செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

பிக்பாஸ் கவின் நடிக்கும் “லிப்ட்”

பிக்பாஸ் கவின் நடிக்கும் “லிப்ட்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பாசிட்டிவான வார்த்தையில் டைட்டில் இருப்பது படத்திற்கே பாசிட்டிவாக இருக்கும். லிப்ட் என்ற டைட்டில்  அப்படியொரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொண்டுள்ளது. ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லிப்ட் படத்தை ஹேப்ஸி  தயாரிக்கிறார். படத்தின் கதையை வெகு வித்தியாசமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத். இவர் விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர். பிக்பாஸ் மூலம் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்ட கவின் பிக்பாஸில் இருந்து வெளிவந்த உடன் நாயகனாக நடிக்கும் முதல்படம் இது.     கவின் ஜோடியாக  நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற நடிக நடிகையர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போலவே படத்தின் டெக்னிக்கல் டீமும் செம்மயாக இணைந்திருக்கிறார்கள். படத்தில் கேமராமேனாக S யுவா இணைந்துள்ளார். பாடல்களிலும் பின்னணி இசையிலும் ம...
முதல்வர் பதவிக்கு ஆசையில்லை என்ற ரஜினி ஒரு அற்புதமான மனிதராம் – சொல்கிறார் பாரதிராஜா

முதல்வர் பதவிக்கு ஆசையில்லை என்ற ரஜினி ஒரு அற்புதமான மனிதராம் – சொல்கிறார் பாரதிராஜா

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை:   எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் 'ரஜினி' என்ற மந்திரத்தை விட, 'ரஜினி' என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது. தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு, ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும். ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம். ஆருயிர் நண்ப...
சாந்தனு – அதுல்யா ஜோடி நடிக்கும் படத்தில் பாக்யராஜ்!

சாந்தனு – அதுல்யா ஜோடி நடிக்கும் படத்தில் பாக்யராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா நடிக்கும் புதிய படம் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக 'நட்புன்னா என்னான்னு தெரியுமா' உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ்' சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் ஆகியோருடன் இணைந்து, கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்கவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய அனுபவத்துடன், மலையாளத்தில் 'லாவெண்டர்', தமிழில் 'ஜாம்பவான்' உள்ளிட்ட படங்களில் இணை - துணை இயக்குனராக பணியாற்...
கமலியாக மாறிய கயல் ஆனந்தியின் ஹைடெக் காதல் கதை!

கமலியாக மாறிய கயல் ஆனந்தியின் ஹைடெக் காதல் கதை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
      காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் 'கமலி from நடுக்காவேரி'. ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. புதுமுகங்களை நம்பி ஒரு புதுமுக இயக்குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்த படம். கவிதையாக ஒரு காதல்.. தரமான ஒளிப்பதிவு, தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜசேகர். ஆனந்தியின் நடிப்பு படம் வந்தபிறகு எல்லோராலும் பாராட்டப்படும். பின்னணி இசையும் பாடல்களும் திரைக்கதைக்கு உதவும் விதத்தில் அழகாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர்....
மாஸ்டர் விஜய் வாயை மூட மீண்டும் மீண்டும் ரெய்டு மிரட்டலா!?

மாஸ்டர் விஜய் வாயை மூட மீண்டும் மீண்டும் ரெய்டு மிரட்டலா!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை! பிகில் பட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய் வீட்டில் 48 மணி நேரம் சோதனை செய்தனர். அதற்கு முன் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நுழைந்து ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு விஜய்யை அழைத்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 15ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் கடந்த 2 நாட்களாக வருமானவரித்துறை திடீர் சோதனை நடத்தியது. மாஸ்டர் பட வியாபாரம் தொடர்பாக இந்த சோதனை நடந்ததாம். அதன் அடிப்படையில் மீண்டும் விஜய் வீட்டில் சோதனை நடை பெறுகிறது. ஒவ்வொரு பட ஆடியோ விழாவின் போதும் விஜய் குட்டிக்கதைகள் மூலம் ஆளுங்கட்சியின் அவலங்களை குறிப்பிடுவது...
நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை… கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் – ரஜினி அறிவிப்பால் தொண்டர்கள் ஷாக்!

நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை… கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் – ரஜினி அறிவிப்பால் தொண்டர்கள் ஷாக்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை... கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் - ரஜினி அறிவிப்பால் தொண்டர்கள் ஷாக்! நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியது; 1996ல் இருந்து 25 வருடமாக நான் அரசியலுக்கு வரேன் என சொல்கிறேன் என்கிறார்கள் ஆனால் நான் 2017ல் தான் அப்படி கூறினேன் இந்தியாவில் தேசிய கட்சியை தவிர மாநில கட்சியில் ஆட்சி கட்சிக்கு ஒருவரே தலைவர். அவ்வாறு இருப்பதால் மக்களுக் சரி கட்சியிலும் சரி யாரும் கேள்வி எழுப்ப முடியவில்லை அதனால் நாம் ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை முடிவு செய்து உள்ளோம். மக்கள் மாற்று அரசியலை தான் கேட்டார்கள் நான் இந்த திட்டத்தை அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகளிடம் இது குறித்து ஆலோசனை செய்தேன் அரசியல்வாதிகள் இந்த திட்டத்தை ஏற்கவில்லை நீங்கள் முதல்வர் இல்லை என்றால் சரியாக வராது என அனைவரும் தெரிவி...
தொடர் ஆபாச கமெண்ட்…  அஜீத்தை சந்திக்கு இழுக்கும் கஸ்தூரியின் ஆவேச பதிவு!

