு மருத்துவர் செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் தான் படத்தின் கதை. இப்படத்திற்கு ‘தி சேலஞ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை யுலியா பெரெசில்ட், இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ மற்றும் அவர்களின் உதவிக்காக விண்வெளி வீரர் அன்டன் ஷகாப்லெரோவ் ஆகியோர் கடந்த 5-ந் தேதி கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் நகரில் இருந்து ‘சோயு...
அது உண்மையல்ல… வதந்தி – ‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் குறித்து சீனு ராமசாமி விளக்கம்!

அது உண்மையல்ல… வதந்தி – ‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் குறித்து சீனு ராமசாமி விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அது உண்மையல்ல... வதந்தி - ‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் குறித்து சீனு ராமசாமி விளக்கம்! சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக வரவேற்பை பெற்ற படம் ‘தர்மதுரை’. இதில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தர்மதுரை படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய எந்த பக்கம் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. ஆர்.கே.சுரேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார். இதனிடையே தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தை சீனுராமசாமி இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து இயக்குனர் சீனு ராமசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் ...
நயன்தாரா பட இயக்குனருடன் இணைந்த ராணா!

நயன்தாரா பட இயக்குனருடன் இணைந்த ராணா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நயன்தாரா பட இயக்குனருடன் இணைந்த ராணா! பாகுபலி படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ராணா. இவர் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, இந்தி என பன்மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்குகிறார். ஸ்பிரிட் மீடியா நிறுவனம் விஷ்வசாந்தி பிக்சர்ஸ் மற்றும் வீடன்ஸ் கிரியேட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து வழங்குகிறது. கோபிநாத் அச்சந்தா, அர்ஜூன் தஷ்யன் மற்றும் ராம்பாபு சோடிஷெட்டி இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் பணிகள் 2022 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது....
தர்மதுரை படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது!

தர்மதுரை படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தர்மதுரை படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது! தமிழில் வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்களாக வெளியானது. இந்தியன், சந்திரமுகி படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகின்றன. இந்த நிலையில் தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. தர்மதுரை படம் 2016-ல் வெளியாகி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக வரவேற்பை பெற்றது. இதில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். சீனுராமசாமி இயக்கினார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தர்மதுரை படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய எந்த பக்கம் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.ச...
செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ … தனுஷ் ஜோடியாக இந்துஜா!

செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ … தனுஷ் ஜோடியாக இந்துஜா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. தற்போது இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதில் கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த இந்துஜா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்....
உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” 

உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” 

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்திற்கு “நெஞ்சுக்கு நீதி” என படத்தின் தலைப்பு வைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் கலைஞர் கருணாநிதி எழுதிய புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப...
வழக்கறிஞராக சூர்யா மிரட்டும் ஜெய் பீம் டீசர்!

வழக்கறிஞராக சூர்யா மிரட்டும் ஜெய் பீம் டீசர்!

HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
https://youtu.be/pVOd8HAQQZM *ஜெய் பீம் டீஸர் வெளியானது: வழக்கறிஞராக மிளிரும் சூர்யா* தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் ஜெய் பீம். அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. வெளியாகவுள்ள நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் பரபரப்பான டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்று...
கிராமத்தான குணமாதானே பார்த்துருக்க… கோபப்பட்டு பார்த்ததில்லயே…டீசரில் தெறிக்க விடும் அண்ணாத்த ரஜினி!

கிராமத்தான குணமாதானே பார்த்துருக்க… கோபப்பட்டு பார்த்ததில்லயே…டீசரில் தெறிக்க விடும் அண்ணாத்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
கிராமத்தான குணமாதானே பார்த்துருக்க... கோபப்பட்டு பார்த்ததில்லயே... டீசரில் தெறிக்க விடும் அண்ணாத்த ரஜினி.   https://www.youtube.com/watch?v=EqOSFhIKbRg&t=3s   ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் 2 பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு அண்ணாத்த டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் கிராமத்தான குணமாதானே பார்...
செல்வராகவன் – தனுஷ் படத்தின் புதிய அப்டேட்!

செல்வராகவன் – தனுஷ் படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
செல்வராகவன் - தனுஷ் படத்தின் புதிய அப்டேட்! காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடித்து வந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நானே வருவேன் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார்....
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா?: தொடர்ந்து இன்றும் விசாரணை!

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா?: தொடர்ந்து இன்றும் விசாரணை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா?: தொடர்ந்து இன்றும் விசாரணை! மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கலந்து கொண்டது தெரியவந்தது. பொதைப்பொருள் பயன்படுத்தியதாக அவருடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நான்கு நாட்கள் தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று முறை ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் சிறையில் இருந்து வெளியில் வர முடியாமல் உள்ளார். இந்த நிலையில் ஆர்யன் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியது, விற்பனை செய்த வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என தேசிய பொதைப்பொருள் தடுப்புப்பிரிவு...