புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

சுஷாந்த் சிங் காதலி ரியாவுக்கு மீண்டும் சம்மன்!

சுஷாந்த் சிங் காதலி ரியாவுக்கு மீண்டும் சம்மன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் (என்சிபி) ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது சுஷாந்த் சிங் வீட்டில் ஹவுஸ்கீப்பிங் மேனேஜராக பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோரின் வீடுகளில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். விசாரணைக்கு ...
தென்னிந்திய திரையுலகை முற்றிலுமாக  புறக்கணிக்கும் மத்திய அரசு!

தென்னிந்திய திரையுலகை முற்றிலுமாக புறக்கணிக்கும் மத்திய அரசு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  திரையரங்குகள் மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினரோடு வரும் 8ம் தேதி கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த கூட்டத்தில் தென்னிந்தியாவில் உள்ள எந்த சங்கத்திற்கோ, திரையரங்கு உரிமையாளர்களுக்கோ அழைப்பு இல்லை. ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவை புறக்கணித்து இந்த கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. தென்னிந்திய வர்த்தக சபையான பிலில் சேம்பர் என்ன செய்கிறது? ஆண்டுக்கு சில படங்களை மட்டும் எடுக்கும் குஜராத்தில் இருந்து இரு அமைப்புகளுக்கு அழைப்பு. ஆண்டு முழுதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 800க்கும் அதிகமாக படமெடுக்கும் தென்னிந்திய திரையுலகம் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது வேதனையான உண்மை. திரைத்துறை இப்போதாவது விழித்துக் கொள்ளுமா! - கோடங்க...
திருமண மண்டபமாக மாறும் ஏவிஎம் ஜி தியேட்டர்!

திருமண மண்டபமாக மாறும் ஏவிஎம் ஜி தியேட்டர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    சினிமா தொழில் நாளுக்கு நாள் நசிந்து கொண்டு வருவதை தொடர்ந்து, சென்னையில் அமைந்திருந்த ஸ்டூடியோக்களும், தியேட்டர்களும் காணாமல் போய்விட்டன. அவை இருந்த இடம் தெரியாத அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. இதற்கு ஏவி.எம். ஸ்டூடியோவும் விதிவிலக்கு அல்ல என்றாகிவிட்டது. ஏவி.எம். ஸ்டூடியோவின் ஒரு பகுதி அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்டது. இன்னொரு பகுதி ஆஸ்பத்திரியாக மாறியிருக்கிறது. ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரும் வேறு ஒரு வடிவத்துக்காக இடிக்கப்படுகிறது. ஏவி.எம். ஸ்டூடியோவின் அழகான அடையாளமாக இருந்த ‘கார்டன் ஸ்டூடியோ’ விரைவில் திருமண மண்டபமாக மாறுகிறது. ‘கார்டன் ஸ்டூடியோ’வில் பரந்து விரிந்த புல்வெளியும், அதற்கு நடுவில் ஒரு வட்ட வடிவமான மண்டபமும் உள்ளன. அதையொட்டி ஒரு ‘டப்பிங்’ தியேட்டரும், பங்களாவும் அமைந்துள்ளன .ஆயிரக்கணக்கான பட...
பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை!

பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை! கடந்த ஜூன் 15ந்தேதி லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து தேச பாதுகாப்பு நலன்களை கவனத்தில் கொண்டு மத்திய அரசு டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 116 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்நிலையில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது....
இரட்டை இயக்குனர்களின் குதிரைவால் ஒரு வித்தியாசமான படைப்பு!

இரட்டை இயக்குனர்களின் குதிரைவால் ஒரு வித்தியாசமான படைப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இரட்டை இயக்குனர்களின் குதிரைவால் ஒரு வித்தியாசமான படைப்பு! புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ். இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தது வெற்றியையும், பெரும் வரவேற்ப்பையும் பெற்றுத் தந்தது. அடுத்தடுத்து தயாரிப்புப்பணிகளில் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது. இன்னிலையில் நடிகர் கலையரசன் , அஞ்சலிப்பாட்டில் நடித்த 'குதிரைவால்' என்கிற படத்தை வெளியிடுகிறது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். வித்தியாசமான முயற்சிகளை எப்போதும் ஊக்கப்படுத்தும் வகையில் விரைவில் 'குதிரைவால்' படத்தை வெளியிட இருக்கிறார்கள். குதிரைவால் படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது. அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சு...
சென்னையில் இருந்து தனி விமானத்தில் காதலருடன் கேரளா பறந்த நயன்தாரா!

சென்னையில் இருந்து தனி விமானத்தில் காதலருடன் கேரளா பறந்த நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளா சென்ற நடிகை நயன்தாரா வைரல் ஆகும் படம். வைரஸ் பீதியால் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் ஜோடி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் விமானத்தில் பறந்திருக்கிறார்கள். அதுவும் தாங்கள் 2 பேர் மட்டுமே அந்த தனி விமானத்தில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு பறந்திருக்கிறார்கள். கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் சென்னை திரும்ப திட்டம். தனி விமானத்தில் சென்றாலும் விமானத்தில் இருந்து இறங்கி செல்லும்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் மாஸ்க் அணியாமல் செல்வதை யாரும் சர்ச்சை ஆக்காமல் இருந்தால் சரி....
சுஷாந்த்சிங் காதலி ரியாவிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை!

சுஷாந்த்சிங் காதலி ரியாவிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  சுஷாந்த்சிங் காதலி ரியாவிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை! பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் பாட்னா போலீசார் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து வழக்கை விசாரிக்கும் உரிமை யாருக்கு என்பதில் மராட்டியம், பீகார் மாநிலங்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பீகார் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று வழக்கை மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது இதையடுத்து டெல்லியில் இருந்து மும்பை வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் ம...
சூரரைப் போற்று சொன்னதை செய்த சூர்யா!

சூரரைப் போற்று சொன்னதை செய்த சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'சூரரைப் போற்று ' வெளியீட்டுத் தொகையில் இருந்து சூர்யா 5 கோடி நிதியுதவி! சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2D என்டர்டைன்மென்டின் 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. கொரோனாவால் வாழ்வு முடக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரண காலத்தில் திரையரங்குகள் இயங்க முடியாத நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் 'சூரரைப்போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க சூர்யா அறிவித்திருந்தார். 'பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் போராட்டக் களத்தில் முன்னின்று பணியாற்றிய வர்களுக்கும் இந்த 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்' என்று சூர்யா தெரிவித்திருந்தார். அதை செயல் படுத்தவும் தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக 1.5 கோடி ...
பிறந்த நாளில் அத்தை ஜெ.சமாதியில் அஞ்சலி செலுத்திய அவரது வாரீசு தீபக்!

பிறந்த நாளில் அத்தை ஜெ.சமாதியில் அஞ்சலி செலுத்திய அவரது வாரீசு தீபக்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழகத்தின் முதல்வராக இருந்த செல்வி. ஜெ.ஜெயலலிதா, சில நாட்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம்ம் தேதி இறந்துவிட்டார். அவருக்கு பிறகு சில நாட்கள் ஓ.பன்னீர்செல்வம் தற்கால முதல்வராக இருந்து வந்தார். கட்சியில் பல பிரச்சனைகள் அரங்கேறி, பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கையில் அமர்ந்தார். ஜெயலலிதாவுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு, ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்க இன்றுவரை முயற்சித்து வருகிறது. எடப்பாடி அரசின் இந்த முயற்சியை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா மற்றும் மகன் தீபக் இருவரும் நீதிமன்றம் சென்று அவர்கள் இருவர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என அறிவிக்க வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரி...