புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் இணைந்த நடிகர் பிரகாஷ்ராஜ் !

ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் இணைந்த நடிகர் பிரகாஷ்ராஜ் !

HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் இணைந்த நடிகர் பிரகாஷ்ராஜ் ! ஆதி நடிப்பில் உருவாகி வரும் “கிளாப்” படப்பிடிப்பில் அனுபவத்தில் மூத்த நடிகரான பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனால் படக்குழுவில் அனைவரும் பெரும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் இயக்குநர் பிரித்வி ஆதித்யா இது குறித்து கூறியதாவது... சினிமாவில் பலருக்கு முன்னுதரனமாக, மிகசிறந்த நடிகராக திகழும் பிரகாஷ் ராஜ் போன்ற நடிகரோடு பணிபுரிவது வளரும் இயக்குநர்கள் அனைவருக்குமே ஒரு பெரும் கனவு. நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே மிகச்சிறந்த நடிகராக தன்னை அவர் வடிவமைத்து கொண்ட விதமும், அவர் தேர்ந்தெடுத்து நடித்த பாத்திரங்களில் வெளிப்படுத்திய நடிப்பும், இந்திய சினிமாவில் பன்மொழிகளிலும் அவர் பணியாற்றிய விதமும், அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் பெரும்பயணம். ஒரு நடிகராக மற்றுமின்றி இயக்குநராக, தயாரிப்பாளராக, தரமான படைப்புகள...
அனிமேஷன் படமாக உருவாகும் மெகா பட்ஜெட் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

அனிமேஷன் படமாக உருவாகும் மெகா பட்ஜெட் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  விஜய்யின் 65-வது படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென அப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் யாருடைய படத்தை இயக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ‘தி லயன் கிங்’ போன்று முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது....
மாநாடு படத்தில் சிம்பு இரட்டை வேடமா?

மாநாடு படத்தில் சிம்பு இரட்டை வேடமா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தில் சிம்பு இரட்டை வேடமா? வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி வருகிறது. சமீபத்தில் மாநாடு படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இதில் இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு இடம்பெற்றிருந்தார். இதனால் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவின. இந்நிலையில், இதுகுறித்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.  அதில் அவர் கூறியதாவது: ‘மாநாடு’ படத்தில் சிம்பு ஒரே வேடத்தில்தான் நடித்து வருகிற...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புதிய தலைவராக ராமசாமி  முரளி தேர்வு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புதிய தலைவராக ராமசாமி  முரளி தேர்வு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புதிய தலைவராக ராமசாமி  முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபல இயக்குநரான டி.ராஜேந்தர் 169 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் : மொத்தம் பதிவான வாக்குகள்-1050 ராமசாமி முரளி-557 டி.ராஜேந்தர்-388 தேனப்பன்-88 செல்லாதவை-17 கெளரவ செயலாளர் பதவிக்கான தேர்தலில் ராதாகிருஷ்ணனும், மன்னனும் வெற்றி பெற்றுள்ளனர். துணைத் தலைவர்களில் ஒருவராக வெற்றி பெற்ற கதிரேசன், சுயேட்சையாக போட்டியிட்டவர். கெளரவ செயலாளர்களில் ஒருவராக வெற்றி பெற்ற மன்னன், டி.ராஜேந்தர் அணியில் போட்டியிட்டவர். மற்ற வெற்றியாளர்கள் அனைவரும் ராமசாமிமுரளி அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது...
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாலையாக போட்டிருக்கும் பிரியா ஆனந்த்

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாலையாக போட்டிருக்கும் பிரியா ஆனந்த்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார் பிரியா ஆனந்த். தமிழில் கடந்த ஆண்டு பிரியா ஆனந்த் நடித்திருந்த ஆதித்ய வர்மா, எல்கேஜி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. திரைப்படங்கள் மட்டுமல்லாது தற்போது இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நாயகியாக நடித்துள்ளார் பிரியா ஆனந்த். ‘சிம்பிள் மர்டர்’ என்ற டைட்டிலில் பிளாக் காமெடி வெப் சீரிஸாக உருவாகியுள்ள இத்தொடரின் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியா ஆனந்த். அதில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாலையாக போட்டிருக்கும் பிரியா ஆனந்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது....
நடிகர் ரஜினிகாந்த்திற்கு காய்ச்சல் என்று வெளியான தகவல் உண்மையில்லை

நடிகர் ரஜினிகாந்த்திற்கு காய்ச்சல் என்று வெளியான தகவல் உண்மையில்லை

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த்திற்கு காய்ச்சல் என்று வெளியான தகவல் உண்மையில்லை என்று பி.ஆர்.ஓ ரியாஸ் விளக்கமளித்துள்ளார். நடிகை, நடிகைகள் குறித்து வழக்கமாக வதந்திகள் பரவுவதும் ,அதற்கு அவர்கள் விளக்கமளிப்பதும் வழக்கம் தான் . அந்த வகையில் இன்று காலை முதல் ரஜினிகாந்த் அவர்களுக்கு காய்ச்சல் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது . இதனால் ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்கள் வாயிலாக ரஜினியின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கமளித்த பிஆர்ஓ ரியாஸ் அகமது, ரஜினிக்கு காய்ச்சல் என்று பரவி வரும் தகவல் வதந்தி. அவர் பண்ணை வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியதில் உண்மை இல்லை. அவர் உடல்நிலை நன்றாக இருக்கிறது. எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளார்....
வெப் சீரிஸில் பெண் போலீஸ் அதிகாரியாக விமலா ராமன்

வெப் சீரிஸில் பெண் போலீஸ் அதிகாரியாக விமலா ராமன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  சேரனுக்கு ஜோடியாக நடித்த நடிகை விமலா ராமன் வெப் சீரிஸில் பெண் போலீஸ் அதிகாரியாக கலக்கி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்று பார்வையாளர்களிடத்தில் சேரப்பா என்றே அப்பாவாக மனதில் பதிந்தவர் இயக்குனர் சேரன். பொறுப்பான இயக்குனராக சமூகத்திற்கு நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என படத்தின் மூலம் நிரூபித்தவர். அவர் நடித்த படங்களில் ஒன்று ராமன் தேடிய சீதை. கடந்த 2018 செப்டம்பர் 19 ல் இப்படம் வெளியானது. கே.பி.ஜெகநாத் இயக்கத்தில் இப்படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை விமலா ராமன் நடித்திருந்தார். மழை நின்ற பின்பும் தூறல் போடல் பாடலினால் அவரின் முகம அனைவரின் மனதையும் ஈர்த்தது. பாலசந்தர் இயக்கத்தில் பொய் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராமன் தேடிய சீதை, இருட்டு படங்களில் நடித்திருந்தார். மலையாளம், தெலுங்கு படங்களில் அதிகம் நடி...
விஜய் சேதுபதி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய ஸ்ருதி ஹாசன்!

விஜய் சேதுபதி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய ஸ்ருதி ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  படப்பிடிப்பில் இருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் எஸ்.பி. ஜெகநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லாபம். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பல மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பு நடைபெறுவதால், விஜய் சேதுபதி ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லாபம் படப்பிடிப்பு தளத்தில் தன்னை காண வந்த ரசிகர்களை விஜய் சேதுபதி கட்டிப்பிடித்து தனது வழக்கமான பாணியில் முத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. இந்த தகவலை அறிந்த ஸ்ருத...