கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு – பஸ்கள் வழக்கம்போல் இயங்கின!
கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு - பஸ்கள் வழக்கம்போல் இயங்கின!
கோவை மாவட்டத்தில் மெல்ல, மெல்ல குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடக்கூடிய வீதிகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று கோவை கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, காந்திபுரம் 5,6,7-வது வீதிகள், ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை(ராயல்நகர் சந்திப்பு), ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி க...









