செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27
Shadow

MOVIES

நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் வெப் தொடர் “வர்ண கதைகள்”..!

நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் வெப் தொடர் “வர்ண கதைகள்”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, TV news, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் வெப் தொடர் " வர்ண கதைகள் " ஓவிய கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாகும் ஃபேன்டஸி வெப் தொடர் " வர்ண கதைகள் " ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார். பிரஜ்ஜன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள " இறப்பின் ரகசியம் " படத்தை இயக்கிய இமானுவேல் இந்த வெப் தொடரை கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இந்த வெப் தொடரில் மாறன், சென்ராயன், ஜெயச்சந்திரன், ப்ரணா, RJ புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் நித்யா Queen, ரோஹிந்த், தீபா ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நடிகர்களை சாராத ஒரு முக்கிய கதாபாத்திரம் இந்த வெப் தொடரில் இடம்பெறும். அது தமிழ் ரசிகர்களுக்கு எதிர்பாராத புதிய அனுபவமாக இருக்கும். அஷ்வின...
நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன், நடிகர் பரத் இருவரும் இணையும் புதிய திரைப்படம்!

நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன், நடிகர் பரத் இருவரும் இணையும் புதிய திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் – டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் M. குரு இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் புதிய திரைப்படம்! தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 21) பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் (TWIN TOWER PRODUCTIONS) மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP (D CHRONICLE PRODUCTIONS LLP) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் M. குரு எழுதி இயக்குகிறார். நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட்,வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகிற...
கேரளாவின் சோட்டானிக்கரை கோவிலில் வெளியிடப்பட்ட ஆர். கண்ணன் இயக்கத்தில் ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும்ஹாரர் த்ரில்லர் படத்தின் தலைப்பு  ‘யட்சிணி’!

கேரளாவின் சோட்டானிக்கரை கோவிலில் வெளியிடப்பட்ட ஆர். கண்ணன் இயக்கத்தில் ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும்ஹாரர் த்ரில்லர் படத்தின் தலைப்பு ‘யட்சிணி’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆர். கண்ணன் இயக்கத்தில் ஹன்ஷிகா மோத்வானி நடிக்கும் ஹாரர் த்ரில்லர் ‘யட்சிணி’! கேரளாவின் சோட்டானிக்கரை கோவிலில் வெளியிடப்பட்ட படத்தின் தலைப்பு – திரைப்படம் டிசம்பரில் வெளியாகிறது! இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் புதிய ஹாரர் த்ரில்லர் திரைப்படத்திற்கு ‘யட்சிணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சோட்டானிக்கரை கோவிலில் வெளியிடப்பட்டுள்ளது. மர்மம், திகில் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், ஹாரர் த்ரில்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்குப் படங்களையும், இளைஞர்களைக் கவரும் கமர்ஷியல் திரைப்படங்களையும் வழங்கியவர் இயக்குநர் ஆர். கண்ணன். ‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘ச...
இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ் சுயாதீன இசையமைப்பாளராக அறிமுகம்!

இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ் சுயாதீன இசையமைப்பாளராக அறிமுகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, songs, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ் சுயாதீன இசையமைப்பாளராக அறிமுகம்! தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் மகளும், பின்னணிப் பாடகியுமான ஜனனி பரத்வாஜ், தற்போது இசையமைப்பாளராக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். 25-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ள ஜனனி, அசல் படத்தின் ‘Tottadaing’, ஐயா படத்தின் ‘Athiri Pathiri’, பள்ளிக்கூடம் படத்தின் ‘Indha Nimidam’, பிறப்பு படத்தின் ‘Ulaga Azhagi Naan Dhan’ உள்ளிட்ட பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர். தற்போது கனடாவில் வசித்து வரும் ஜனனி, பின்னணிப் பாடகியாக மட்டுமின்றி, தனது சொந்த இசைப் படைப்புகள் மூலம் சுயாதீன இசை உலகிலும் புதிய தடம் பதிக்கத் தயாராகி வருகிறார். Divo Music உடன் இணைந்து தனது முதல் சுயாதீன இசை முயற்சியைத் தொடங்கியுள்ள ஜனனி, இதன் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். இ...
அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்!

அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’, அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ வெற்றிப் படங்களைத் தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம் அமெரிக்காவில் வசிக்கும் கணேஷ் ரகு, தனது அபராஜீத் பிலிம்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ படத்தை தயாரித்து மிக பிரம்மாண்டமான வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். தொடர்ந்து, பாலாவின் உதவி இயக்குநர் அமீரை சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் செய்து, அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கத்தில், புதிய படம் ஒன்றை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் அபராஜீத் பிலிம்ஸ் பேனரி...
துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT)

துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT)

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் 'ஏ ஒ டி' (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது! பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், 'ஏஒ டி' (AOT) திரைப்படத்தின் மூலம் தனது அகில இந்திய அளவிலான ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்துகிறார். தனித்துவமான கதை சொல்லும் முறையாலும், வழக்கத்திற்கு மாறான திரைப்பட உருவாக்க அணுகுமுறையாலும் அறியப்படும் பவன் சாதினேனி இப்படத்தை இயக்கியுள்ளார். கீதா ஆர்ட்ஸ் (Geetha Arts )  மற்றும் ஸ்வப்னா சினிமா (Swapna Cinema )  வழங்கும் இப்படத்தை, லைட்பாக்ஸ் மீடியா (Lightbox Media) சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது பங்களிப்பு படத்திற்கு மேலும் நட்சத்திர அந்தஸ்தையும், ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எ...
சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’ படப்பிடிப்பு நிறைவு

சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’ படப்பிடிப்பு நிறைவு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு’! (Sambarala Yeti Gattu)  160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவு! மெகா சூப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் (Sai Durgha Tej) , இயக்குநர் ரோஹித் KP(Rohith KP) , K. நிரஞ்சன் ரெட்டி (K Niranjan Reddy) மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோரின் கூட்டணியில், பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் (Primeshow Entertainment’s ) மிகப் பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமான ‘SYG’ (‘சம்பராலா ஏடி கட்டு’) படத்தின் 160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற தீவிரப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரோஹித் KP இயக்கத்தில் உருவாகும் ‘சம்பரலா ஏடி கட்டு’ படப்பிடிப்பு நிறைவு! ஜனவரி 12, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது! மெகா சூப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில்...
டிரோன்ஸ் — வித்தியாசமான ஐடியா… கோடங்கி விமர்சனம்  2.5/5

டிரோன்ஸ் — வித்தியாசமான ஐடியா… கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  டிரோன்ஸ் — வித்தியாசமான ஐடியா… கொஞ்சம் தடுமாறும் திரைக்கதை! கோடங்கி விமர்சனம் | ⭐ 2.5/5 சினிமாவில் பேய் வந்தால் பயப்பட வேண்டும்… தேவதை வந்தால் ரசிக்க வேண்டும்… விஞ்ஞானி வந்தால் ஏதாவது புதுசாகச் செய்வார் என்று எதிர்பார்க்க வேண்டும்! ஆனால் இந்த டிரோன்ஸ் படத்தில் யார் தேவதை, யார் சூனியக்காரி, யார் விஞ்ஞானி என்று புரிந்துகொள்வதற்குள் இடைவேளையே வந்துவிடுகிறது! கல்லூரியில் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் மூன்று நண்பர்கள், ஒரு மர்மமான ஆய்வுக்கூடம், வித்தியாசமான விஞ்ஞானி, தேவதை போன்ற தோற்றத்தில் வரும் சித்தி இத்னானி, சூனியக்காரியாக மிரட்ட முயற்சிக்கும் தேவதர்ஷினி… இப்படிப் பல விசித்திரமான விஷயங்களைக் கலந்து ஒரு ஃபேண்டஸி ஹாரர் காமெடி விருந்து கொடுக்க இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார். நடிப்பு எப்படி? டிராவிட் செல்வம்: பரிதாபங்கள் மூலம் அறிமுகமான டிராவிட், கதாநாயகனாகத் தன்னை நிரூ...
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு - ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் தென்காசியில் தொடங்கியது. அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தில் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை ஜெயச்சந்திரனும், படத்த...
விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு! இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slum Dog: 33 Temple Road) திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. பூரி கனெக்ட்ஸ் (Puri Connects) நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரித்துள்ள இப்படம், ஏற்கெனவே வெளியான விளம்பரங்கள் மற்றும் முன்னோட்டங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் விறுவிறுப்பான திரைமொழிக்குப் பெயர் பெற்ற...