செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் – வரலட்சுமியின் பகீர் புகார்

வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் – வரலட்சுமியின் பகீர் புகார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. மீ டூ என்ற புதிய பரபரப்பின் மூலமாக பலரும் தங்களின் முந்தைய கசப்பான அனுபவங்களை சொல்லி வருகிறார்கள். அப்படி தான் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஒரு பகீர் விஷயத்தை சொல்லியிருக்கிறார் "தான் ஒரு பிரபலமானவரின் வாரிசு நடிகை என தெரிந்தும் கூட தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் என்னிடம் கூறினர். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டேன். அப்படி பேசியவர்களின் ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது ஏற்க முடியாது. பெண்கள் தங்களை பாதுகாக்க தாங்களே தயார் ஆகி கொள்ள வேண்டுமாம் சொல்கிறார் வரலட்சுமி. வரலட்சுமியின் பகீர் புகார் திரையுலகில் பரபரப்பை ...
முன்னாள் பத்திரிகையாளரின் படத்தலைப்பின் பாதியை எடுத்துக் கொண்ட சூர்யா- ஹரி!

முன்னாள் பத்திரிகையாளரின் படத்தலைப்பின் பாதியை எடுத்துக் கொண்ட சூர்யா- ஹரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கும் புதிய படம் அருவா! ஹரியும் சூர்யாவும் இணைந்து சிங்கம், வேல் என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியை இணைத்தது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா. இவர் தயாரிப்பில் உருவாக உள்ள படத்துக்கு அருவா என்று பேர் வைத்து இருக்கிறார்கள். டி இமான் இசையமைக்கிறார். ஏப்ரலில் தொடங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டம். படத்தலைப்பு அருவா என்பதால் கண்டிப்பாக ஆக்‌ஷன் தூள் பறக்கும் என தெரிகிறது. அதே நேரம் அருவா படத்தலைப்பு சின்ன சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ஹிட் ஆன சிலந்தி படத்தின் இயக்குனர் ஆதிராஜன் இப்போது அருவா சண்ட என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இதில் சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சென்சார் அதிகாரிகளால...
சந்தானத்தின் டிக்கிலோனா ஷூட்டிங் ஓவர்!

சந்தானத்தின் டிக்கிலோனா ஷூட்டிங் ஓவர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.  இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கும் அளவில் இருக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த  ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்க...
விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்!

விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்! சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. அப்போது நடிகர் விஜய் சேதுபதி கலை இயக்குநர் சதீஷ் குமாருக்கு வாழ்த்துச் சொல்லி கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விஜய் தனக்கும் ஒரு முத்தம் வேண்டும் என்று விஜய் சேதுபதியிடம் கேட்க, அவருக்கு அன்பு முத்தமிட்டார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு முடியும் தருணத்தில் விஜய்யின் முகத்தை இரு கைகளாலும் பிடித்து விஜய் சேதுபதி அப்படியே விஜய் கன்னத்தில் முத்தம் பதிக்க சுற்றி இருந்த மாஸ்டர் படக்குழு கை தட்டி ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இந்த முத்த விவகாரம் சில நாட்களுக்கு முன் நடந்திருந்தாலும் இப்போது தான் முத...
அம்மன் வேஷத்தில் சூலாயுதம் ஏந்திய நயன்தாரா!

அம்மன் வேஷத்தில் சூலாயுதம் ஏந்திய நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் ரொமப காலமாக அம்மன் படங்கள் எடுக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. முன்பெல்லாம் அம்மன் வேஷம் என்றாலே கே.ஆர்.விஜயாதான் அம்மன் ஆக இருப்பார். இப்போது பக்தி படங்கள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா அம்மன் ஆக நடிக்க மூக்குத்தி அம்மன் என்ற படம் அறிவிக்கப்பட்டது. அம்மன் வேஷத்தில் நடிக்கும் நயன்தாரா அந்த வேஷத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக மாமிச உணவுகளை தவிர்த்தார். விரதம் இருந்தார். பல அம்மன் கோயிகளுக்கு விஜயம் செய்து வழிபட்டார். இந்த படத்தில் அம்மன் ஆக நடிப்பதால் தனது தயாரிப்பில் தான் நடிப்பதாக அறிவித்து தொடங்கிய நெற்றிக்கண் பட ஷூட்டிங்கை கூட தள்ளி வைத்தார். இந்த சூழலில் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மன் வேஷத்தில் இருக்கும் டிசைனை இன்று வெளியிட்டது படக்குழு. அதில் சிவப்பு சேலையில் கையில் சூல...
இந்தியன் 2 விபத்து பலியானவர்களுக்கு ஷங்கர் ஒரு கோடி நிதி அறிவிப்பு!

