இரு மொழிகளில் முதல் படத்தை தொடங்கிய மஹிந்திரா பிக்சர்ஸ்!
*மஹிந்திரா பிக்சர்ஸ் முதல் படம் ஆரம்பமானது!*
சினிமா ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு மஹிந்திரா பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் புதிய நம்பிக்கையுடன் திரைப்படத் துறையில் நுழைந்தது. இந்த நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முதல் முயற்சியாக வித்தியாசமான சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வல்லூரி ஸ்ரீனிவாச ராவ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சின்னா வெங்கடேஷ் இயக்குகிறார். சாய் கார்த்திக் ஜாடி தமிழில் வழங்குகிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் வல்லூரி சீனிவாச ராவ் கூறியதாவது.. 'வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையை தேர்வு செய்துள்ளோம். மேலும்.. இது ஒரு அழகான காதல் படமும் கூட. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயார...









