கண்ணன் இயக்கத்தில் இரண்டு ஜோடிகளுடன் ஆட்டம் போடும் சந்தானம்..!
இரண்டு ஜோடிகளுடன் சந்தானம்.
R.கண்ணன் இயக்கும் புதிய படம் !
Masala pix , M K R P Productions இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி ( Tara Alisha berry ) நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியா நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா ( Swathi Muppala ) அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தினை- ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை ...









