வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

MOVIES

திரைப்படமாக வெளியாகும்  நடிகை “ஷகிலா” வாழ்க்கை!

திரைப்படமாக வெளியாகும் நடிகை “ஷகிலா” வாழ்க்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பெரும்புகழ் நடிகை “ஷகிலா” வாழ்க்கை திரைப்படமாக வெளியாகிறது ! “ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம். 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா. உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது. அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, காம படங்களில் நடித்ததற்காக, குடும்தினராலேயே புறக்கணிக்கப்பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டும...
தெலுங்கு அசுரன் டீசர் அப்செட் ஆன ஜி.வி.பிரகாஷ்

தெலுங்கு அசுரன் டீசர் அப்செட் ஆன ஜி.வி.பிரகாஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு அசுரன் டீசர் அப்செட் ஆன ஜி.வி.பிரகாஷ் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான் திரைப்படம் அசுரன். தனுஷின் சினிமா கேரியரில் மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் 100 கோடி அளவுக்கு வசூலானது என சொல்லப்பட்டது . இந்த படத்தின் வெற்றி பிற மொழி தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க இப்போது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் உருவாகியுள்ளது அசுரன். தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு அவர்களுடன் இணைந்து இந்த படத்தை தெலுங்கில் தயாரிக்கின்றார் தாணுவே தயாரித்துள்ளார். மணிசர்மா இசையமைக்கிறார். இந்நிலையில் அந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் நடிகை பிரியா மணி நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்...
“புரட்சித் தலைவரின் அழகும், வசீகரம் என் முகத்தில்” – அரவிந்த்சாமி நன்றி

“புரட்சித் தலைவரின் அழகும், வசீகரம் என் முகத்தில்” – அரவிந்த்சாமி நன்றி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தற்போது ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி படத்தில் அரவிந்த் சாமி, எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் தன்னுடைய தலைவி படத்தின் கடைசி நாள் புகைப்படத்தை வெளியிட்டார். அதேபோல் அரவிந்த் சாமி எம்ஜிஆர் ஆக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இறுதி நாள் படப்பிடிப்பில் புகைப்படத்தை வெளியிட்டு மேக்கப் மேனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். "புரட்சித் தலைவரின் அழகுக்கும், வசீகரத்துக்கும் எவ்வளவு பக்கத்தில் என்னைக் கொண்டுபோக முடியுமோ அவ்வளவு பக்கத்தில் கொண்டுபோக, இந்த மனிதர் தனது மாயாஜாலத்தை, இந்தப் படப்பிடிப்பில் கடைசி முறையாக என் முகத்தில் காட்டுகிறார். நன்றி ரஷீத் சார், கடைசி நாள் படப்பிடிப்பு #தலைவி'. என்று சமூ...
மிஷ்கின் படத்தின் அழகிய பேய்!

மிஷ்கின் படத்தின் அழகிய பேய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  2014-ல் வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. முருகானந்தம் தயாரிக்க மிஷ்கின் இயக்குகிறார். படப்பிடிப்பு வேலைகளை தொடங்கி உள்ளனர். பேய் கதையம்சத்தில் தயாராகிறது. இதில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூர்ணா பேயாக நடிப்பதாக தெரிகிறது. முதல் பாகத்தை விட அதிக திகில் காட்சிகள் இதில் இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய சவரக்கத்தி படத்தில் பூர்ணா நடித்துள்ளார். திண்டுக்கல்லில் அரங்குகள் அமைத்து பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்துகிறார்கள். நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஏற்கனவே பேயாக நடித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது....
வில்லி வேடத்தில் சமந்தா!

வில்லி வேடத்தில் சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா நடிப்பில் கடந்த வருடம் 4 படங்கள் வந்தன. இந்த வருடம் பிப்ரவரியில் ஜானு என்ற ஒரு தெலுங்கு படம் மட்டுமே வெளியானது. கொரோனாவால் புதிய படங்களில் நடிக்க முடியாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் மனோஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ் ஆகியோர் நடித்து வெளியான தி பேமிலி மேன் வெப் தொடரின் இண்டாவது சீசனில் சமந்தா நடித்துள்ளார். இந்த தொடர் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது இதில் தனது நடிப்பு குறித்து சமந்தா கூறும்போது, “என்னை குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இது வேறுமாதிரி இருக்கும். பல விதிமுறைகளை உடைத்து இருக்கிறேன்” என்றார். இந்த தொடரில் அவர் வி...
திரிஷா பட சிங்கிள் ட்ராக்கை வெளியிட்ட பிரபலம்