இந்தியன் 2 விபத்து பலியானவர்களுக்கு ஷங்கர் ஒரு கோடி நிதி அறிவிப்பு!

CINI NEWS, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன். ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு பெரிய project-ஐ சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டு, களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா. ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்துவிட்டார் என்ற என் சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம். அன்று கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றிருந்த போது அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது. எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைப்படும் போதெல்லாம் டீ, காபி, தண்ணீர், பிஸ்கெட் என்று எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உ...
மதக்கலவரங்களும், ஜாதி மோதல்களும் இந்திய மண்ணில் அதிகரித்து உள்ளது – கன்னிமாடம் படத்தை பார்த்த பின் திருமாவளவன் பேட்டி

மதக்கலவரங்களும், ஜாதி மோதல்களும் இந்திய மண்ணில் அதிகரித்து உள்ளது – கன்னிமாடம் படத்தை பார்த்த பின் திருமாவளவன் பேட்டி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஒத்த ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்து போஸ் வெங்கட் இயக்கத்தில் கடந்த 21ம் தேதி வெளியான படம் கன்னி மாடம். ஆண்வ கொலைக்கும், சாதி வெறிக்கும் எதிராக எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பார்த்தார். படம் பார்த்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இன்றைய கால கட்டத்திற்கு தேவையான படமாக கன்னி மாடம் வெளி வந்துள்ளது, சாதி வெறியாட்டமும் மத வெறியாட்டமும் இன்றைக்கு இந்திய மண்ணில் தலை தூக்கியுள்ளது. இவையிரண்டும் வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது. நாம் வெட்கி தலைகுனியும் அளவுக்கு பெருகி வருகிறது. ஆணவக் கொலைகள், தீ வைப்பு, என்று இன்றைய காலச் சூழல் பதற்றமாகியுள்ள நிலையில் தந்தை பெரியாரின் சிந்தனைகள், புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகள் பரவலாக மக்களிடையே கொண்டு சே...
டெல்லி வன்முறை கலவரம் மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்

டெல்லி வன்முறை கலவரம் மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டெல்லி வன்முறை கலவரம் மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால்தான் முதல் ஆளாக நிற்பேன் என்று கூறியிருந்தேன். உளவுத்துறையின் தோல்வி தான் டெல்லி வன்முறைக்கு காரணம். மத்திய அரசின் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டும். போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது. அமைதியாக நடைபெறலாம். டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும். குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறாது என நினைக்கிறேன். சில கட...
சர்ச்சையை ஏற்படுத்துமா திரெளபதி!

சர்ச்சையை ஏற்படுத்துமா திரெளபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘திரெளபதி’. இதில் ரிச்சர்டு நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் ஜீவா ரவி, கருணாஸ், நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜுபின் இசையமைக்க மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி கூறுகையில், இந்தப் படம் திரைக்கு வருவதே ஒரு வெற்றி. கூட்டு முயற்சியில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படம் எந்த நோக்கத்துக்காக எடுக்கப்பட்டதோ, அந்த நோக்கம் ஒரு எள்ளளவு கூட குறையாமல் வந்து சேரும். இந்த விழிப்புணர்வு நிச்சயமாக ஏற்பட்டே தீரும். இது அனைத்து தரப்பு மக்களுக்குமான படம். சில உண்மை சம்பவங்கள் மக்களுக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்கிற மோகன் படத்தின் விளம்பரத்திலேயே "சாதிகள் உள்ளதடி பாப்பா" என பாடலை மாற்றி சர்ச்சையை கிளப்...
இளையராஜா இசையில் இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’!

இளையராஜா இசையில் இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    இயக்குநர் சாமியின் 'அக்கா குருவி' படத்தில் இணைந்த இளையராஜா. புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் 'சில்ரன் ஆஃப் ஹெவன்'. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் மறு உருவாக்கத்தின் உரிமையை 'உயிர்', 'மிருகம்' மற்றும் 'சிந்து சமவெளி' படத்தின் இயக்குனர் சாமி வாங்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:- நான் இயக்கிய மேற்கண்ட மூன்று படங்களும் என்னுடைய அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல் தான் இயக்கப் போகிறேன். ஒருமுறை என் அக்கா என் வீட்டிற்கு வந்தபோது 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' திரைப்படத்தை குழந்தைகளுக்கு போட்டுக் காண்பித்தேன். உலகில் உள்ள அனைத்து தரப்பு குழந்தைகளிடம் எப்படி கலந்துள்ளது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்தேன். இதுபோ...