செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

“கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன்!

“கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    “கபடதாரி” படத்தில் பூஜாகுமாருக்கு பதிலாக சுமன் ரங்கநாதன் நடிகர் சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவை கலக்கிய “காவலுதாரி” படத்தின் தமிழ் பதிப்பு “கபடதாரி” எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள் கொண்டதாக கதைக்கு பெரும் முக்கியத்துவம் மிக்க கதாப்பாத்திரமாக இவரது கதாப்பத்திரம் உள்ளது. மேலும் கன்னட பதிப்பில் இவரே இந்தக்கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. சுமன் ரங்கநாதன் 90களில் தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து, மிகவும் புகழ்பெற்ற ஹீரோயினாக விளங்கியவர். நடிகர் விஜய்காந்துடன் இணைந்து நடித்த “மாநகர காவல்”. நடிகர் அர்ஜீனுடன் இணைந்து நடித்த “மேட்டுபட்டி” படங...
ஓ மை கடவுளே அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

ஓ மை கடவுளே அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      ஓ மை கடவுளே படம் பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்த போது; நடிகர் அசோக் செல்வன் பேசியது... ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். என் அக்கா அபிநயா செல்வம் பிரில்லியண்ட். என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். ஆனால் மிகப்பெரும் தைரியமாக படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்கு பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம் லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். விது , பூபதி எல்லோருமே நண்பர்கள். இவர்களுடன் வேலை பார்த்தது சந்தோஷம். வாணி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ரித்திகா இப்போது நெருக்கமான நண்பியாக மாறிவ...
கதை,திரைக்கதை எழுதி நடிக்கும்  படத்தில் நித்தியாமேனனை ஜோடியாக்கிய தனுஷ்!

கதை,திரைக்கதை எழுதி நடிக்கும் படத்தில் நித்தியாமேனனை ஜோடியாக்கிய தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் கதை,திரைக்கதை எழுதிய படத்தில் ஜோடியான நித்யாமேனன்! தனுஷ் இரட்டை வேட நடிப்பில் கடந்த மாதம் வெளியான பட்டாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சுருளி படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இப்போது தாணு பிரமாண்டமாக தயாரிக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர இந்தி படம் ஒன்றிலும் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனந்த் எல் ராய் இயக்கும் இப்படத்திற்கு ’அட்ராங்கி ரே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தனுஷ் நடிக்கும் 43-வது படம் குறித்த தகவல் வெளியானது. அப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார் தனுஷின் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை தனுஷ் கதை, திரைக்கதை எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்...
திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் – “ஜானு” சமந்தா அதிரடி

திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் – “ஜானு” சமந்தா அதிரடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் - "ஜானு" சமந்தா அதிரடி விஜய் சேதுபதி - திரிஷா நடித்த '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஜானு'வில் சர்வானந்தும், சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே திரிஷா நடிப்புடன் சமந்தாவை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் சமந்தா கூறியதாவது: இதுவரை நான் நடித்த அனைத்து படங்களையும் விட சிறப்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறேன். முக்கியமாக திரிஷாவின் நடிப்பை நகலெடுக்க விரும்பாமல் எனது சாயலில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். அதனால் அவரது நடிப்பில் இருந்து ஜானுவில் மாறுபட்ட சமந்தாவை பார்க்கலாம். 96 படத்தைப் பொறுத்தவரை திரிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஜானு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கண்டிப்பாக திரிஷாவை மறந்து விடுவார்கள்....
ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக!

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்எல்சி சுரங்கம் 2ன் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட இடத்தில் எப்படி அனுமதி வழங்கலாம் என சுரங்கத்தை முற்றுகையிட்டு  பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கடந்த 2 நாட்களாக நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனையில் விஜய் வீட்டில் ரொக்கம் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. வருமானவரித் துறை சோதனை முடிந்து விஜய் மீண்டும் மாஸ்டர் ஷூட்டிங் வந்தார். இந்த சூழலில் விஜய்க்கு எதிராக பாஜகவில் சிலர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்....
மூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் ‘2323’ படம்!

மூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் ‘2323’ படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் '2323' படம்! மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக '2323 The beginning 'உருவாகிறது. மூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைப் பின்னணியுடன் இந்தத்  தமிழ்ப் படம் உருவாகி வருகிறது.  கதை ,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கி வருகிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு 'தமிழனானேன்' என்றொரு படத்தை எடுத்திருந்தார்.  அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தமிழனின் வீரக்கலையான வர்மக்கலையை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெறுவது என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார்.  இந்த' 2323 'படத்தைப்  பற்றி இயக்குநர் பேசும் போது, "இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இப்படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும். ...
விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!

விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!! நடிகர் விஜய் நடித்த பிகில் பட வியாபாரத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங்கில் இருந்த விஜய் வருமானவரித் துறை அதிகாரிகளால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். சுமார் 35 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் மத்திய நேரடி வரி வாரிய ஊடகம் மற்றும் தொழில் நுட்பக்கொள்கை வருமான வரி ஆணையர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள திரைத்துறையை சார்ந்த தயாரிப்பாளர், ஒரு பிரபல நடிகர் மற்றும் அவருடைய வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகிய 4 முக்கியமானவர்கள் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை கடந்த 5-ந்தேதி சோதனை நடத்தி...
விஜய்தேவரகொண்டா படத்தில் ராஷிகன்னா நிர்வாணமாக நடித்தாரா?

விஜய்தேவரகொண்டா படத்தில் ராஷிகன்னா நிர்வாணமாக நடித்தாரா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய்தேவரகொண்டா படத்தில் ராஷிகன்னா நிர்வாணமாக நடித்தாரா? தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடித்துள்ள வேர்ல்டு பேமஸ் லவ்வர் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளிவந்து ஒரு வாரம் ஆகப் போகிறது. இப்போது அப்படத்தின் டீசரில் ராசி கண்ணா, ஒரு காட்சியில் நிர்வாணமாக குளிப்பது போன்றும், விஜய் தேவரகொண்டாவுடன் முத்தக் காட்சியும் பற்றி சர்ச்சை எழுந்துள்ளது. அது குறித்து பதிலளித்துள்ள ராசி கண்ணா, "அந்தக் காட்சிகள் கலைக் கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்டுள்ளன. படத்திற்கு அவை தேவையானவை. ஒரு கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அவற்றை எடுக்கவில்லை. படத்தைப் பார்க்காமல் அவை பற்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது," என்கிறார்....
ரவி வர்மன் ஓவியம் போல மாடல் ஆன நடிகைகள்!

ரவி வர்மன் ஓவியம் போல மாடல் ஆன நடிகைகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ரவி வர்மன் ஓவியம் போல மாடல் ஆன நடிகைகள்! ரவி வர்மாவின் எழில்மிகு ஓவியத்திற்கு புகைப்பட கலைஞரான ஜி வெங்கட் ராம் உயிர் கொடுத்துள்ளார். ’நாம்’ என்ற அறக்கட்டளையின் 2020 காலண்டருக்குகாக  வெங்கட் ராம் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது. ரவி வர்மாவின் ஓவியம் போன்று உடை, அணிகலன்கள் மற்றும் பாவனைகளுடன் எடுக்கப்பட்ட நடிகைகளின் புகைப்படங்கள் நிஜத்திற்கும் நிழலிற்கும் இடையேயான வித்தியாசத்தை குறைத்துள்ளன ஓவியத்தை போன்று நடிகைகள் சுருதி ஹாசன், சமந்தா, ரம்யாகிஷ்ணன், நதியா, குஷ்பு, ஷோபனா, பிரியதர்ஷினி கோவிந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், லிஸ்ஸி லஷ்மி, லஷ்மி மஞ்சு ஆகியோர் புகைப்படங்களுக்கு மாடலாகி உள்ளனர். இதில் குஷ்புவின் புகைப்படத்திற்கு வழக்கம் போல இயக்குனர் பார்த்திபன் கமெண்ட் ஒன்றை பதிவு செய்து சர்ச்சையில் சிக்கினார்....
வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை- நிறுத்தப்பட்ட மாஸ்டர் ஷூட்டிங்

வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை- நிறுத்தப்பட்ட மாஸ்டர் ஷூட்டிங்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை- நிறுத்தப்பட்ட மாஸ்டர் ஷூட்டிங் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், விசாரணை செய்த பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலம் உட்பட பல இடங்களில் ஐடி ரெய்டு நடந்துவரும் நிலையில், பிகில் ...