திரிஷா பட சிங்கிள் ட்ராக்கை வெளியிட்ட பிரபலம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “ராங்கி”.  சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். நடிகை திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இயக்குனர்  A.r.Murgadoss இப்படத்தின் கதையினை எழுதியுள்ளார். இப்படத்தினை இயக்கி உள்ளார் இயக்குனர் M. சரவணன். இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் C.சத்யா. இத்திரைப்படத்தின் first single track “பனித்துளி விழுவதால் அணையாது தீபம்” பாடலை  கபிலன் எழுதியுள்ளார். பிரபல பாடகி  சின்மயி பாடியுள்ளார் நடிகர்  சிவகார்த்திகேயன் இப்பாடலை இன்று மாலை  தனது Twitter ல் வெளியிட்டார்   https://www.youtube.com/watch?v=RZMi6ANmhek&feature=emb_logo...
ஊரடங்குக்கு நன்றி சொன்ன ஜெய்!

ஊரடங்குக்கு நன்றி சொன்ன ஜெய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்பு நடித்துள்ள 'ஈஸ்வரன்' படத்துக்கு முன்பாக, ஜெய் நடித்துள்ள படத்தை இயக்கி முடித்துள்ளார் சுசீந்திரன். ஷிவ ஷிவா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடித்துள்ளார். சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள்தாஸ், இயக்குநர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் ஜெய்யுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் ஜெய். மேலும், இந்தப் படத்துக்காகத் தனது உடலமைப்பையும் மாற்றி நடித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் கூறியிருப்பதாவது: "கமல் சார் 'மருதநாயகம்' படத்துக்காக உடலை மாற்றியதுபோல நான் என் உடலமைப்பை மாற்றவில்லை. நான் செய்ததெல்லாம் ஒல்லியாகத் தெரிய, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினேன். முதல் முறையாக திரையில் வேட்டி கட்டியதும் இந்தப் படத்துக்காகத்தான். நன்றாக இருந்தது. எனது சிறு வயதில் ...
எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் – பார்த்திபன்

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் – பார்த்திபன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா இன்று அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெற்றது. கடந்த 2019 ஆண்டில் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்.  தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள். நடிகர்கள் என்பதால் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என பேசினார்....
OTT தளத்தில் வெளியாகிறது மாதவனின் ‘மாறா’

OTT தளத்தில் வெளியாகிறது மாதவனின் ‘மாறா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2015-ம் ஆண்டு மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சார்லி. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா இணைந்து, பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரித்துள்ளனர். திலீப் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷிவதா, மௌலி, அலெக்ஸாண்டர் பாபு, எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், கிஷோர் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தான் குழந்தையாய் இருக்கும் போது, கடலோர நகரம் ஒன்றின் சுவரில் வரையப்பட்ட ஓவியத்தை வைத்து அந்நியர் ஒருவர் சொன்ன கதையக் கேட்கிறாள் பாரு. அவள் வளர்ந்த பின் அந்த ஓவியத்தை வரைந்த மாறாவைத் ...
திருமணத்துக்குப் பின் கணவருடன் ‘ஆச்சார்யா’ ஷூட்டிங் வந்த காஜல்… சிறப்பாக வரவேற்ற சிரஞ்சீவி!

திருமணத்துக்குப் பின் கணவருடன் ‘ஆச்சார்யா’ ஷூட்டிங் வந்த காஜல்… சிறப்பாக வரவேற்ற சிரஞ்சீவி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
திருமணத்துக்குப் பின் கணவருடன் ஷூட்டிங் வந்த காஜல் அகர்வால் - வரவேற்ற சிரஞ்சீவி அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு - காஜல் அகர்வால் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் காஜல் - கிச்லு தம்பதி மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றிருந்தனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். திருமணத்துக்குப் பின் கணவருடன் படப்பிடிப்புக்கு வந்த காஜல் அகர்வாலுக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு முன்னர் இந்தியன் 2, ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வந்தார் காஜல் அகர்வால். இந்நிலையில் தேனிலவை முடித்த காஜல் அகர்வால் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பில் இன்று இணைந்தார் காஜல் அகர்வால் உடன் அவரது கணவர் கிச்லுவும் வந்திருந்தார். இருவரையும் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்க...