சிம்புவின் “ஈஸ்வரன்” பாம்பு கிராபிக்ஸ் ஆதாரங்களை கேட்ட வனத்துறை!
ஈஸ்வரன் படத்தில் சிம்பு வைத்திருப்பது கிராபிக்ஸ் பாம்பு தான் என கூறிய இயக்குனர் சுசீந்திரனிடம் அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு வனத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது நடித்து வரக்கூடிய புதிய தமிழ் திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டரிலேயே சிம்பு கழுத்தில் பாம்பு இருப்பது போன்றும் அதை சிம்பு கைகளால் பிடித்து இருப்பது போலவும் ஒரு புகைப்பட பதிவு வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும், வனத்துறை மத்தியில் இது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அது போல ஒரு வீடியோ ஒன்றும் வெளியாகியது, அதாவது மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய பாம்பை சிம்பு கையால் பிடித்து சாக்கு பையில் போடக்கூடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் வைரல் ஆகியது. இந்நிலையில் வனவிலங்குகளை துன்புறுத்துவதாக கூறி...








