’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்வில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் நடராஜ் பிள்ளை பேசியதாவது, “கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து பீப்பிள் மீடியா ஃபேக்டரி இயங்கி வருகிறோம். இந்த ஏழு வருடங்களில் தெலுங்கில் ’கார்த்திகேயா2’, ‘வெங்கி மாமா’, ‘நிசப்தம்’ என நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளோம். இப்போது தமிழிலும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் மூலம் இங்கு வந்திருக்கிறோம். எங்கள் தயாரிப்பாளர் விஸ்வா தெலுங்கில் மட்டுமல்ல பல மொழிகளிலும் படங்கள் தயாரித்துள்ளார். ’வடக்குப்பட்டி ராமசாமி’ படக்குழுவினருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்”.
நடிகர் சந்தானம் பேசியதாவது, “பீப்பிள் மீடியா ஃபேக்டரி தெலுங்கில...