தொடர் ஆபாச கமெண்ட்… அஜீத்தை சந்திக்கு இழுக்கும் கஸ்தூரியின் ஆவேச பதிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    ஆபாச கமெண்ட் ரசிகரை கண்டிக்காம அஜீத் எவ்ளோ நாள் இப்படி மவுனமா இருப்பீங்க - கஸ்தூரி ஆவேசம் நடிகை கஸ்தூரி படங்களில் நடித்து பிசியா இருக்காரோ இல்லியோ சமூக வலை தளங்களில் பிசியாக இருப்பார். அடிக்கடி அரசியல், சமூக கருத்தை பதிவு செய்து பலரின் பல்ஸை எகிற வைப்பார். அப்படி ஆக்டிவ் ஆக இருக்கும் கஸ்தூரியை அஜீத் ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் ஆபாசமாக கமெண்ட் அடித்து தொடர் பதிவுகள் போட்டனர். இதில் ஆவேசம் அடைந்த கஸ்தூரி தனது குருவி பக்கத்தில் அஜீத்தையும், அவரது மேனேஜர் பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திராவையும் குறிப்பிட்டு "எத்தனை நாட்கள் இப்படி அமைதியாக இருப்பீர்கள். இதையெல்லாம் தட்டிக் கேட்க மாட்டீர்களா. உங்கள் மவுனம்தான் அவர்களுக்கு இப்படி எழுத தோன்றுகிறது" என குறிப்பிட்டு பதிவு போட்டிருக்கிறார். இதற்கு அஜீத் ரசிகர்கள் பெயரில் பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்....
ரஜினி திடீர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இந்த ஜோதிடரின் ஆலோசனைதான் காரணமா!?

ரஜினி திடீர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இந்த ஜோதிடரின் ஆலோசனைதான் காரணமா!?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் ஆன்மீகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். கடவுள் நம்பிக்கை, ஆன்மீக பயணங்களில் அடிக்கடி ஈடுபடுபவர். பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் எப்படியும் அரசியலுக்கு வந்து விட வேண்டும் என காத்திருக்கும் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக கடந்த ஆண்டு தான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நல்லது செய்ய காத்திருக்கிறேன். எனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என அறிவித்திருந்தார். ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து ஆளாளுக்கு கருத்துக்களை அள்ளி விட்டனர். இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த். இந்த ஆலோசனை குறித்து யாரும் எந்த கருத்தையும் வெளியில் குறிப்பாக மீடியா கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் அதை மீறி தகவல் வெளியானால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று ரஜினி எச்சரிக்கை...
சென்சார் காட்சியில் சிரித்து மகிழ்ந்து அதிகாரிகள் பாராட்டை பெற்ற அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

சென்சார் காட்சியில் சிரித்து மகிழ்ந்து அதிகாரிகள் பாராட்டை பெற்ற அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சென்சார் காட்சியில் சிரித்து மகிழ்ந்து அதிகாரிகள் பாராட்டை பெற்ற அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம் சென்சாரில் யூ சான்றிதழ் வாங்கியுள்ளது. சென்சார் பெறுவதற்கான காட்சியை பார்த்த சென்சார் உறுப்பினர்கள் பலரும் ரசிகராக மாறி சிரித்து மகிழ்ந்தது குறிப்பிடதக்கது. படமும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கிறது எனபது படத்தின் பிளஸ். இந்த திரைப்படம் அடுத்த மாதம் விடுமுறையை மனதில் வைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். சின்னத்திரை விளம்பரங்களை இயக்கி வந்த அவினாஷ் ஹரிஹரன் இயக்குனராகி இருக்கிறார். ஆராஸ் சினிமாஸ் மகேஷ் படத்தை தயாரித்திருக்கிறார். வீரா, மாளவிகாநாயர், பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தில் நடித்திருக்கிறார்கள்....
துப்பறிவாளன் 2 படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்!

துப்பறிவாளன் 2 படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  #துப்பறிவாளன்2 படத்தை நானே இயக்குகிறேன். மிஷ்கினுக்கு விஷாலின் பதில் . இயக்குநராக அறிமுகமாக மக்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை 6மணிக்கு படத்தின் முதல்  தோற்றத்தை  வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். - விஷால் ————————- “துப்பறிவாளன்2” படத்தின் இரண்டாவது கட்ட படபிடிப்பு முன்னதாக , நடிகர், தயாரிப்பாளர் விஷால்-க்கு டைரக்டர் மிஷ்கின் போட்ட திடீர் நிபந்தனை விதித்தார். அது இன்று இணையதளம் மற்றும் ஊடகங்களில் வெளியானது. அதற்கு விஷால் பதிலளித்துள்ளதாவது. —————— ஒரு இயக்குநர் திரைப்படத்தை விட்டு பாதியில் விலகுவதற்கான காரணங்கள் என்னென்ன? கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்க...